துரை இராமசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துரை இராமசாமி (Durai Ramasamy) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகச் சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.

காங்கிரசில்[தொகு]

பெருந்தலைவர் கே. காமராசரால் ஈர்க்கப்பட்டு அரசியலில் ஈடுபடலானார். 10 ஆண்டுக் காலம் வெள்ளக்கோயில் ஊராட்சிமன்றத் தலைவராகவும், 15 ஆண்டுகள் தொழிற்சங்கத் தலைவராகவும் பணியாற்றிய இவர் 5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். தமிழ்நாட்டில் காங்கிரசு பிளவுபட்டபோது இவர் கே. காமராசரின் என்.சி.ஓ.வில் சேர்ந்தார். பின்னர் காமராசின் திடீர் மறைவுக்குப் பிறகு, கருப்பையா மூப்பனாருடன் சேர்ந்து கட்சியை இந்திரா காங்கிரசுடன் இணைத்தார்.

அதிமுக[தொகு]

இவருக்கு காங்கிரசு கட்சி 1980 தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை மறுத்தது. எனவே இவர் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். இந்நேரத்தில் டாக்டர் எம்.ஜி.ஆர் (அப்போதைய முதலமைச்சர்) இவரைத் தனது கட்சிக்கு அழைத்தார். இவர் அதிமுகவில் சேர்ந்து 1980 மற்றும் 1984 தேர்தல்களில் வெற்றி பெற்றார். 1989 ஆம் ஆண்டில் இவர் அதிமுக (ஜெயலலிதா) அணியின் சார்பில் வெற்றிபெற்ற 28 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். 1991இல் மீண்டும் வெள்ளக்கோயில் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு கிராமப்புற தொழில்துறை அமைச்சரானார். ஆனால் பரவலான ஆட்சிக்கு எதிரான அலை காரணமாக 1996ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்தார். 2001ஆம் ஆண்டில் இவர் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சுயேச்சையாகப் போட்டியிட்டார். இத்தேர்தலிலும் தோல்வியினைச் சந்தித்தார்.

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

துரை இராமசாமி, தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு ஒருமுறை இந்திய தேசிய காங்கிரசு சார்பிலும் (1977) அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் (1980, 1984, 1991) மூன்று முறையும்[1][2][3][4] மற்றும் ஒரு முறை (1989) அதிமுக (ஜெயலலிதா) சார்பிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.[5]


மேற்கோள்கள்[தொகு]

  1. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304000841/http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1977/StatisticalReportTamil%20Nadu77.pdf. 
  2. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" இம் மூலத்தில் இருந்து 2018-07-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180713132112/http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1980/StatisticalReportTamil%20Nadu%201980.pdf. 
  3. 1984 Tamil Nadu Election Results, Election Commission of India
  4. https://resultuniversity.com/election/vellakoil-tamil-nadu-assembly-constituency
  5. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=துரை_இராமசாமி&oldid=3590746" இருந்து மீள்விக்கப்பட்டது