துளை மேடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துளை மேடையானது இடது புறத்தில் உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது. நடுவில் உள்ள படம் வாயு உள்நுழையும் குழாய் மற்றும் துளையின் வழிசென்று குமிழ்கள் உருவாவதைக் காட்டுகிறது. வலதுபக்கத்தில் உள்ள படம்  வாயுத்தாழியில் அமைக்கப்பட்டுள்ள பயன்பாட்டில் உள்ள துளைமேடையைக் காட்டுகிறது.

துளை மேடை (Beehive shelf) என்பது ஆய்வுகூடத்தில் உள்ள  ஒரு சாதனமாகும். இது வாயுத்தாழியின் மீது கவிழ்த்து வைக்கப்படும் வாயுவை சேகரிக்கும் சாடியைத் தாங்கிப்பிடிக்கவும்,  வாயுவைக் கொண்டுவரும் குழாயை இணைக்கவும் பயன்படக்கூடிய, துணை செய்யும் அமைப்பாக இது உள்ளது.

வரலாறு[தொகு]

இஸ்கெப் எனப்படும் புல்வகையிலிருந்து உருவாக்கப்பட்ட ஆரம்ப கால தேன்கூடுகளின் வடிவத்திலிருந்து இந்தப் பெயர் தோன்றியுள்ளது.  தட்டையான சக்கர வடிவினை உருவாக்குவதற்காக, புற்கட்டுக்களை இணைத்து வட்ட வடிவமான ஒரு அமர்விடம் உருவாக்கப்பட்டது. அதே வகையான புற்களைப் பயன்படுத்தி பக்கச்சுவர்களும் எழுப்பப்பட்டன. தேனீக்கள் கூட்டின் உள்ளே செல்வதற்கும், கூட்டிலிருந்து வெளியே வருவதற்கும் ஒரு பாதை உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பை நினைவுபடுத்துவதாகவே, ஆய்வுக்கூடத்தில் பயன்படும் துளைமேடை அமைந்துள்ளது.

கூடுதல் வாசிப்புக்காக[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துளை_மேடை&oldid=3502688" இலிருந்து மீள்விக்கப்பட்டது