துறைப்பாடி,வேலூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
துறைப்பாடி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் வேலூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 14 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

துறைப்பாடி (ஆங்கிலம்:Thorapadi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,292 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 54% ஆண்கள், 46% பெண்கள் ஆவார்கள். துறைப்பாடி மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. துறைப்பாடி மக்கள் தொகையில் 7% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

வேங்கட கிருஷ்ணன் திருக்கோவில்[தொகு]

வேங்கட கிருஷ்ணன் திருக்கோவில் தொரப்பாடியில் (துறைப்பாடி) உள்ள கோவில்களில் மிகவும் பிரசித்திபெற்ற திருக்கோவில். ராதா ருக்மணி உடனுறை வேங்கட கிருஷ்ணன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். இக்கோவிலில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது இத்திருக்கோவில் 150 ஆண்டிற்கு மேலான வரலாற்றைக் கொண்டுள்ளது[சான்று தேவை]. இக்கோவிலில் புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமையும் ஊஞ்சல் சேவை நடைபெறும், மேலும் மார்கழி மாதம் அனைத்து நாட்களும் திருப்பாவை சேவை நடைபெறும். மார்கழி மாத முக்கோட்டி ஏகாதசி வெகு சிறப்பாக நடைபெறும்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துறைப்பாடி,வேலூர்&oldid=2694945" இருந்து மீள்விக்கப்பட்டது