துர்ஜன் சால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துர்ஜன் சால்
மன்னன்
முதல் ஆட்சிக் காலம்1614-1615
முன்னையவர்பைரிசால்
இரண்டாம் ஆட்சிக் காலம்1627-1640
பின்னையவர்இராம் ஷா
குடும்பம்உறுப்பினர்இராம் ஷா
அரசமரபுநாகவன்ஷி பேரரசு
தந்தைபைரிசால்
மதம்இந்து சமயம்

துர்ஜன் சால் (Durjan Sal) 17 ஆம் நூற்றாண்டில் சோட்டா நாக்பூரிலிருந்த ஓர் நாகவன்ஷி மன்னராவார். இவர் 1614 இல் தனது தந்தை பைரிசாலுக்குப் பின் ஆட்சிக்கு வந்தார். [1] [2]

துர்ஜன் சாலின் சுயாதீனமான அணுகுமுறையின் காரணமாக, தலைநகர் கோக்ராகர்லிருந்து வைரங்களை கைப்பற்றுவதற்காக, துர்ஜன் சாலுக்கு எதிராக தாக்குதல் நடத்துமாறு பீகார் ஆளுநர் இப்ராஹிம் கானுக்கு ஜஹாங்கீர் உத்தரவிட்டார்

இது ஒரு திடீர் தாக்குதல் என்பதால், துர்ஜன் சால் தன்னை தற்காத்துக் கொள்ள முடியவில்லை. துர்ஜன் சால் தோற்கடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். மேலும், 1615இல் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட அனைத்து வைரங்களும். இருபத்தி மூன்று யானைகளும் இப்ராஹிம் கான் வசம் சென்றது. துர்ஜன் சால் கைது செய்யப்பட்டு தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் குவாலியர் சிறைக்கு அனுப்பப்பட்டார். [3]

முகலாய அதிகாரிகள் வைரங்களை சேகரித்து முகலாய அரசவைக்கு அனுப்பி வைத்தனர். வைரத்தை தூய்மையை பரிசோதிக்க முடியாமல் பன்னிரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்த துர்ஜன் சால் அழைக்கப்பட்டார். இவர் உண்மையான வைரத்தை சுட்டிக்காட்டி, தன்னை விடுவித்துக் கொண்டார். ஆண்டுக்கு ரூ .6,000 கப்பம் செலுத்தவும் ஒப்புக்கொண்டார். மேலும் ஷா என்ற பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டது.

இவர் கும்லா என்ற இடத்தில் நவரத்தன்கர் என்றும் தோய்சாகர் என்றும் அழைக்கப்படும் இடத்தில் ஓர் கோட்டையை கட்டினார். இவர் 1640இல் இறந்தார். இவருக்குப் பிறகு இவரது மகன் இராம் ஷா அரியணை ஏறினார். [4] [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Nagbanshis And The Cheros". archive.org.
  2. "CHOTA-NAGPUR (Zamindari)". members.iinet.net.au. 2019-05-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-04-04 அன்று பார்க்கப்பட்டது.
  3. Ansari, Tahir Hussain (20 June 2019). Mughal Administration and the Zamindars of Bihar. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781000651522. https://books.google.com/books?id=kUueDwAAQBAJ&pg=PT215&lpg=PT215&dq. 
  4. "Gumla City History-Importance-Origin-Architecture". hoparoundindia. 2016-04-15 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-03-12 அன்று பார்க்கப்பட்டது.
  5. "The Lost Kingdom of Navratangarh". indianvagabond.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துர்ஜன்_சால்&oldid=3558803" இருந்து மீள்விக்கப்பட்டது