துருவ பாலைவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துருவ பலைவானம்

துருவ பாலைவனம் (polar desert) என்பது வருடாந்திர மழைப்பொழிவு 250மிமீ இற்கும் குறைவாகவும், சராசரி வெப்பநிலை வெப்ப மாதங்களில் 10°செ இற்கும் குறைவாக இருக்கும் பகுதிகளைக் குறிக்கும். பூமியில் உள்ள துருவ பாலைவனங்கள் சுமார் 5,000,000 சதுரகிமீ பரந்துள்ளது. இவ்விடங்களில் அதிகமாக இருப்பது படுகைப்பாறையும் சரளைக்கல் சமவெளியுமே.

துருவ பாலைவனம், இரண்டு துருவ பல்லுயிர்த்தொகுதியில் ஒன்றாகும்: துருவ பாலைவனங்கள், மற்றும் ஆர்ட்டிக் துருவப்பகுதி ஆகியவை. இந்த பல்லுயிர்த்தொகுதிகள் பூமியின் துருவங்களில் அமைந்திருக்கின்றன, குறிப்பாக, ஆர்க்டிக், வட அமெரிக்காவின் வடகோடி, ஐரோப்பா, ஆசியா மற்றும் அன்டார்டிகா. துருவ பாலைவனங்கள் ஆர்டிக் மற்றும் அண்டார்டிக்காவில் அமைந்துள்ளன. கோடைக்காலத்தில் தாவரம் மற்றும் விலங்குகள் வாழ்வதற்கு உதவும் துருவங்கள் போல் இல்லாமல் துருவ பாலைவனங்கள் எப்போதும் நிலையான பனிக்கட்டி அடுக்குகளை கொண்ட தரிசாக இருக்கின்றது.[1]. எனினும் வாழமுடியாத சூழ்நிலையில் கூட உயிர் இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. அடர்த்தியான் பனிக்கட்டியில் கரிம மற்றும் கனிமப் பொருட்களின் படிவுகள் இருக்கின்றன. இதனால் நுண்ணுயிரிகள் வாழக்கூடிய சூழ்நிலை உள்ளது. இந்த உயிரிகள் சைனொபாக்டீரியத்துடன் தொடர்பு கொண்டவை, இவற்றின் பல்வேறு பணிகள் குறிப்பாக உருகும் நீரிலிருந்து கரியமிலவாயுவை நிலைநாட்டுவது ஆகும்.[2]

வெப்பநிலை துருவ பாலைவனத்தில் மாறிக்கொண்டே இருக்கும், அடிக்கடி நீரின் உருகுநிலையையும் தாண்டிவிடும்.

அனேகமாக அன்டார்டிகாவின் உட்பகுதி அடர்ந்த பனிக்கட்டியையும் தாண்டி பாலைவனமாக உள்ளது. மாறாக, அன்டார்டிகாவின் மக்முர்டோ வரண்ட பள்ளத்தாக்குகள், ஆயிரம் ஆண்டுகளாக கடபாடிக் காற்றின் காரணமாக பனிக்கட்டியே இல்லாமல் இருந்தாலும், அவைகள் துருவ பாலைவனமாக இருப்பதில்லை.

ஒப்பீட்டளவில் துருவ பாலைவனங்கள் பனியுகத்தில் அதிகமாக இருந்திருக்கும், ஏனெறால் பனியுகம் வரண்டு இருக்கும்.

காலநிலை அறிவியலாளர்கள் வெப்பமயமாதலால் துருவ பல்லுயிர்த் தொகுதிகளில் உள்ள பனிக்கட்டிகள் பாதிப்படையும் என கவலை தெரிவிக்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Woodford, Chris (2011). Arctic Tundra and Polar Deserts. Chicago, Illinois: Heinemann-Raintree Books. பக். 6–7. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-432-94172-7. https://archive.org/details/arctictundrapola0000wood_h0p6. 
  2. Priscu, John C., et al (1998). "Perennial Antarctic lake ice: an oasis for life in a polar desert". Science 280.5372: 2095–2098. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=துருவ_பாலைவனம்&oldid=3581483" இருந்து மீள்விக்கப்பட்டது