துளசி (நடிகை)
துளசி | |
---|---|
பிறப்பு | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1967-தற்போது |
துளசி (அல்லது துளசி சிவமணி) என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் முதன்மையாக தெலுங்கு, கன்னடம், தமிழ் திரைப்படங்களில் பணிபுரிந்தார். இவர் முன்னணி நடிகையாகவும், பின்னர் துணை நடிகை பாத்திரங்களிலும் தோன்றியுள்ளார்.[1] இவர் தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம், போச்புரி மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[2] இவர் இரண்டு நந்தி விருதுகளையும் ஒரு பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார்.
தொழில்
[தொகு]துளசி 1967இல் மூன்று மாத குழந்தையாக இருந்த போது தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு, குழந்தை ஒன்று தேவைப்பட்டது. அப்போது நடிகை சாவித்ரி தன் தோழியான துளசியின் தாயிடம் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து, துளசி தொட்டிலில் படுக்கவைக்கப்பட்டார்.[3] ஜீவனதரங்கலு படத்தில் 31⁄2 வயதில் ஒரு பாடலில் இடம்பெற்றார். பின்னர் தான் நான்கு வயதில் முழு அளவிலான நடிகையாக ஆனதாக கூறினார்.[3]
இவர் தன் 28 வயதில் கன்னட இயக்குநர் சிவமணியை திருமணம் செய்து கொண்டார்.[2] அவர் கூறுகையில்,"நான் அவரை காலையில் சந்தித்தேன், மாலையில் அவருக்கு கழுத்தை நீட்டினேன்".[4] இவர்களுக்கு சாய் தருண் என்ற ஒரு மகன் உள்ளார். துளசி திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்தினார். மணிரத்னம் உள்ளிட சிலரின் படங்களிலும் தெலுங்கு படங்களிலும் அவ்வப்போது குரல் நடிகையாக மட்டுமே பணியாற்றினார்.[1] இவரது மகனுக்கு ஆறு வயது ஆன பிறகு, இவரைத் தேடி பல தாய் கதாபாத்திரங்களை் வந்தன. ஆனால் இவர் துவக்கத்தில் அனைத்தையும் மறுத்துவிட்டார். கடைசியாக எக்ஸ்க்யூஸ் மீ என்ற கன்னட படத்தில் ஒப்பந்தமானார், அதில் இவர் திவ்ய ஸ்பந்தனாவுக்கு அம்மாவாக நடித்தார், அது பெரிய வெற்றியைப் பெற்றது. .[2] அதன் பிறகு கன்னடத்தில் வருடத்திற்கு மூன்று படங்கள் நடித்து வந்தார்.
இவர் முக்கியமாக தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் அம்மா வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். இவரது குறிப்பிடத்தக்க துணைப் பாத்திரங்களாக தெலுங்கில் சசிரேகா பரிநயம், மிஸ்டர் பெர்பெக்ட், டார்லிங், சீமந்துடு, இதரம்மாயில்தோ, நேனு லோக்கல், மகாநடி, டியர் காம்ரேட் போன்ற படங்களும், தமிழில் பிள்ளையார் தெரு கடைசி வீடு, ஈசன், மங்காத்தா, சுந்தரபாண்டியன், ஆதலால் காதல் செய்வீர் , பாண்டிய நாடு ஆகிய படங்கள் குறிப்பிடதக்க படங்களாக இருந்தன. மனிஷா யாதவ் கதாபாத்திரத்துக்கு, தாயாக நடித்த ஆதலால் காதல் செய்வீர், தனது வாழ்க்கையை மாற்றி, திரைத் தாயாக அடையாளத்தை கொண்டு வந்ததாக துளசி கூறியுள்ளார்.[2] பண்ணையாரும் பத்மினியும் படத்தில் செல்லம்மாவாக இவரது நடிப்பு பாராட்டுகளைப் பெற்றது,[1] இவரை "புத்திசாலி"என்று விமர்சகர்கள் கூறினர்,[5][6] மேலும் இவரது "தொழில் வாழ்கையில் சிறந்த நடிப்பை" வழங்னார் என்று பாராட்டுகளைப் பெற்றார்.[7]
