துறைமுகம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

துறைமுகம் (Thuraimugam) கே ராஜேஷ்வர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஜார்ஜ் தயாரிப்பில் ஆதித்தியன் இசை அமைப்பில் 25 அக்டோபர் 1996 ஆம் தேதி இப்படம் வெளியானது. அருண்பாண்டியன், ஷோபனா, லிவிங்ஸ்டன், அலெக்ஸ், பூர்ணம் விஸ்வநாதன், சார்லி, ஜெய்கணேஷ், கவிதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.[1][2][3][4]

நடிகர்கள்[தொகு]

சி அருண் பாண்டியன், ஷோபனா, லிவிங்ஸ்டன் (நடிகர்), அலெக்ஸ், பூர்ணம் விஸ்வநாதன், சார்லி, ஜெய்கணேஷ், கவிதா, ஜார்ஜ், சாவித்திரி, டிஸ்கோ சாந்தி, அனுஷா, ஷகிலா, கிருஷ்ணமூர்த்தி, மேனேஜர் சீனா, மாஸ்டர் உதயராஜ், மகேந்திரன், நெல்லை கபிலன், ஜெயமணி, வின்சென்ட் ராய்.

கதைச்சுருக்கம்[தொகு]

நாமம் (ஜெய்கணேஷ்) ஒரு தொழிலாளிகள் சங்கத் தலைவர் ஆவார். அவர் தனது மனைவி புண்ணிய லட்சுமி மற்றும் இரு குழந்தைகளுடன் வறுமையில் வாழ்ந்து வருகிறார். சம்பள பற்றாக்குறையின் காரணமாக அவர் உண்ணாவிரத போராட்டம் ஒன்றிலும் ஈடுபடுகிறார். உண்ணாவிரத போராட்டத்தின் இறுதி நாளில் தனது நண்பன் எத்திராஜ் நாமத்திற்கு விஷம் வைத்து கொன்று விடுவதால் அந்த சங்கத்தின் புதிய தலைவராக எத்திராஜ் பொறுப்பேற்கிறான். இரு குழந்தைகளும் பசியில் மிகவும் அவதிப்பட்டு அதில் அந்தப் பெண் குழந்தை இறந்துவிடுகிறது. அதை தாங்கிக்கொள்ள முடியாத புண்ணிய லக்ஷ்மியும் அவளது ஆண் குழந்தையையும் கடலில் தற்கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள். பின்னர், அவர்கள் இருவரும் தொழிலாளிகளால் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் படுகிறார்கள். ஜானி தன் தாயை விட்டு வெளியேறுகிறான்

பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஜானி ஒரு துறைமுக நகரில் பெரிய ரவுடியாக இருக்கிறான். அப்போது தன் தாயை சந்திக்க நேரிடுகிறது அவரிடம் வெறுப்பு குறையாமல் இருந்ததால் தன் தாயை விட்டு விலகியிருக்கவே விரும்பினான் ஜானி. காவல்துறை ஆய்வாளர் அலெக்ஸாண்டர் வீரமுத்து ஜானியை கைது செய்ய காத்திருந்தார்.. எத்திராஜின் மகன் குமார், ஜானியின் நண்பன். ஓர் இரவில் கௌரி குமார் ஒரு விலைமகளை கொன்றுவிடுகிறான். அந்த கொலை பழி ஜானி மீது தவறுதலாக சுமத்தப்படுகிறது. நீதிமன்றத்தில் கௌரி குமாருக்கு ஆயுள் தண்டனையும், ஜானிக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப் படுகிறது.

7 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கறிஞர் ராமானுஜத்தை பழி வாங்க முயற்சி செய்கிறான் ஜானி. அவரை கொல்லும் முதல் முயற்சி தோல்வியில் முடிகிறது. அதனால் அவரது மகள் ருக்மணியின் திருமணத்தை நிறுத்துகிறான் ஜானி. அந்நிலையில் ஜானிக்கும் எத்திராஜிற்கும் மோதல் வெடிக்கிறது. பின்னர் என்னவானது என்பதே மீதிக் கதை ஆகும்

ஒலிப்பதிவு[தொகு]

இந்தத் திரைப்படத்தின் பின்னணி மற்றும் பாடல்களின் இசை அமைத்தவர் ஆதித்தியன் அவர். ஆறு பாடல்களை கொண்ட ஒலித்தொகுப்பு 1994ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் வரும் ஆறு பாடல்களுக்கும் வரிகள் எழுதியது இயக்குனர் ராஜேஷ்வர் ஆவார்.[5][6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "http://www.gomolo.com".
  2. "www.cinesouth.com/".
  3. "http://www.jointscene.com".
  4. "https://groups.google.com/".
  5. "http://play.raaga.com".
  6. "http://www.saavn.com".
  7. "https://groups.google.com".