துறைமங்கலம் (பெரம்பலூர் வட்டம்)
தோற்றம்
துறைமங்கலம் (Thoramangalam), தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் வட்டத்திலுள்ள வருவாய் கிராமம் ஆகும். [1]இக்கிராமத்தில் துறைமங்கலத்தில் பெரிய ஏரி உள்ளது. இவ்வூரில் மடம் அமைத்து சில ஆண்டுகள் தங்கி சைவப் பணி ஆற்றியவர் துறைமங்கலம் சிவப்பிரகாசர் ஆவார். [2]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 804 குடியிருப்புகள் கொண்ட துறைமங்கலம் வருவாய் கிராமத்தின் மக்கள் தொகை 3086 ஆகும். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 855 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 68.31% ஆகவுள்ளது. இக்கிராமத்தில் பட்டியல் சமூகத்தவர்கள் 64 பேர் உள்ளனர்.[3]