துருவ பனி முகடு
நிலமுனைப் பனி முகடு (polar ice cap) அல்லது நிலமுனைப் பனிக்கவிப்பு (polar cap) என்பது ஒரு கோளின் அல்லது ஒரு குறுங்கோளின், இயற்கைத் அல்லது துணக்கோளின்(நிலாவின்) மிக உயர்ந்த அகலாங்கு சார்ந்த பனிக்கட்டியில் மூடப்பட்டிருக்கும் இயற்கையான அமைப்பே ஆகும்.[1]
நிலமுனைப் பனி முகடு என்பது பனிக்கட்டியின் பனிப்பகுதியைக் குறிக்கும். இதற்கு பனிக்கட்டியின் அளவைச் சார்ந்த எந்தவிதமான வரையரையும் இல்லை. இதற்கு நிலத்தின் மீது கவிந்திருக்கவேண்டும் எனும் எந்தத் புவியியல் தேவையும் இல்லை. இது நிலமுனையில் அமைந்த திண்ம நிலை உடையதாக இருக்க வேண்டும். இது நிலமுனைப் பனிக் கவிப்பு என்ற தவறான பெயரைக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் பனிக்கவிப்பு என்பது 50,000 சதுர மீட்டருக்கும் குறைவாகக உள்ள பகுதிகளையே குறிக்கிறது. இதைவிட பெரிய பகுதிகள் பனிப்பாளங்கள் என குறிப்பிடப்படுகின்றன.
பனி உட்கூற்றின் அமைப்பு இடத்திற்கிடம் மாறுபடும். எடுத்துகாட்டாக, புவிமுனைப் பகுதிகளில் நீர்முகப் பனிக்கட்டியாகும். அதே நேரத்தில் செவ்வாய் கோளின் நிலமுனைப் பனி உலர்பனி அல்லது திண்மக் கரி ஈராக்சைடும், நீர்முகப் பனியும் கலந்த கலவையாகும்.
உயர் அகலாங்கு மண்டலங்கள் சூரியக் கதிர்வீச்சின் குறைவான ஆற்றலைப் பெறுவதால், நிலநடுவரைப் பகுதிளைக் காட்டிலும் குறைவான மேற்பரப்பு வெப்பநிலையே உருவாக்குகின்றன.
கடந்த 12,000 ஆண்டுகளில் புவிமுனைப் பகுதிகள் வியத்தகு முறையில் மாறிவிட்டன. கோள் அல்லது நிலா, சூரியனைச் சுற்றிவரும்போது, சூரிய ஒளியை உறிஞ்சும் அளவைப் பொறுத்தே நிலமுனைப் பனிப்பகுதிகளில் பருவகால மாறுபாடுகள் ஏற்படுகின்றன. கூடுதலாக, புவியியல் கால அளவிலும், காலநிலை மாறுபாடு காரணமாக நிலமுனைப் பனி முகடுகள் வளரலாம் அல்லது சுருங்கலாம்.
