துல்லிய பண்ணைத்திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குழித்தட்டு நாற்று தயாரிக்கும் முறை 
ஒரு குழித்தட்டில் 96 குழிகள் இருக்கும் 
ஒரு குழித்தட்டுநிரப்புவதற்கு கிட்டத்தட்ட ஒண்றரைக்கிலோ மக்கிய தென்னை நார்க்கழிவு உரம் தேவைப்படும் 
முதலில் ஒவ்வொரு குழிகளிலும் முக்கால் பாகம் அளவிற்கு மக்கிய தென்னை நார்கழிவு நிரப்பி பின்பு குழிக்கு ஒரே ஒரு விதை மட்டும் இட்டு மீண்டும் தென்னை நார்கழிவைபோட்டு நிரப்பி விட வேண்டும் 
இவ்வாறு கிட்டத்தட்ட ஒன்பது முதல் பத்துகுளித்தட்டுகளை  விதை போட்டு நிரப்பி பின்பு ஒன்றால் மேல் ஒன்றாக அடுக்கி பாலிதீன் உறைகொண்டு காற்றுமற்றும் ஒளி புகாதவாறு இறுக கட்டி இருட்டு அறையில் வைத்து விட வேண்டும் 
பின்பு ஆறு நாட்கள் கழித்துபிரித்து எடுத்தால் எல்லா குழிகளிலும் விதை முளைத்து வெளி வந்து இருக்கும் 
அனைத்துநாற்றுக்களை ஒரே சீரான வளர்ச்சியுடனும் மற்றும் வீரியத்துடனும் காணப்படும் 
பின்பு ஒவ்வொரு குளித்தட்டையும் நிழல் வலை குடிலுக்கு மாற்றவேண்டும் 
குழித்தட்டில் வளர்ந்த நாற்றுக்கள் வேர்கள் அனைத்தும் குளிகளுக்குள்ளேயேஇருப்பதால் வேர் வளர்ச்சி பாதிப்பு அடைவதில்லை 
நாற்றுக்களை ஒரு இடத்தில்இருந்து மற்றோர் இடத்துக்கு எடுத்து செல்வது எளிது 
உதாரணமாக ஒரு ஏக்கர் நடவு செய்ய அதாவது தக்காளி பயிருக்கு நூறு கிராம் விதை மட்டும் போதுமானது   ..
துல்லிய பண்ணைத்திட்டம் தமிழகத்தின் முன்னோடித் திட்டமாகும். சரியான நேரத்தில் சரியான முறையில் சரியான விவசாயிகள் கொண்டு இத்திட்டம் நடைமுறைப்பட்டுள்ளதால் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்டு பொலிக்கல் சயின்ஸ் என்ற உலக பிரசித்தி பெற்ற உயர்கல்வி நிறுவனம் இத்திட்டத்தினை இந்தியாவின் இரண்டாவது பசுமைப் புரட்சி என போற்றியுள்ளது.

வரையறை

  பயிர் உற்பத்தில் நவீன மற்றும் நுணுக்கமான தொழில் நுட்பங்களைக் கையாண்டு சிக்கனமான முறையில் தரமான விளை பொருட்களை உற்பத்தி செய்யும் செயலாக்கத் திட்டத்திற்கு துல்லிய பண்ணையம் என்று பெயர். துல்லிய குழு பண்ணையத்தின் முக்கிய நோக்கம் விவசாயிகளை இணைத்து குழு பண்ணையம் மேற்கொள்ளச் செய்வதாகும். உற்பத்தி சார்ந்த வேளாண்மையிலிருந்து சந்தை சார்ந்த வேளாண்மைக்கு விவசாயிகள் தயார் படுத்தி தரமான விளைபொருட்களை உற்பத்தி செய்து சந்தைகளுடன் இணைப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

துல்லிய பண்ணைத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

1) சாகுபடி செய்யப்பட்ட அனைத்து வகைப் பயிர்களிலும் சராசரி மகசூலைவிட கூடுதலான மகசூல் பெறப்படுகிறது. 2) அறுவடை செய்யப்பட்ட மகசூலில் 90 சதவீதத்திற்கு மேல் முதல் தரமானதாகவும், விரும்பி வாங்கப்படுவதாகவும் உள்ளது. 3) 25-30 சதம் வரை விளைபொருட்களின் எடை அதிகமாகிறது. 4) இத்திட்டத்திற்க குறைந்த அளவு வேலையாட்கள் போதுமானது. 5) பருவத்திற்கு ஒரு மாதம் முன்பாகவோ அல்லது பின்பாகவோ சாகுபடி செய்து அறுவடை காலத்தை நீடித்து விலை வீழ்ச்சியை தவிர்க்கலாம். 6) 35-40 சதவீத நீர் சேமிக்கப்படுவதால் கூடுதல் பரப்பில் சாகுபடி செய்யலாம்.