பகுதி திரைப்படவியல்
[தொகு]ஆண்டு | படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
1967 | பார்யா | தெலுங்கு | ||
1973 | அரங்கேற்றம் | தமிழ் | ||
1977 | சில்லறகோட்டு சித்தம்மா | தெலுங்கு | ||
1978 | சீதாமாலகட்சுமி | தெலுங்கு | ||
1979 | சங்கராபரணம் | சங்கரம் | தெலுங்கு | |
கோத்தல ராயுடு[8] | சத்யத்தின் மருமகள், பாப்பா | தெலுங்கு | ||
1981 | நியாயம் காவாலி | பத்மா | தெலுங்கு | |
முத்த மந்த்ரம் | தெலுங்கு | |||
ராம தண்டு | தெலுங்கு | |||
1982 | இத்தரு கொடுக்குலு | பத்மா | தெலுங்கு | |
பக்த துருவ மார்க்கண்டேயா | தெலுங்கு | |||
ஜகன்னாத ரதசக்கராலு[9] | லட்சுமி | தெலுங்கு | ||
சகலகலா வல்லவன் | தமிழ் | |||
திரிசூலம் | தெலுங்கு | |||
நாலுகு ஸ்தம்பலாட்டா | தெலுங்கு | |||
சுபலேகா | லட்சுமி | தெலுங்கு | ||
1983 | மகா மகராஜு | தெலுங்கு | ||
ஈ பிள்ளக்கு பெலவுதுண்டா | தெலுங்கு | |||
கொண்டே கொடல்லு | பாக்கியலட்சுமி | தெலுங்கு | ||
நெலவங்க | லலிதா | தெலுங்கு | ||
மந்திரி காரி வியன்குடு | சுசீலா | தெலுங்கு | ||
1984 | அனுபந்தம் | தெலுங்கு | ||
கொத்த தம்பத்துலு | தெலுங்கு | |||
நல்லவனுக்கு நல்லவன் | தமிழ் | |||
டிஸ்கோ கிங் | தெலுங்கு | |||
நாகபீகம்மா நாகபிக்கு | கன்னடம் | |||
இண்டின ராமாயணா | கன்னடம் | |||
1985 | பிரேமிஞ்சு பெல்லாடு | தெலுங்கு | ||
ரெச்சுக்கா | ரோஜா | தெலுங்கு | ||
ஸ்ரீ கட்ண லீலாலு[10] | ஜோதி | தெலுங்கு | ||
முச்சடகா முக்குரு | தெலுங்கு | |||
முக்குரு மித்ருலு | தெலுங்கு | |||
ஸ்ரீவாரு | ரஜனி | தெலுங்கு | ||
1986 | டிரைவர் பாபு | ராதா | தெலுங்கு | |
ஹென்னே நினகேனு பந்தனா | கன்னடம் | |||
பயம் பயம் | தெலுங்கு | |||
நா பிலுபே பிரபஞ்சனம் | காயத்திரி | தெலுங்கு | ||
ஆதிதம்பதுலு | தெலுங்கு | |||
பிறந்தேன் வளர்ந்தேன் | தமிழ் | |||
பூஜாகு பணிகிராணி பூவு | தெலுங்கு | |||
1987 | ஆரண்யகண்டா | நீலா | தெலுங்கு | |
தூரத்துப் பச்சை | தமிழ் | |||
தாம்பத்யம் | தமிழ் | |||
ராக லீலா | தெலுங்கு | |||
1988 | காஞ்சன சீதா | தெலுங்கு | ||
பிரம்மா விஷ்ணு மகேஸ்வரா | கன்னடம் | |||
ஜீவன கங்கா | தெலுங்கு | |||
1989 | சூ லகா டாக்கா | தெலுங்கு | ||
1990 | அலஜாடி | தெலுங்கு | ||
அப்பு | மலையாளம் | |||
1991 | அம்மா ராஜினாமா | தெலுங்கு | ||
1992 | கில்லர் | தெலுங்கு | ||
சித்திரம் பலரே விசித்திரம் | மீரா | தெலுங்கு | ||
1993 | கண்ணையா கிட்டையா | தெலுங்கு | ||
விந்த கோடல்லு | தெலுங்கு | |||
1994 | மகாநதி | மஞ்சு | தமிழ் | |
1994 | ரைத்து பாரதம் | தெலுங்கு | ||
2003 | எக்ஸ்கியூஸ் மீ | கன்னடம் | ||
2005 | யஷ்வந்த் | கன்னடம் | ||
ஜூட்டாட்டா | நந்தினி தேவி | கன்னடம் | ||
குன்னா | கன்னடம் | |||
2006 | சில்லாட | கன்னடம் | ||
செவந்தீ செவந்தீ | கன்னடம் | |||
ஹனிமூன் எக்ஸ்பிரஸ் | கன்னடம் | |||
சிரீவந்த | கன்னடம் | |||
ஜொதெ ஜொதெயலி | கன்னடம் | |||
2007 | பூஜாரி | கன்னடம் | ||
ஈ ப்ரீத்தி ஒந்தரா | கன்னடம் | |||
