துலான் கொடித்துவக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துலான் கொடித்துவக்கு
தனிநபர் தகவல்
முழு பெயர்சமித துலான் கொடித்துவக்கு
பிறப்பு10 சூலை 1990 (1990-07-10) (அகவை 33)
தெனியாய, தென்மாகாணம், இலங்கை
விளையாட்டு
நாடுஇலங்கை
விளையாட்டுஇணை ஒலிம்பிக் தடகளம்
மாற்றுத்திறன் வகைப்பாடுF64
சாதனைகளும் விருதுகளும்
மாற்றுத் திறனாளர் இறுதி2020 தோக்கியோ

சமித துலான் எனவும் அறியப்படும் சமித துலான் கொடித்துவக்கு (பிறப்பு 10 சூலை 1990) என்பவர் இலங்கையின் இணை ஒலிம்பிக் தடகள விளையாட்டு வீரராவார்.[1][2] இவர் 2020 கோடைக்கால இணை ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பில் முதன்முதலில் பங்கேற்றார்.[2][3]

வாழ்க்கை[தொகு]

சமித துலான், இலங்கையின் தென்மாகாணத்திலுள்ள தெனியாயவில் பிறந்து வளர்ந்தார். இவர் தனது துவக்கக் கல்வியை தெனியாய மத்திய கல்லூரியிலும் இரண்டாம் நிலைக் கல்வியை ராகுல கல்லூரியிலும் தொடர்ந்தார்.[4]

இவர் ஒரு விசையுந்து ஈருருளி விபத்தின்போது தனது வலது காலில் உபாதைக்குள்ளானார். 2017ம் ஆண்டிலிருந்து இவர் மாற்றுத்திறனாளர் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.[4] இவர் இலங்கை இராணுவக் காவல்துறையில் கோப்ரலாகப் பணிபுரிவதோடு இராணுவக் காவல்துறை விளையாட்டுக் கழகம் சார்பில் போட்டிகளில் பங்கேற்கிறார்.[5]

விளையாட்டுத் துறை[தொகு]

இவர் 2019ம் ஆண்டில் துபாயில் நடைபெற்ற உலக இணைத் தடகள வாகையர் போட்டிகளில் ஆடவர் ஈட்டி எறிதல் F44 பிரிவில் நான்காம் இடம் பெற்றதன் மூலம் 2020 கோடைகால இணை ஒலிம்பிக் போட்டிகளில் நேரடியாகப் பங்கேற்கும் தகுதி பெற்றார்.[6]

இவர் 2020 தோக்கியோ இணை ஒலிம்பிக் போட்டிகளில் ஆடவர் ஈட்டி எறிதல் F64 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.[7][8] இதன்மூலம், 2020 கோடைக்கால இணை ஒலிம்பிக்கில் இலங்கைக்கு இரண்டாவது பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்ததோடு, ஆகத்து 30, 2021 எனும் ஒரே நாளில் இலங்கை இரண்டு பதக்கங்களை வென்றது.[9][10]


மேற்கோள்கள்[தொகு]

  1. "Dulan Kodithuwakku - Athletics | Paralympic Athlete Profile". International Paralympic Committee (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-30.
  2. 2.0 2.1 "Athletics KODITHUWAKKU Dulan - Tokyo 2020 Paralympics". .. (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-08-30. பார்க்கப்பட்ட நாள் 2021-08-30.
  3. "Unsung Sri Lanka Paralympics team leave making life easy for others". Sunday Observer (in ஆங்கிலம்). 2021-08-21. பார்க்கப்பட்ட நாள் 2021-08-30.
  4. 4.0 4.1 "Samitha Dulan top medal prospect at Tokyo Paralympics Games". Daily News. பார்க்கப்பட்ட நாள் 2021-08-30.
  5. Nadeera, Dilshan. "Throwers eager to create history at Tokyo Paralympics" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-30.
  6. "Sri Lanka's war veterans gunning for gold at Tokyo Paralympics". Sunday Observer (in ஆங்கிலம்). 2021-08-21. பார்க்கப்பட்ட நாள் 2021-08-30.
  7. "Athletics - Men's Javelin Throw - F64 Schedule | Tokyo 2020 Paralympics". .. (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-08-30. பார்க்கப்பட்ட நாள் 2021-08-30.
  8. "Sri Lanka wins 2nd Paralympic medal, bronze for Samitha Dulan". Newsfirst. பார்க்கப்பட்ட நாள் 2021-08-30.
  9. "Another medal for Sri Lanka at Tokyo Paralympics as Dulan wins bronze". www.adaderana.lk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-30.
  10. "Sri Lanka wins second Paralympics medal in one day for javelin throw". EconomyNext (in ஆங்கிலம்). 2021-08-30. பார்க்கப்பட்ட நாள் 2021-08-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துலான்_கொடித்துவக்கு&oldid=3712890" இலிருந்து மீள்விக்கப்பட்டது