உள்ளடக்கத்துக்குச் செல்

துர்கா பாய் வியாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துர்கா பாய் வியாம்
2012இல் துர்கா பாய் வியாம்
பிறப்பு1972
புர்பாஸ்பூர், மத்தியப் பிரதேசம், இந்தியா[1]
தேசியம் இந்தியா

துர்காபாய் வியாம் (Durgabai Vyam) (பிறப்பு: 1972கள் [2] ) பழங்குடி கலையின் கோண்டு பாரம்பரியத்தில் பணிபுரியும் போபாலை தளமாகக் கொண்ட முன்னணி பெண் கலைஞர்களில் ஒருவராவார். இவரது பெரும்பாலான பணிகள் மத்தியப் பிரதேசத்தின் மாண்ட்லா மாவட்டத்தில் உள்ள இவரது பிறந்த இடமான புர்பாஸ்பூர் என்ற கிராமத்தில் வேரூன்றியுள்ளன. [3]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

துர்கபாய் வியாம் மத்திய பிரதேசத்தில் உள்ள புர்பாஸ்பூர் என்ற கிராமத்தில் பிறந்தார். [3]

தனது ஆறாவது வயதில், திருமணங்கள் மற்றும் அறுவடைப் பண்டிகைகளின் போது வீட்டின் உள் மற்றும் வெளிப்புற சுவர்கள் மற்றும் தளங்களில் வடிவியல் வடிவங்களை வரைவதற்கான ஒரு சடங்கான தனது தாயிடமிருந்து திக்னா கலையை கற்றுக்கொண்டார். [3][4] இவரது ஆரம்பகால திக்னா படைப்புகள் பாராட்டைப் பெற்றன. [5]

தொழில்[தொகு]

தனது பாட்டியுடன் கதைகளைக் கேட்பதும், தாயின் கீழ் வழிகாட்டுதலும் ஆரம்ப ஆண்டுகளில் துர்காபாயின் கலைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தன.[5] தனது படைப்பு பயணத்தை 1996இல் போபாலின் இந்திரா காந்தி ராஷ்டிரிய மானவ் சங்கராலயா ஏற்பாடு செய்த ஒரு கலைஞர்கள் முகாமில் தொடங்கினார். [6] தனது 15 வயதில், களிமண் மற்றும் மர சிற்பி சுபாஷ் வியாம் என்பவரை மணந்தார். [4] துர்காபாயின் கலை வாழ்க்கை சுபாஷ் வயம் உடனான திருமணத்தால் மட்டுமல்லாமல், மூத்த கோண்டு கலைஞரான ஜங்கர் சிங் ஷியாமாலும் தனது உறவினர் ஒருவராலும் மேலும் செழித்தோங்கியது. இவரும் இவரது கணவரும் இணைந்து பட்டறைகள் மூலம், பங்கேற்பாளர்களுக்கு கோண்டு ஓவியத்தின் ஒருங்கிணைந்த கூறுகளை கற்பிக்கிறார்கள். அதே நேரத்தில் நவீனமயமாக்கல் கொண்டு வந்த மாற்றங்களை தனக்களின் ஓவிய ஊடகத்தில் சுட்டிக்காட்டுகின்றனர். [7]


மேற்கோள்கள்[தொகு]

  1. "Durga Bai". Saffronart. பார்க்கப்பட்ட நாள் March 8, 2019.
  2. "The Gond artist Durgabai - sunitanair". sunitanair.in. பார்க்கப்பட்ட நாள் 2019-03-15.
  3. 3.0 3.1 3.2 "Durga Bai | Paintings by Durga Bai | Durga Bai Painting - Saffronart.com". Saffronart. பார்க்கப்பட்ட நாள் 2019-03-15.
  4. 4.0 4.1 "Durga Bai: Telling Women's Stories With Gond Art". 2014-05-26.
  5. 5.0 5.1 Pande, Alka (2016). Many Indias. Must Arts Private Limited.
  6. Vyam, Durgabai (2012). "The Lyricism and Audacity of the Adivasi Imagination". Indian Literature 56 (4 (270)): 219–234. பன்னாட்டுத் தர தொடர் எண்:0019-5804. 
  7. KUMARI, SAVITA (2011). "Symposium on Indigenous Art, Contemporary Significance". Indian Anthropologist 41 (1): 95–99. பன்னாட்டுத் தர தொடர் எண்:0970-0927. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=துர்கா_பாய்_வியாம்&oldid=3121428" இலிருந்து மீள்விக்கப்பட்டது