புவி
[தொகு]-
செப்டம்பர் 1978 - 2002 ஆர்டிக் கடலின் பனிப் பரப்பு
-
பிப்ரவரி 1978 - 2002 ஆர்டிக் கடலின் பனி விஸ்தீரணம்
-
நீலக்கோள், அப்பல்லோ 17 செயற்கைக் கோளிலிருந்து புவியின் தென்முனைப் பனிப்பகுதியின் தோற்றம்( நாசா)
வட முனை
[தொகு]புவியின் வடமுனையில் ஆர்க்டிக் பெருங்கடலில் மிதக்கும் பனிக்கட்டிப் பாளத்தில் கடல் பனி உள்ளது. பருவகாலத்தில் உருகாத பனிப்பகுதிகள் 20 மீட்டர் வரை அடர்த்தியுள்ள பெரிய இடங்களில் 3-4 மீட்டர் தமன் அளவு வரை அடர்த்தியாக இருக்கும். ஓராண்டில் பனி பொதுவாக 1 மீட்டர் தடிமன் உயரும். கடலபனி மூடிய பகுதி 9 முதல் 12 மில்லியன் கிமீ² வரை உள்ளது. கூடுதலாக, கிரீன்லாந்து பனிப்பாளம் சுமார் 1.71 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது. சுமார் 2.6 மில்லியன் கி.மீ. பனிப்பாறைகள் முறிந்துவிடும்போது அது வட அட்லாண்டிக் சுற்றுவட்டாரத்தில் சிதறடிக்கப்படும் பனிப்பாறைகளாக மாறும்.[2]
தேசியப் பனி, பனி தரவு மைய ஆய்வின்படி, "1979 ல் இருந்து, குளிர்காலத்தில் ஆர்க்டிக் பனி அளவு சுமார் 4.2 சதவிகிதம் குறைந்துவிட்டது". 2008, 2009 ஆம் ஆண்டுகளில் குறைந்தது ஆர்டிக் கடல்பனி அளவு 2007 ஆம் ஆண்டை விட அதிகமாக இருந்தது. ஆண்டின் மற்ற நேரங்களில், ஐஸ்லாந்தின் அளவு 1979-2000 சராசரியை விடவும், ஏப்ரல் 2010 இல் அதிகமாக இருந்தது என தேசியப் பனி, பனி தரவு மையம் அறிவித்தது.[3] இருப்பினும், இந்த ஆண்டுகளில், மொத்த சராசரிப் பனி அளவு 8 மில்லியன் சதுர கிலோமீட்டர் முதல் 5 மில்லியன் சதுர கிலோமீட்டர் வரை வீழ்ச்சியுற்றதாக அமைந்தது.
தென்முனை
[தொகு]புவியின் தென்முனை நிலப்பரப்பான, அண்டார்டிக்கா, பனிக்கட்டியால் மூடப்பட்டுள்ளது. இது சுமார் 14.6 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கியுள்ளது. மேலும் 25 முதல் 30 மில்லியன் கன கி.மீ அளவில் இது அமைந்திருக்கிறது. புவியிலுள்ள 70% துாய்மையான நீர் இந்த பனிப்பகுதியில் அடங்கியுள்ளது.
தேசியப் பனி, பனித் தரவு மையத்திலிருந்து தரப்பட்ட தகவல்கள், அண்டார்ட்டிகாவின் கடலில் பனிப்பொழிவு கடந்த மூன்று பத்தாண்டுகளாக (1979-2009) சிறிது சாதகமான போக்கு கொண்டதாக உள்ளது அறிவிக்கின்றன.[4]
வரலாற்று உண்மைகள்
[தொகு]கடந்த பல பத்தாண்டுகளாக, புவிமுனைப் பனி முகடுகளின் நிலத்திலும், கடலிலும் உள்ள பனிப்பொழிவு குறைந்து வருவதால் குறிப்பிடத்தக்க வகையில் அவை மாற்றமடைந்துள்ளன. 1970 களின் பிற்பகுதியில் இருந்து ஆர்க்டிக் ஆண்டுகு சராசரியாக 20,800 சதுர மைல்கள் (53,900 சதுர கிலோமீட்டர்) பனிப்பொழிவை இழந்துவிட்டது.