துரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

துரை தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார்.

பிறப்பு, பணிகள்[தொகு]

25 பிப்ரவாி 1940இல் தமிழ்நாட்டில் திருவள்ளூர் என்னுமிடத்தில் பிறந்த இவர் திரைக்கதை எழுதுதல், இயக்குதல் உள்ளிட்ட பல துறைகளில் பெயர் பெற்றவர் ஆவார்.[1] 1970களில் மிகவும் இயல்பான தமிழ் திரைப்பட இயக்குனராக இருந்த இவர், 2014 வரை, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 46 திரைப்படங்களை இயக்கியுள்ளார். வணிக முறையிலான திரைப்படங்களுக்காக அறியப்பட்ட போதிலும், அவர் அவளும் பெண் தானே மற்றும் பசி ஆகிய திரைப்படங்களுக்காக தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார்.[2] அவரது திரைப்படங்களில் பெண்களை மையப்படுத்தினார். 2011இல் 58 வது தேசிய திரைப்பட விருதுகள் (இந்தியா) அமைப்பில் நடுவராகப் பணியாற்றினார். 2011ஆம் ஆண்டு வரை அவர் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்தார்.[1]

திரைப்படவியல் பங்களிப்புகள்[தொகு]

  • அவளும் பெண் தானே (1974)
  • ஒரு குடும்பத்தின் கதை (1975)
  • ரகுபதி ராகவன் ராஜாராம் (1977)
  • பாவத்தின் சம்பளம் (1978)
  • ஒரு வீடு ஒரு உலகம் (1978)
  • சதுரங்கம் (1978)
  • ஆயிரம் ஜென்மங்கள் (1978)
  • பசி (1979)
  • ஒளி பிறந்தது
  • நீயா (1979)
  • மரியா, மை டார்லிங் (1980)
  • பெட் பியார் அவுர் பாப் (1984)
  • புதிய அத்தியாயம் (1990)

விருதுகள்[தொகு]

  • 1978 தமிழ்நாடு அரசின் சிறந்த திரைப்பட இயக்குநருக்கான விருது - ஒரு வீடு ஒரு உலகம்
  • 1979 தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது - பசி [1]
  • 1980 டாஷ்கெண்ட் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருது - பசி
  • 1982 கலைமாமணி விருது

மேற்கோள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "National Film Awards 2010". Directorate of Film Festivals. பார்த்த நாள் 9 May 2014.
  2. Kannan, Dr. R. (2000). Women in Films: An Incisive Study Into the Issues and Trends. Publications Division, Madurai Kamaraj University. p.24.Jump up ^ Bowker (1983). Variety's Film Reviews: 1978-1980. Bowker. ISBN 978-0-8352-2795-7.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துரை&oldid=2707326" இருந்து மீள்விக்கப்பட்டது