துவக்கப் பாளம்
Appearance
துவக்கப்பாளங்கள் (Starting blocks) என்பவை தடகள விளையாட்டுக்களில் விரைவோட்ட வீரர்களால், பந்தயத்தின் தொடக்கத்தில் பாதங்களை ஊன்றி வைக்கப் பயன்படும் கருவியாகும். இவை பந்தயத்தின் துவக்கத்தில் துவக்க துப்பாக்கி ஒலி கேட்டவுடன் வீரர்களின் பாதம் பிடி தளராமல் உந்த உதவும். பெரும்பான்மையாக சர்வதேச போட்டிகள் உட்பட, எல்லா நிலைப் போட்டிகளிலும் இப்போது துவக்கப் பாளங்கள் விரைவோட்டப் பந்தயங்களின் துவக்கத்திலும் கட்டாயமாக இடம்பெறுகின்றன.[1]