துர்க்கியானா கோவில்

ஆள்கூறுகள்: 31°38′N 74°52′E / 31.64°N 74.86°E / 31.64; 74.86
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துர்க்கியானா கோவில்
துர்க்கியானா கோவில், அமிர்தசரஸ்.
துர்க்கியானா கோவில் is located in பஞ்சாப்
துர்க்கியானா கோவில்
துர்க்கியானா கோவில்
அமிர்தசரஸில் கோயிலின் அமைவிடம்
ஆள்கூறுகள்:31°38′N 74°52′E / 31.64°N 74.86°E / 31.64; 74.86
பெயர்
வேறு பெயர்(கள்):இலக்குமி நாரயணன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:பஞ்சாப்
மாவட்டம்:அமிர்தசரஸ் மாவட்டம்
அமைவு:அமிர்தசரஸ்
கோயில் தகவல்கள்
மூலவர்:துர்க்கை
சிறப்பு திருவிழாக்கள்:தசரா, கிருஷ்ண ஜெயந்தி, இராம நவமி மற்றும் தீபாவளி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கோயில்களின் எண்ணிக்கை:1
வரலாறு
கட்டப்பட்ட நாள்:16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது; 1921இல் மீளமைக்கப்பட்டது.

துர்க்கியானா கோவில், இந்திய பஞ்சாபில் அமிர்தசரஸிலுள்ள ஓர் இந்துக்கோயில் ஆகும்[1]. இது இலட்சுமி நாராயணன் கோவில், துர்க்கா திரத், சிட்லா மந்திர் எனும் பெயர்களாலும் அறியப்படுகின்றது. துர்க்கைக்குரிய கோயிலாக விளங்கும் இக்கோயிலில் இலக்குமி, விட்டுணு ஆகிய கடவுளர்களர்களும் வழிபடப்படுகின்றனர். இதன் கட்டடக்கலை சீக்கியர்களின் பொற்கோயிலை ஒத்ததாகக் காணப்படுகின்றது[2].

அமைவிடம்[தொகு]

இக்கோயில் லோகார் வாசல் எனும் இடத்தில் துர்க்கியானா எனும் குளத்தருகே அமைந்துள்ளது. இது அமிர்தசரஸ் தொடருந்து நிலையத்திற்கு மிக அண்மையில் உள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து 1.5 கிலோமீட்டர் தூரத்திலுள்ளது. அமிர்தசரஸ் சாலைப் போக்குவரத்து, புகையிரதம், விமானம் ஆகிய வழிகளில் நாட்டின் ஏனைய பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது[1].

வரலாறு[தொகு]

இக்கோயில் பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகின்றது[3][4]. பின்னர் 1921இல் குரு ஹர்சாய் மால் கபூரினால் சீக்கியர்களின் பொற்கோயிலையொத்த கட்டடக்கலையுடன் கட்டப்பட்டு[1][5] பண்டிதர் மதன் மோகன் மாளவியாவினால் திறந்துவைக்கப்பட்டது[1].

அமிர்தசரஸ் புனிதநகராக அறிவிக்கப்படாத போதிலும் இக்கோயில் மற்றும் பொற்கோயிலைச் சுற்றி 200 மீட்டருக்குட்பட்ட சுற்றாடலில் புகையிலை, மது, மாமிசம் என்பவற்றின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது[6].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Discover Punajb. Parminder Singh Grover. பக். 28–29. GGKEY:LDGC4W6XWEX. http://books.google.com/books?id=Lc1Fs9JykeYC&pg=PT28. 
  2. "Durgiana Temple (Lakshmi Narain Temple)". National Informatics center. Archived from the original on 2015-03-26. பார்க்கப்பட்ட நாள் 2016-07-14.
  3. Chaturvedi, ப. 61.
  4. Gajrani 2004, ப. 220.
  5. Bansal 2005, ப. 178.
  6. Aggarwal 1992, ப. 111.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துர்க்கியானா_கோவில்&oldid=3558792" இலிருந்து மீள்விக்கப்பட்டது