உள்ளடக்கத்துக்குச் செல்

துல்ஹன் ஹம் லே ஜாயேங்கே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துல்கன் ஹம் லே ஜாயேங்கே
दुल्हन हम ले जाएंगे
இயக்கம்டேவிட் தவான்
தயாரிப்புகோர்தன் தன்வானி
கதைரூமி ஜாஃப்ரி
இசைபாடல்கள்:
ஹிமேஷ் ரேஷாமியா
பின்னணி இசை:
சுரீந்தர் சோதி
நடிப்புசல்மான் கான்
கரிஷ்மா கபூர்
ஒளிப்பதிவுஅர்மீத் சிங்
படத்தொகுப்புடேவிட் தவான்
விநியோகம்பாபா ஆர்ட்சு
வெளியீடு24 மார்ச் 2000 (2000-03-24)
ஓட்டம்140 நிமி.
நாடுஇந்தியா
மொழிஇந்தி
ஆக்கச்செலவு₹11 கோடி[1]
மொத்த வருவாய்₹36.47 கோடி[1]

துல்கன் ஹம் லே ஜாயேங்கே (Dulhan Hum Le Jayenge, மொ.பெ. "நான் மணமகளை எடுத்துக்கொள்வேன்") டேவிட் தவான் இயக்கி சல்மான் கான், கரிஷ்மா கபூர் நடித்து 2000ஆம் ஆண்டு வெளியான இந்தி மொழிக் காதல் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும்.[2] இந்தப் படம் 2000ஆம் ஆண்டின் வணிக ரீதியாக அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாகும்.

திரைக்கதை

[தொகு]

சப்னா, தன்னை மிகவும் பாசமாக வளர்க்கும், ஆனால் விசித்திரமான குணம் கொண்ட மூன்று மாமாக்களால் வளர்க்கப்பட்டாள். அவர்களுள் ஒருவரான பிரபு மிகவும் மதப்பற்றுள்ள ஓர் இந்து ஆவார். இன்னொருவர் போலா ஒரு முன்னாள் மல்யுத்த வீரர். அவர் உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சப்னாவைத் தினமும் கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்ய வைக்கிறார். மூன்றாமவரான விக்கிக்கு அழகுக்கலையிலும் மேற்கத்திய இசையிலும் ஆர்வம் உண்டு. மாமாக்கள் அனைவரும் அவளுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் தங்களைப் போன்றே மணமகனுக்கும் ஆர்வங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புவதால், அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றன. தன் வாழ்நாள் முழுவதும் மாமாக்களின் விருப்பப்படியே வாழ்ந்து சலிப்படைந்த சப்னா, ஐரோப்பாவிற்கு ஒரு குழுப் பயணம் செல்ல விரும்புகிறாள். இருப்பினும், அவள் தன் விருப்பங்களை வீட்டு உதவிப்பெண்ணான மேரியிடம் தெரிவித்தபோது, சப்னாவுக்கு இதுபோன்ற முட்டாள்தனமான யோசனைகளைக் கூறியதற்காக அவளுடைய மாமாக்கள் அந்தப்பெண்ணை வேலையிலிருந்து நீக்கிவிடுகிறார்கள். வேறொரு குடும்பத்தில் வேலைக்குச் சேரும் மேரி சப்னாவின் அவல நிலையைப் பற்றி அவர்களிடம் கூறுகிறாள். அவள் சப்னாவின் புகைப்படத்தை அந்தக் குடும்பத்திலுள்ள ராஜா என்பவனுடன் பகிர்ந்து கொள்கிறாள். அவனோ இப்போது அவளைத் தன் மணமகளாக ஆக்கிக்கொள்ளத் தீர்மானித்துவிட்டான். இதற்கிடையில், சப்னா கடைசி முயற்சியாக ஓடிப்போக முயற்சிக்கிறாள். ஆனால் விக்கி அவளைப் பிடித்து, விமான நிலையத்திற்குத் தானே அழைத்துச் செல்ல முன்வருகிறான். இவ்வாறாக அவள் ஐரோப்பாவிற்குப் பயணிக்கிறாள். ஐரோப்பா முழுவதும் அவள் மேற்கொள்ளும் பயணங்களில், ராஜா அவளுக்குத் தொல்லைகளையே கொடுக்கிறான். ஆனால், சூழ்நிலைகள் அவர்களை மற்ற சுற்றுலாக் குழுவினரிடமிருந்து பிரிக்கின்றன. ஒரு கட்டத்தில் ராஜா சப்னாவின் உயிரைக் காப்பாற்றுகிறான். அவர்கள் காதலில் விழுகிறார்கள். இந்தியா திரும்பியதும் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார்கள். ஆனால், ராஜா முதலில் அவளுடைய மூன்று மாமாக்களையும் கவர வேண்டும். தொடர்ச்சியான நகைச்சுவையான நிகழ்வுகளின் மூலம், ராஜா அவர்களின் இதயங்களை வெல்கிறான். இறுதியில் அவனும் சப்னாவும் மகிழ்ச்சியாகத் திருமணம் செய்துகொள்கிறார்கள்.

இந்தக் கதை முன்னர் சுனில் தத், வஹீதா ரஹ்மான் நடித்த திரைப்படமான ஏக் பூல் சார் காண்டேயை அடிப்படையாகக் கொண்டது.

