துள்ளூர்
துள்ளூர் Thulluru | |
|---|---|
| ஆள்கூறுகள்: 16°31′39″N 80°28′05″E / 16.5275°N 80.4681°E | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
| Region | கடற்கரை ஆந்திரா |
| மாவட்டம் | குண்டூர் |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 14.92 km2 (5.76 sq mi) |
| ஏற்றம் | 27 m (89 ft) |
| மக்கள்தொகை (2011)[3] | |
| • மொத்தம் | 7,794 |
| • அடர்த்தி | 520/km2 (1,400/sq mi) |
| மொழிகள் | |
| • அலுவல் | தெலுங்கு |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 522 237 |
| இந்தியாவில் தொலைபேசி எண்கள் | +91–8645 |
| வாகனப் பதிவு | ஆபி-07 |
துள்ளூர் (Thullur) என்பது இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.[4] கிருட்டிணா நதியிலிருந்து 4 கி.மீ தொலைவில் இக்கிராமம் அமைந்துள்ளது. குண்டூர் மாவட்டத்தில் உள்ள துள்ளூர் மண்டலத்தின் தலைமையகம் துள்ளூர் ஆகும். அருகிலுள்ள நகரமான மங்களகிரியிலிருந்து 21 கி.மீ தொலைவில் இக்கிராமம் அமைந்துள்ளது. ஒரு கிராம பஞ்சாயத்தாக அறிவிக்கப்படுவதற்கு முன்பு குண்டூர் மாவட்டத்தின் துள்ளூர் மண்டலத்தில் ஒரு கிராமமாக இக்கிராமம் இருந்தது.[1][5]
மக்கள் தொகையியல்
[தொகு]2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த நகரத்தின் மக்கள் தொகை 7,794 ஆகும். இத்தொகையில் ஆண்கள் 3,865 பேராகவும், பெண்கள் 3,929 பேராகவும் இருந்தனர். 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மக்கள் தொகை 700 ஆகும். சராசரி கல்வியறிவு விகிதம் அப்போது 69.44 சதவீதமாக இருந்தது. 4,925 பேர் கல்வியறிவு பெற்றவர்களாக இருந்தனர்.[3]
போக்குவரத்து
[தொகு]விசயவாடா மற்றும் அமராவதி வழித்தடத்தில் துள்ளூர் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்கு விசயவாடா பேருந்து நிலையம் மற்றும் குண்டூர் பேருந்து நிலையத்திலிருந்து ஆந்திரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் நகர பேருந்து சேவைகள் சேவை செய்கின்றன.[6] தற்போது தலைமைச் செயலகத்திற்கு சேவை செய்ய துள்ளூர் வழியாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளன.
கல்வி
[தொகு]இங்குள்ள மக்களுக்கு தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிக் கல்வியை, மாநிலப் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு, உதவி பெறும் தனியார் பள்ளிகள் வழங்குகின்றன.[7][8] வெவ்வேறு பள்ளிகளால் பின்பற்றப்படும் பயிற்று மொழியாக ஆங்கிலமும், தெலுங்கும் உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "District Census Handbook - Guntur" (PDF). Census of India. p. 14,258. Retrieved 6 June 2016.
- ↑ "Elevation for Pedakurapadu". Veloroutes. Retrieved 1 August 2014.
- ↑ 3.0 3.1 "Census 2011". The Registrar General & Census Commissioner, India. Retrieved 26 July 2014.
- ↑ "New Andhra capital Amaravati to compete for Smart City tag". The New Indian Express. 25 May 2016 இம் மூலத்தில் இருந்து 26 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160526185229/http://www.newindianexpress.com/states/andhra_pradesh/New-Andhra-capital-Amaravati-to-compete-for-Smart-City-tag/2016/05/25/article3450012.ece. பார்த்த நாள்: 6 June 2016.
- ↑ "Declaration of A.P. Capital City Area–Revised orders" (PDF). Andhra Nation. Municipal Administration and Urban Development Department. 22 September 2015. Archived from the original (PDF) on 24 June 2016. Retrieved 21 February 2016.
- ↑ "RTC to introduce bus services in Guntur city". Deccan Chronicle. 26 November 2014. https://www.deccanchronicle.com/141126/nation-current-affairs/article/rtc-introduce-bus-services-guntur-city.
- ↑ "School Education Department" (PDF). School Education Department, Government of Andhra Pradesh. Archived from the original (PDF) on 7 November 2016. Retrieved 7 November 2016.
- ↑ "The Department of School Education - Official AP State Government Portal | AP State Portal". www.ap.gov.in. Archived from the original on 7 November 2016. Retrieved 7 November 2016.