அதே நேரத்தில் அண்டார்ட்டிகா சராசரியாக ஆண்டுக்கு 7,300 சதுர மைல் (18,900 கிமீ 2) பனி அளவு அதிகரித்துள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.2014 செபுதம்பர் 19 அன்று, 1979 க்குப் பிறகு முதல் தடவையாக, தேசியப் பனி, பனி தரவு மையத்தின் ஆய்வின்படி, அண்டார்க்டிகா கடல் பனி அளவு 7.72 மில்லியன் சதுர மைல்கள் (20 மில்லியன் சதுர கிலோமீட்டர்) அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பனியின் அளவு பல நாட்களாக இதே நிலையில் இருந்துள்ளது.1981 க்கும் 2010 க்கும் இடையில் சராசரியான பெருமமாக 7.23 மில்லியன் சது மைல்களாக (18.72 மில்லியன் சதுர கிலோமீட்டர்) பனியின் அளவு இருந்தது. செப்டம்பர் 20 ஆம் நாள், ஒற்றை நாள் பெரும அளவை தேசியப் பனி, பனி தரவு மைய தரவுகளின்படி, கடல்பனி 7.78 மில்லியன் சதுரமைல்களாக (20.14 மில்லியன் சதுர கிலோமீட்டர்)இருந்தது. தேசியப் பனி, பனி தரவு மைய அறிக்கையின்படி, கடல்பனி 7.76 மில்லியன் சதுர மைல்கள் (20.11 மில்லியன் சதுர கிலோமீட்டர்) விரிந்து, செபுதம்பர் 22 அன்று ஐந்து நாள் சராசரியின் பெரும நிலையை அடைந்தது.[5]
பல ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும் தற்போதைய பனிக்கவிப்பின் நடப்புச் சரிவு வீதத்துக்குப் பனியாற்று இயக்கமும் அதனால் உருவாகிய காலநில மர்றங்களே காரணம் எனக் கூறுகின்றன. 1950 களின் தொடக்கத்தில், அமெரிக்கப் படைத்துறை சார்ந்த அறிவியலாளரும் பொறியாளரும் நிலவியல் நிலைமைகளை அறிய முனையப் பனிமுகப்பில் துளையிடத் தொடங்கினர். இந்த ஆய்வுகள் " கிட்டதட்ட நாற்பதாண்டுகள் ஆராய்ச்சிப் பட்டறிவையும் சாதனைகளையும் ஆழ் பனிமுகட்டுத் துளைப்புகளில் வழங்கின. மேலும், இது காலநிலை ஆவணங்களுக்கு வேண்டிய ஆழ்பனி அகட்டின் அடிப்படை துளைப்புத் தொழில்நுட்ப முறையையும் நிறுவின."[6]நடப்புக் காலநிலைப் பாணிகளையும் கடந்த ஆயிரமாண்டுகலின் காலநிலைப் பாணியையும் அறிய நிலமுனைப் பனிக்கவிப்பு ஆய்வு பயன்படுத்தப்பட்டது. இந்த பனிக்கவிப்பில் சிறைபட்டிருந்த கரிம் ஈராக்சைடு, மீத்தேன சுவடுகளில் இருந்து கடந்தப் பத்தாண்டு வரலாறும் மீட்கவியலாதநிலையில் முனையப் பனிக்கவிப்பு வேகமாக குறைந்து வந்துள்ள நிலவரமும் கண்டறியப்பட்டன.[7] ஜோசுபினே காமிசோ, கடந்த 20 ஆண்டுகளில் ஆர்க்டிக்கின் வெப்பமயமாதல் விகிதம் கடந்த 100 ஆண்டுகளில் இருந்ததை விட எட்டு மடங்கு வெப்பமடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது என்கிறார்.[8]2012 செப்டம்பரில் கடல் பனி எப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்து காணப்பட்டது. 2007 ஆம் ஆண்டில் கடல் பனி 4.17 மீட்டர் சதுர கிலோமீட்டருக்கும் கீழே குறைந்து 700,000 சதுர கிமீ ஆக இருந்தது என்று பத்திரிகையாளர் ஜான் விடேல் தெரிவித்தார்.[9] 2013 ஆகத்தில், ஆர்க்டிக் கடல் பனி அளவு சராசரியாக 6.09 மில்லியன் சதுர கிமீ ஆக இருந்தது. இது 1981-2010 இல் இருந்த சராசரியான 1.13 மில்லியன் சதுர கிமீ அளவுக்கும் குறைவாக இருந்ததாக அறியப்படுகிறது.[10]
செவ்வாய்
[தொகு]புவி மட்டுமன்றி, செவ்வாய்க் கோளிலும் நிலமுனைப் பனி முகடுகள் அமைந்துள்ளன. இவற்றில் முதன்மையாக நீர்முகப்புப் பனியும் ஓரளவு தூசும் கலந்துள்ளன.[11] தென்முனை அடுக்குகளின் சிறு பகுதியில் உறைந்த கரிம ஈராக்சைடு நிலையாகப் படிந்துள்ளது. இரு அரைக்கோளங்களிலும் மாரிக்காலங்களில் பருவமுறை உறைபனிப் படிவுகளும் இளவேனில் காலங்களில் அவற்றின் பதங்கமாதலும் நிகழ்கின்றன.