சவி சவி நெனப்பு | கன்னடம் | |||
2008 | மொக்கின மனசு | தீக்சிதாவின் தாய் | கன்னடம் | |
சங்கமா | கன்னடம் | |||
நீனியாரே | கன்னடம் | |||
2009 | சசிரேகா பரிணயம் | தெலுங்கு | ||
ராஜகுமாரி | கன்னடம் | |||
நா கேள்பிரண்ட் பாகா ரிச் | ஸ்ரவ்யாவின் தாய் | தெலுங்கு | ||
ஜோஷ் | சாரதாம்மா | கன்னடம் | சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது– கன்னடம் | |
மின்சு | கன்னடம் | |||
ராஜ் தி ஷோமேன் | கன்னடம் | |||
ரஜனி | கன்னடம் | |||
2010 | உல்லாச உத்சாகா | கமலா | கன்னடம் | |
புண்டா | கன்னடம் | |||
நஞ்சன்கூடு நஞ்சுண்டா | கன்னடம் | |||
சிஹி காலி | கன்னடம் | |||
ஈசன் | செழியனின் தாய் | தமிழ் | ||
டார்லிங் | ராஜேஸ்வரி | தெலுங்கு | ||
2011 | பிள்ளையார் தெரு கடைசி வீடு | தமிழ் | ||
மங்காத்தா | தமிழ் | |||
மிஸ்டர். பர்பெஃக்ட் | விக்கியின் தாய் | தெலுங்கு | ||
2012 | ராஜதானி | கன்னடம் | ||
ஜூலை | காமேஸ்வரி மூர்த்தி | தெலுங்கு | ||
பாகல் | கன்னடம் | |||
சுந்தர பாண்டியன் | அர்ச்சனாவின் தாய் | தமிழ் | ||
2013 | ஸ்திரீ சக்தி | கன்னடம் | ||
இதரம்மாயில்தோ | கோமளாவின் தாய் | தெலுங்கு | ||
ஆதலால் காதல் செய்வீர் | சுவேதாவின் தாயார் | தமிழ் | பரிந்துரை—சிறந்த துணை நடிகைக்கான விஜய் விருதுகள் | |
பாண்டிய நாடு | சிவமணி சிதம்பரம் | தமிழ் | ||
கதர்நாக் உமேஷ் ரெட்டி | கன்னடம் | |||
2014 | பண்ணையாரும் பத்மினியும் | செல்லம்மா | தமிழ் | சிறந்த துணை நடிகைக்கான தமிழக அரசின் திரைப்பட விருது |
அம்பரீசா | கன்னடம் | |||
நின்னிந்தாலே | கன்னடம் | |||
2015 | ஆம்பள | துளசி | தமிழ் | |
ஒரு வடக்கன் செல்ஃபி | அரியின் தாய் | மலையாளம் | ||
சீமந்துடு | நாராயண ராவின் மைத்துனி | தெலுங்கு | ||
கத்துக்குட்டி | அறிவழகனின் தாய் | Tamil | ||
ராம்லீலா | கன்னடம் | |||
ஆர்எக்ஸ் சூரி | கன்னடம் | |||
2016 | அம்மைதோ அப்பாயி | தெலுங்கு | ||
கல்பனா 2 | கன்னடம் | |||
விராட் | கன்னடம் | |||
சாகசம் | தமிழ் | |||
ஆறாது சினம் | அரவிந்தனின் தாய் | தமிழ் | ||
ஜீரோ | பிரியாவின் பக்கத்து வீட்டுக் காரர் | Tamil | ||
பிரம்மோத்ஸவம் | வரலட்சுமி | தெலுங்கு | ||
வாகா | வாசுவின் தாயார் | Tamil | ||
ஹைபர் | சூரியாவின் தாய் | தெலுங்கு | ||
மெட்ரோ | அறிவழகனின் தாய் | தமிழ் | ||
2017 | நேனு லோக்கல் | ஸ்ரீ | தெலுங்கு | |
ரோக் | தெலுங்கு கன்னடம் |
|||
நட்சத்திரம் | ராமாராவின் தாய் | தெலுங்கு | ||
மேடா மீடா அப்பாயி | சீனுவின் தாய் | தெலுங்கு | ||
நெஞ்சில் துணிவிருந்தால் | குமாரின் தாய் | தமிழ் | ||
கேர்/ஆப் சூர்யா | சூர்யாவின் தாயார் | தெலுங்கு | ||
ஓயே நின்னே | விஷ்ணுவின் தாய் | தெலுங்கு | ||
ரிச்சி | ராதா | தமிழ் | ||
2018 | நிமிர் | வள்ளியின் தாய் | தமிழ் | |
மகாநடி | மதுரவாணியின் தாயார் | தெலுங்கு | ||
ஆடகல்லு | முன்னாவின் தாய் | தெலுங்கு | ||
நீவேவரோ | கல்யாணின் தாய் | தெலுங்கு | ||
ஹேப்பி வெட்டிங் | அக்சராவின் தாய் | தெலுங்கு | ||
நன்னு தோச்சுகுண்டுவடே | மேகனாவின் தாய் | தெலுங்கு | ||
