துரை கோவிந்தராசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துரை கோவிந்தராசன் (Durai Govindarajan)(பிறப்பு 1937-இறப்பு 07 நவம்பர் 2022[1]) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். கோவிந்தராசன் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் வடக்கூரில் 1937 ஆம் ஆண்டில் பிறந்தார். பள்ளிக் கல்வியினை ஒரத்தநாட்டில் உள்ள கழக உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினரான இவர் 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளராக கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார்.[2] 1977 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திருவோணம் தொகுதியிலிருந்தும், 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திருவையாறு தொகுதியிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டசபைக்கு துரை கோவிந்தராசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1971 கந்தர்வக்கோட்டை திமுக 42,025 57.59[4]
1977 திருவோணம் அதிமுக 23,779 29.06[5]
1984 திருவையாறு அதிமுக 46,974 55.75[6]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துரை_கோவிந்தராசன்&oldid=3732593" இருந்து மீள்விக்கப்பட்டது