நடிகர்கள்

[தொகு]
  • சப்னா மீது காதல் ஆர்வம் கொள்ளும் ராஜா ஒபராய் கதாபாத்திரத்தில் சல்மான் கான்
  • சப்னாவாக கரிஷ்மா கபூர்
  • திரு. ஒபராய் வேடத்தில் காதர் கான்
  • சிரிக்கும் காவல் அதிகாரி அபய் கதாபாத்திரத்தில் சதீஷ் கவுசிக்
  • சுற்றுலா மேலாளர் சிர்குண்டாவாக ஜானி லீவர்
  • போலா நாத் கதாபாத்திரத்தில் ஓம் பூரி
  • பிரபு நாத் கதாபாத்திரத்தில் பரேஷ் ராவல்
  • விக்கி நாத் கதாபாத்திரத்தில் அனுபம் கெர்
  • கடத்தல்காரர் டாகாவாக தீபக் திஜோரி
  • லவ்லியாக கஷ்மேரா ஷா
  • திருமதி ஒபராய் வேடத்தில் ஃபரீதா ஜலால்
  • மேரி வேடத்தில் ஹிமானி சிவபுரி
  • சப்னாவின் தாத்தாவாக தாரா சிங்
  • செயலாளர்/புகைப்படக் கலைஞர் கௌசிக்காக ராகேஷ் பேடி
  • கடத்தல்காரரின் காதலியான அனிதாவாக உஷா பச்சானி
  • ராஜாவின் நண்பர் ராகுல் கதாபாத்திரத்தில் மயூர் வர்மா

ஒலிப்பதிவு

[தொகு]

இந்தத் திரைப்படத்திற்கு ஹிமேஷ் ரேஷாமியா இசையமைக்க, சுதாகர் ஷர்மா பாடல் வரிகளை எழுதினார். இது ஹிமேஷ் ரேஷாமியா இசையமைத்த முதல் முழு நீள பாலிவுட் திரைப்படமாகும். இது டிப்ஸ் மியூசிக் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இந்திய வர்த்தக வலைத்தளமான பாக்ஸ் ஆபிஸ் இந்தியாவின்படி, சுமார் 1.8 மில்லியன் பிரதிகள் விற்பனையாகின. இதன்மூலம் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அந்த ஆண்டின் எட்டாவது அதிக விற்பனையான ஆல்பமாக இருந்தது. [3]

# பாடல். பாடகர் (ssh)
1. "பியார் திலோன் கா மேலா ஹை" ஆல்கா யாக்னிக், சோனு நிகம்
2. "சாமியா" அல்கா யாக்னிக், சோனு நிகம்
3. "முஜ்ஸே ஷாதி கரோகி" குமார் சானு, அல்கா யாக்னிக், சுரேஷ் வாட்கர், சங்கர் மகாதேவன்
4. "தேரா பல்லு சர்கா ஜாயே ரே" சோனு நிகம், அல்கா யாக்னிக்
5. "தீர தீர சல்னா" அல்கா யாக்னிக், சோனு நிகம்
6. "ஓ மிஸ்டர் ராஜா" அல்கா யாக்னிக், சோனு நிகம்
7. "துல்ஹான் ஹம் லே ஜாயேங்கே" குமார் சானு, அல்கா யாக்னிக், சுனிதா ராவ்
8. "ஹாய் ந போலோ" அல்கா யாக்னிக், குமார் சானு

வரவேற்பு

[தொகு]

நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகையின் கே. என். விஜயன், "நகைச்சுவையும் வெளிநாட்டுக் காட்சிகளும் படத்தைக் காப்பாற்றுகின்றன" என்று எழுதினார்.[4] ரெடிப்.காம் இன் அபராஜித சஹா "இயக்குனர் டேவிட் தவானுக்கு எது வேலை செய்யும், எது செய்யாது என்பது நிச்சயமாகத் தெரியும். அவர் வணிக சினிமாவை விரும்புகிறார், அதைப் பற்றியும் பெருமிதம் கொள்கிறார்! மொத்தத்தில், துல்ஹான் ஹம் லே ஜாயேங்கே பார்ப்பதற்கு மதிப்புள்ளது." என்று எழுதினார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "Dulhan Hum Le Jayenge – Movie". Box Office India. Archived from the original on 20 September 2022. Retrieved 18 September 2022.
  2. ↑ "rediff.com, Movies: Review of Dulhan Hum Le Jayenge". ரெடிப்.காம். Archived from the original on 8 November 2022. Retrieved 23 August 2022.
  3. ↑ "Music Hits 2000–2009 (Figures in Units)". Box Office India. Archived from the original on 15 February 2008. Retrieved 20 December 2016.
  4. ↑ Vijiyan, K. N. (1 April 2000). "Dulhan Hum Le Jayange". New Straits Times. p. 3. Archived from the original on 19 January 2024. Retrieved 19 January 2024.
  5. ↑ Saha, Aparajita (25 March 2000). "Masala Mix". ரெடிப்.காம். Retrieved 30 December 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=துல்ஹன்_ஹம்_லே_ஜாயேங்கே&oldid=4583508" இலிருந்து மீள்விக்கப்பட்டது