குழித்தட்டு நாற்றங்கால்

  துல்லிய பண்ணை முறையில் நாற்றுக்கள், நிழல்வலை சூழலில் அமைத்து, பாதுகாப்பான சூழலில் உற்பத்தி செய்யப் படுகின்றன. இதனால் உற்பத்தி செய்யும் நாற்றுக்கள் தரமானதாகவும், வீரியமுடனும், பூச்சி நோய் தாக்குதலின்றியும் இருப்பதால் விளைச்சல் பாதிப்பு ஏற்படுவதில்லை.

சமுதாய நாற்றங்கால்

   ஒரு குழுவிற்குத் தேவையான நாற்றுக்களை பொதுவான ஒரே நிழல் வலை சூழலில் தயார் செய்வதே சமுதாய நாற்றங்கால் ஆகும். இதனால் உற்பத்தி செலவு குறைவதுடன் 100 சத நாற்றுகளும் பயன் தருகிறது.

சொட்டுநீர் பாசனம்

   சொட்டுநீர் பாசனம் மூலம் நீரில் கரையக்கூடிய உரங்களை துல்லியமாக இட்டு உரமேலாண்மையை மேற்கொள்ள இயலும். மேலும், நீர்ச்சிக்கனம், குறைந்த களைகள், சீரான காற்றோட்டம், மலர் மற்றும் காய்கள் உதிராமை மண்ணின் மேற்பரப்பு வறண்டு இருப்பதால் குறைந்த பூச்சி, பூசண தாக்குதல் மண் 60 சத ஈரப்பதம் 40 சத காற்றோட்டம் பெற்றிருப்பதால் அபரிமினமான வேர் வர்ச்சி ஆகியவை சொட்டு நீர் பாசனத்தின் சிறப்பம்சங்களாகும்.

உரப்பாசனம்

  வழக்கமாக அடியுரம் மற்றம் மேலுரமாக இடப்படும் உரங்கள் அதிகளவில் வீணாவதுடன் பயிர் வளர்ச்சிக்கு போதிய அளவில் கிடைப்பதில்லை. எனவே பயிருக்குத் தேவையான சத்துக்கள் மூன்று அல்லது ஐந்து நாட்கள் இடைவெளியில் பயிரின் தேவை மற்றும் மண்ணிலுள்ள சத்துக்களின் அளவு ஆகியவற்றின் அடிப்பைடையில் பிரித்து அளிக்கப்படுகிறது. இதனால் பற்றாக்குறையுள்ள சத்துக்கள் உடனுக்குடன் கிடைப்பதால் பயிர் வளரச்சி மற்றும் உற்பத்தி பாதிக்கப்படுவதில்லை. பாசன நீருடன் பயிருக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கும் முறைக்கு உரப்பாசனம் என்று பெயர்.

பயிர் பாதுகாப்பு

  பூச்சி நோய்களின் தாக்குதலிலிருந்து பாதுகாக்க சரியான பயிர் பாதுகாப்பு இரசாயனங்களை தக்க தருணத்தில் சரியான அளவில் தேர்வு செய்து தெளிக்கப்படுகிறது. சரியான அளவில் தேர்வு செய்து தெளிக்கப்படுகிறது. பயிரின் ஆரம்ப வளர்ச்சிக்கால கட்டத்தில் வீரியம் குறைவான மருந்துகளைத் தேர்வு செய்ய வேண்டும். பயிர் பாதுகாப்பு செலவு குறைவதுடன் பயிரின் வாழ்நாள் நீடிக்கிறது.

[1] மாற்று பயிர் மக்காச்சோளம் 

உணவு தானியங்களின் அரசி எனப்படும்மக்காச்சோளம் நெல் கோதுமைக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மூன்றாவது மிக முக்கிய தானியபயிராக அதிக பரப்பளவில் பயிரிடப்படுகிறது 

மக்காச்சோளம் ஏழைகளின் சத்துமிக தானியம் என்றும் அழைக்கப்படுகிறது 

மக்காச்சோளம் நூற்று அறுவதற்கும்மேற்பட்ட நாடுகளில் பயிரிடப்படுகிறது 

தமிழ் நாட்டிலும் மக்காச்சோளம் மிக முக்கிய தானியபயிராகும் 

பருவகால மாற்றம் குறைந்து கொண்டுவரும் நீர்வளம்கால்நடை கோழித்தீவனத் தேவை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் உற்பத்தி தேவை இரண்டிற்கும் உள்ள இடைவெளி அதிகரித்துள்ளது 

இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மக்காச்சோளம் 25 %உணவுக்காகவும் 49%கோழி தீவனமாகவும் 12%கால்நடைத்தீவனமாகவும் 12 தொழிற்சாலைகளில் மூலப்பொருளாகவும் 2%எரிசாராயம் போன்றவைகளுக்கு பயன்படுகிறது 

மக்காச்சோளத்தில் அதிக விளைச்சல் கிடைப்பதற்கு வீரிய ஒட்டு 

ரகங்களின்வரவேயாகும்  

 1. வேளாண் செயல்முறைகள் தொழிற்கல்வி - மேநிலை இரண்டாமாண்டு