துர்வினிதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துர்வினிதன் கங்க வம்சத்தின் 8வது அரசராக அறியப்படுகிறார். இவரது ஆட்சிக்காலத்தை கி. பி. 482 என அறுதியிட்டுக் கூறுகிறது.[1] இவர் கொங்கணி வர்மனின் மகன் என்கிறது கொங்கு தேச ராஜாக்கள் கையேட்டுப் பிரதி.[2] முந்தைய மன்னன் அவிந்தனுக்குப் பின் அரியணை ஏறினான். அவரது சகோதரர்களுடன் போட்டியிட்டு அரியணையைக் கைப்பற்றினான்.

தலவன்புரம்[தொகு]

கொங்கு தேசத்தை ஆண்ட கங்க வம்ச அரசர்களில் இவன் (தலவன்புரம்) தலக்காட்டை தலைநகராகக் கொண்டு கொங்கு தேசத்தையும் கன்னட தேசத்தையும் நீதி நெறி தவறாது ஆட்சி செய்தார் எனவும், மந்திர சாத்திரங்களைக் கற்று தேர்ச்சி பெற்று அதன் சக்தியால் பல தேச மன்னர்களை வென்றும், சேர, சோழ, பாண்டிய, ஆந்திர, கலிங்க தேசங்களை வென்று அவர்களிடமிருந்து கப்பம் பெற்று ஆட்சி செய்தார் எனவும், அறியமுடிகிறது.[3]

கல்வியாளர்[தொகு]

துர்வினிதன் மிகச் சிறந்த கல்வியாளராக விளங்கினான், வடமொழியில் நல்ல தேர்ச்சி பெற்று வடமொழிப்புலவர் பாரவி எழுதிய கிருதார்ச் சுனியம் என்னும் நூலுக்கு உரை எழுதினார். குணாட்டியர் என்ற முனிவர் பைசாச மொழியில் எழுதிய பிருகத்கதை தமிழில் மொழி பெயர்த்தார். இதனை கொங்குவேள் என்பவர் பெருங்காவியமாக தமிழில் எழுதினார், இதன் முகவுரையிலும், பாதர் டேபார்டு (Father Tabbard) மிதிக் செய்தித்தாளில் (Mythic Journal) இதன் சிறப்பம்சத்தை அறியலாம்.[4]

ஆட்சியை நிலைநிறுத்தல்[தொகு]

துர்விந்தன் ஆட்சியின் போது, பல்லவர்களுக்கும் கங்கர்களுக்கும் மோதல்கள் ஏற்பட்டன. கடும் போரில் பல்லவர்களைத் தோற்கடித்தார். இந்த வெற்றிகளால் தமிழ் நாட்டின் கொங்குமண்டலம் தொண்டைமண்டலம் ஆகிய பகுதிகளில் தனது அதிகாரத்தை நீட்டித்துக்கொண்டான்.

சாளுக்கியரிடம் உறவு[தொகு]

துர்விந்தன் ஒரு சாமார்த்தியசாலி. பல்லவர்களிடமிருந்து தன் நாட்டைக் காக்க, சாளுக்கியர்களிடம் தன் உறவைப் பலப்படுத்திக்கொண்டான். தன் மகளைச் சாளுக்கிய விசயாதித்தனுக்கு திருமணம் செய்வித்து நீண்டகாலம் சாளுக்கியர்களுடன் உறவைப்பேண வழிவகுத்தான்.

சமயநிலை[தொகு]

இவனுக்கு முன்னிருந்த கங்கமன்னர்கள் வைணத்தை ஆதரித்தனர் ஆனால் துர்விந்தன் சமணமதத்தை ஆதரித்தான்.

உசாத்துணை[தொகு]

  1. செந்தமிழ் - 15 ஆம் தொகுதி -142 வது பக்கம்-
  2. கொங்கு தேச ராஜாக்கள்- கையேட்டுப் பிரதி -ஆவணக் காப்பகம்-சென்னை-5-
  3. கொங்கு நாட்டு வரலாறு- (பக்கம்-93-94)-ஆசிரியர்- கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார்-பேரூர்ப் புலவர் பேரவை-கோயமுத்தூர்-முதற்பதிப்பு-2004-
  4. கொங்கு நாட்டு வரலாறு- (பக்கம்-93-94)-ஆசிரியர்- கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார்-அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடு-1954-

Dr. Suryanath U. Kamat, Concise history of Karnataka, 2001, MCC, Bangalore (Reprint 2002)

  • Kongudesarajakkal , Government manuscript Library, Chennai
"https://ta.wikipedia.org/w/index.php?title=துர்வினிதன்&oldid=2702969" இலிருந்து மீள்விக்கப்பட்டது