சர்கார் | எம். மாசிலாமணியின் மனைவி | தமிழ் | ||
2019 | டியர் காம்ரேட் | ஜெயாவின் தாயார் | தெலுங்கு | |
இஸ்மார்ட் சங்கர் | தெலுங்கு | |||
ஆர்டிஎக்ஸ் லவ் | கிராமவாசி | தெலுங்கு | ||
குயின் | ரங்கநாயகி | தமிழ் | வலைதொடர் | |
2020 | நாடோடிகள் 2 | ஜீவாவின் தாய் | தமிழ் | |
2021 | சஷி | ராஜாவின் தாய் | தெலுங்கு | |
மொசகல்லு | பத்மா | தெலுங்கு | ||
எஸ். ஆர். கல்யாணமண்டபம் | சாந்தி | தெலுங்கு | ||
நவரசா | கமலாவின் தாய் | தமிழ் | வலைத் தொடர் | |
எல்லாம் செரியாக்கும் | ஆன்சியின் தாய் | மலையாளம் | ||
அத்புதம் | வெண்ணைலாவின் பாட்டி | தெலுங்கு | ||
ஒக்க சின்ன பேமிலி ஸ்டோரி | ருக்மிணி | தெலுங்கு | வலைத் தொடர் | |
ஸ்கைலேப் | கௌரியின் தாய் | தெலுங்கு | ||
2022 | வீரமே வாகை சூடும் | போரஸ் மற்றும் துவாரகாவின் தாய் | தமிழ் | |
எப்3 | வெங்கியின் தாய் | தெலுங்கு | ||
கொண்டா | கொண்டா சின்னம்மா | தெலுங்கு | ||
கார்த்திகேயா 2 | கார்த்திகின் தாய் | தெலுங்கு | ||
தேங்யூ | அபியின் தாய் | தெலுங்கு | ||
வெந்து தணிந்தது காடு | துர்கா | தமிழ் | ||
நான் மிருகமாய் மாற | தமிழ் | |||
தமாகா | யசோதா ராவ் | தெலுங்கு | ||
அனுகோனி பிராயணம் | தெலுங்கு | |||
2023 | போலா சங்கர் | தெலுங்கு | ||
லாக்டவுன் டைரிஸ் | தமிழ் | |||
மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலிஷெட்டி | சித்துவின் அம்மாவும், பனீந்திராவின் மனைவியும் | தெலுங்கு | ||
சபா நாயகன் | தமிழ் | |||
2024 | ரத்னம் | மல்லிகாவின் தாய் | தமிழ் |
விருதுகள்
[தொகு]- சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது - கன்னடம் - ஜோஷ்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Rao, Subha J. (9 May 2015). "Chellamma chronicles Actress Tulasi". The Hindu.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Tulasi rocks in her third innings". The New Indian Express. 13 November 2013
- ↑ 3.0 3.1 Y. Sunita Chowdhary (9 July 2012). "My First Break: Tulasi". The Hindu.
- ↑ "Actress Tulasi – Prabhas Thinks I'm Hot". cinegoer.net. 10 August 2011
- ↑ "Pannaiyarum Padminiyum". Sify. Archived from the original on 7 June 2015.
- ↑ "Review: Pannaiyarum Padminiyum is refreshing". Rediff.
- ↑ "News18.com: CNN-News18 Breaking News India, Latest News Headlines, Live News Updates". News18. Archived from the original on 22 February 2014.
- ↑ "Kothala Rayudu Cast and Crew Info".
- ↑ Jagannatha Ratha Chakralu Full Movie - Krishna | Jayaprada | Jaggayya | Giribabu | V9 Videos (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2024-01-12
- ↑ "Sri Katna Leelalu Movie Cast".
- ↑ "నంది అవార్డు విజేతల పరంపర (1964–2008)" [A series of Nandi Award Winners (1964–2008)] (PDF). Information & Public Relations of Andhra Pradesh. பார்க்கப்பட்ட நாள் 21 August 2020. (in தெலுங்கு)