துர்தேவதை (விண்மீன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துர்தேவதை (கிரேக்கம்: நெமிசிசு, Nemesis) என்பது சூரியனிலிருந்து 50,000 முதல் 100,000 வானியல் அலகுகள் தூரத்தில் இருப்பதாகக் கருதப்படும் ஒரு விண்மீன்.[1] கிரேக்க தொன்மவியலில் நெமிசிசு ஒரு கடவுள். தமிழர்கள் இதனை தூமம் என்று கண்டனர் [2]

சூரியனின் சுற்றுப்பாதை[3]

சூரியனின் துணைவி[தொகு]

பொதுவாக இவ்வண்டத்தில் பல இரட்டை விண்மீன்களை காணலாம். அவ்வாறு சூரியனுக்கும் ஒரு துணை விண்மீன் இருக்கிறது.[4] அதை மாந்தரால் பார்க்க முடிவதில்லை. ஏனென்றால் அது ஒரு வெண் குறுமீன் ஆகவோ பழுப்பு குறுமீன் ஆகவோ சிவப்பு குறுமீன் ஆகவோ மாறியிருக்கும். அது வியாழன் போல் 10 மடங்கு நிறை கொண்டதாக இருக்கும்.

சூரியன் பால் வழி மண்டலத்தை 20 கோடி ஆண்டுகளுக்கு ஒரு முறை சுற்றி வரும்போது இந்த துர்தேவதையும் ஒன்றை ஒன்று சுற்றி வருவதாக நம்புகின்றனர்.[4] இது சூரியனுக்கு அருகில் வரும் போது 1 ஒளியாண்டு தூரத்திலும், அதிக பட்சமாக 2.4 ஒளியாண்டு தூரத்திலும் சுற்றி வருவதாக நம்புகின்றனர்.

பெயர் காரணம்[தொகு]

துர்தேவதை, நடுவில் உள்ளது சூரியன்

இதனுடைய சுற்றுப்பாதை காரணமாகவே பூமியிலும், மற்ற சூர்ய குடும்ப கிரகங்களிலும் விண் கல் மழை, நிலநடுக்கம் போன்ற எதிர்பாராத தாக்குதல் நடக்கிறது என நம்பப்படுவதால் இவ்விண்மீன் துர்தேவதை என பெயர் பெற்றது.

படக்குறிப்பு[தொகு]

  • வலது பக்கத்தில் காணப்படும் மேல் படத்தில் மஞ்சள் நிறத்தில் காணப்படும் வட்டமே, பால் வழி மண்டலத்தில் சூரியனின் சுற்றுப்பாதை ஆகும்.
  • துர்தேவதையும் இச்சுற்றுப்பாதை வழியாக சுற்றி வருவதாக நம்புகின்றனர்.
  • கீழ் படத்தில் உள்ளது வானியலார் நம்புகின்ற துர்தேவதை.

குறிப்பு தற்போது வானியலார் அதிகமாக தேடும் விசயமாக இந்த துர்தேவதை உள்ளது.[5][6][7]

மேற்கோள்[தொகு]

  1. வான சாஸ்திரம், வேங்கடம், விகடன் பிரசுரம், ப-122, துர்தேவதை, ISBN 978 8189936228
  2. மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்
    தென்-திசை மருங்கில் வெள்ளி ஓடினும்
    வயலகம் நிறைய புதுப்பூ மலர
    --- பெயல் பிழைப்பு அறா - புறநானூறு 117
  3. "See the "Spiral Arms" part of this NASA animation for details" இம் மூலத்தில் இருந்து 2009-06-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090621114054/http://planetquest.jpl.nasa.gov/milky-way/milky_way.html. 
  4. 4.0 4.1 SPACE.COM, science magazine, "Sun's Nemesis Pelted Earth with Comets, Study Suggests" (11 March 2010), http://www.space.com/scienceastronomy/nemesis-comets-earth-am-100311.html
  5. "NASA - WISE Delivers Millions of Galaxies, Stars, Asteroids". Nasa.gov. http://www.nasa.gov/mission_pages/WISE/news/wise20110414.html. பார்த்த நாள்: 2011-06-15. 
  6. Jpl.Nasa.Gov (2011-02-18). "Can WISE Find the Hypothetical 'Tyche'? - NASA Jet Propulsion Laboratory". Jpl.nasa.gov இம் மூலத்தில் இருந்து 2012-01-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120117110722/http://www.jpl.nasa.gov/news/news.cfm?release=2011-060. பார்த்த நாள்: 2011-06-15. 
  7. "Solar System 'Nemesis': Nearby Stars Could Pose Threat". Space.com. 2011-02-17. http://www.space.com/10869-nemesis-dwarf-stars-collide-solar-system.html. பார்த்த நாள்: 2011-06-15. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=துர்தேவதை_(விண்மீன்)&oldid=3558800" இருந்து மீள்விக்கப்பட்டது