செவ்வாய்க் கோளுக்குச் சென்ற நாசா விண்கலங்கள் 2001 ஆம் ஆண்டில் திரட்டிய தகவல்கள் தென்முனையில் படிந்த பனிக் கவிப்புகளில் ஒவ்வோர் ஆண்டுக்கிடையிலும் பதங்கமாதல் நிகழ்தலை உறுதிப்படுத்தியுள்ளன. இந்தப் பதங்கமாதல் செவ்வாய்க்கோளின் வட்டணை அலைவுகளால் ஏற்படுவதாக விளக்கப்படுகிறது. [12]
புளூட்டோ
[தொகு]2015, ஏப்பிரல் 29 அன்று, நியூ ஒரைசன் பயணங்கள் குறுங்கோளான புளூட்டோவின் நிலமுனையில் பனிமுகடு உள்ளதைக் கண்டுபிடித்ததாக நாசா அறிவித்தது.[13] 2015 ஆம் ஆண்டு சூலையில் புளூட்டோவின் பயணத்தின்போது பயணித்த ஆலிசு புற ஊதா படிமமாக்கக் கதிர்நிரல் அளவி இந்தக் கூறுபாடு உண்மையில் மீத்தேன், நைட்ரஜன் பனிக்க்கட்டிகள் கொண்ட ஒரு பனி முகடு உள்ளதை உறுதிப்படுத்தியது.[14]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The National Snow and Ice Data Center Glossary". Archived from the original on 2009-07-10. பார்க்கப்பட்ட நாள் 2017-07-14.
- ↑ "NSIDC Arctic Sea Ice News Fall 2007". nsidc.org. Archived from the original on 19 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 27 March 2008.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Arctic Sea Ice News & Analysis". National Snow and Ice Data Center. பார்க்கப்பட்ட நாள் 9 May 2010.
- ↑ "State of the Cryosphere / Arctic and Antarctic Standardized Anomalies and Trends Jan 1979 – Jul 2009". National Snow and Ice Data Center. Archived from the original on 26 டிசம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 24 April 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Antarctic Sea Ice Reaches New Record Maximum". NASA Goddard Space Flight Center. பார்க்கப்பட்ட நாள் 10 May 2017.
- ↑ Langway, Chester (April 2008). The history of early polar ice cores, Cold Regions Science and Technology. 52. பக். 101–117.
- ↑ "Polar ice is melting more faster than predicted". The Watchers. 10 March 2011. பார்க்கப்பட்ட நாள் 18 May 2015.
- ↑ Thompson, Elvia. "Recent Warming of Arctic May Affect Worldwide Climate". நாசா. பார்க்கப்பட்ட நாள் 2 October 2012.
- ↑ Videl, John (19 September 2012). "Arctic Ice Shrinks 18% against Record, Sounding Climate Change Alarm Bells". தி கார்டியன் (London). https://www.theguardian.com/environment/2012/sep/19/arctic-ice-shrinks. பார்த்த நாள்: 3 October 2012.
- ↑ National Snow and Ice Data Center A real hole near the pole, 4 September 2012
- ↑ Grima, Cyril G.; Kofman, W.; Mouginot, J.; Phillips, R. J.; Herique, A.; Biccardi, D.; Seu, R.; Cutigni, M. (2009). "North polar deposits of Mars: Extreme purity of the water ice". Geophysical Research Letters 36 (3): n/a. doi:10.1029/2008GL036326. Bibcode: 2009GeoRL..36.3203G. http://www.agu.org/pubs/crossref/2009/2008GL036326.shtml.
- ↑ Ravilious, Kate (28 February 2007). "Mars Melt Hints at Solar, Not Human, Cause for Warming, Scientist Says". National Geographic News. National Geographic Society. Archived from the original on 2 March 2007. பார்க்கப்பட்ட நாள் 28 October 2008.
- ↑ Parnell, Brid-Aine. "New Horizons Probe Snaps Possible Polar Ice Cap On Pluto". Forbes. பார்க்கப்பட்ட நாள் 2015-05-20.
- ↑ Taylor Redd, Nola. "Pluto Is Larger Than Thought, Has Ice Cap, NASA Probe Reveals". Space.com. பார்க்கப்பட்ட நாள் 2015-09-10.
வெளிஇணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் துருவ பனி முகடு பற்றிய ஊடகங்கள்