துருவ நட்சத்திரம்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
துருவ நட்சத்திரம் (Pole star) என்பது வானில் பிரகாசமாகத் தெரியக்கூடிய விண்மீன்களில் ஒன்று.
பூமியிலுள்ள ஒவ்வொரு நோக்குநருக்கும் துருவநட்சத்திரம் நேர் வடக்கில் இருக்கும். இதை நாம் கண்களால் பார்க்க முடியும்.பொதுவாக ஏனைய விண்மீன்கள் வான துருவங்களைச் (celestial poles) சுற்றி வரும். ஆனால் துருவ நட்சத்திரம் மட்டும் கிட்டத்தட்ட ஒரே இடத்தில் அதுவும் வான துருவத்தில் இருக்கும். இதனால் பண்டைய காலத்தில் கடற்பயணம் மேற்கொள்ளும்பொழுது இரவில் திசை அறிய துருவ நட்சத்திரம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. வடக்கில் காணப்படும் பிரகாசமான துருவ நட்சத்திரத்தின் பெயர் போலாரிசு (polaris). இதன் தோற்றப்பருமன் 1.9 ஆகும். அதனுடைய தற்போதைய நடுவரை விலக்கம் +89°15'50.8". தென் துருவத்தில் இப்படி ஒரு பிரகாசமான நடசத்திரம் எதுவும் இல்லை.