உள்ளடக்கத்துக்குச் செல்

துருவ தாளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துருவ தாளம் என்பது கர்நாடக இசையில் உள்ள சப்த தாளங்கள் எனப்படும் ஏழு தாள வகைகளுள் ஒன்று. இத்தாள வகையில் லகு, திருதம், லகு, லகு என்னும் ஒழுங்கில் உறுப்புக்கள் அமைந்துள்ளன.

வகைகள்

[தொகு]

உள்ளங்கையால் ஒரு தட்டும், விரல் எண்ணிக்கைகளையும் கொண்டது "லகு". விரல் எண்ணிக்கை இரண்டு, மூன்று, நான்கு, ஆறு அல்லது எட்டு ஆக அமையலாம். இந்த எண்ணிக்கையைப் பொறுத்து லகுவில், திஸ்ர லகு, சதுஸ்ர லகு, கண்ட லகு, மிஸ்ர லகு, சங்கீர்ண லகு என ஐந்து வேறுபாடுகள் உள்ளன. லகுவில் ஏற்படக்கூடிய இவ்வைந்து வேறுபாடுகளினால், துருவ தாளத்தில் ஐந்து வகைகள் உருவாகின்றன. இவை சாதிகள் எனப்படுகின்றன. இச்சாதிகள் அவற்றில் இடம்பெறும் லகுவின் பெயரை ஒட்டிப் பின்வருமாறு அழைக்கப்படுகின்றன:

  1. திஸ்ரசாதி துருவ தாளம்
  2. சதுஸ்ரசாதி துருவதாளம்
  3. கண்டசாதி துருவ தாளம்
  4. மிஸ்ரசாதி துருவ தாளம்
  5. சங்கீர்ணசாதி துருவ தாளம்

திஸ்ரசாதி துருவ தாளம்

[தொகு]

இத்தாளம் 'மணி எனப்பெயர் பெறும். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்:

  • திஸ்ர லகு (ஒரு தட்டு, இரண்டு விரல் எண்ணிக்கைகள்)
  • திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)
  • திஸ்ர லகு (ஒரு தட்டு, இரண்டு விரல் எண்ணிக்கைகள்)
  • திஸ்ர லகு (ஒரு தட்டு, இரண்டு விரல் எண்ணிக்கைகள்)

சதுஸ்ரசாதி துருவ தாளம்

[தொகு]

இத்தாளத்துக்கு சிறீகரம் என்று பெயர். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்:

  • சதுஸ்ர லகு (ஒரு தட்டு, மூன்று விரல் எண்ணிக்கைகள்)
  • திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)
  • சதுஸ்ர லகு (ஒரு தட்டு, மூன்று விரல் எண்ணிக்கைகள்)
  • சதுஸ்ர லகு (ஒரு தட்டு, மூன்று விரல் எண்ணிக்கைகள்)

கண்டசாதி துருவ தாளம்

[தொகு]

இது பிராமணம் எனப்படும். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்:

  • கண்ட லகு (ஒரு தட்டு, நான்கு விரல் எண்ணிக்கைகள்)
  • திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)
  • கண்ட லகு (ஒரு தட்டு, நான்கு விரல் எண்ணிக்கைகள்)
  • கண்ட லகு (ஒரு தட்டு, நான்கு விரல் எண்ணிக்கைகள்)

மிஸ்ரசாதி துருவ தாளம்

[தொகு]

இதற்கு பூர்ணம் என்று பெயர். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்:

  • மிஸ்ர லகு (ஒரு தட்டு, ஆறு விரல் எண்ணிக்கைகள்)
  • திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)
  • மிஸ்ர லகு (ஒரு தட்டு, ஆறு விரல் எண்ணிக்கைகள்)
  • மிஸ்ர லகு (ஒரு தட்டு, ஆறு விரல் எண்ணிக்கைகள்)

சங்கீர்ணசாதி துருவ தாளம்

[தொகு]

இதற்கு புவனம் என்று பெயர். இதன் உறுப்புக்கள் பின்வருமாறு அமையும்:

  • சங்கீர்ண லகு (ஒரு தட்டு, எட்டு விரல் எண்ணிக்கைகள்)
  • திருதம் (ஒரு தட்டு, ஒரு வீச்சு)
  • சங்கீர்ண லகு (ஒரு தட்டு, எட்டு விரல் எண்ணிக்கைகள்)
  • சங்கீர்ண லகு (ஒரு தட்டு, எட்டு விரல் எண்ணிக்கைகள்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=துருவ_தாளம்&oldid=2239061" இலிருந்து மீள்விக்கப்பட்டது