துருவா சர்ஜா
துருவா சர்ஜா ( Dhruva Sarja ) (பிறப்பு: 1988 அக்டோபர் 6 ) இவர் கன்னடத் திரையுலகில் பணிபுரியும் ஓர் இந்திய நடிகர் ஆவார். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான ஆதூரி என்றத் திரைப்படத்தில் அறிமுகமானார். இது இவருக்கு மிகுந்த பாராட்டையும் புகழையும் அளித்தது.
தொழில்
[தொகு]சர்ஜா, ஒரு முறை சிறு வயதில், தனது மாமா நடிகர் அர்ஜுன் சர்ஜாவுடன் ஒரு படம் பார்த்துக்கொண்டிருந்தபோது, இவர் ஒரு திரைப்படக் கதாநாயகனாக மாற விரும்புவதாகக் கூறினார். அதற்கு பதிலளித்த அர்ஜுன், ஒரு கதாநாயகனாக மாறுவதற்கு முன்பு, ஒரு நல்ல நடிகராக இருக்க வேண்டி பயிற்சி வகுப்புகள் எடுக்க பரிந்துரைத்தார். துருவா பயிற்சி பெற்று நடிப்புக்கு தயாராக இருந்தார். ஏ.பி. அர்ஜுனின் புதிய திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்கான அழைப்பு பற்றி கேள்விப்பட்டபோது, இவர் அதில் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்டார். இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட வரை, தான் நடிகர் அர்ஜுன் சர்ஜாவின் மருமகன் என்பதை வெளிப்படுத்தவில்லை.
துருவா 2012இல் வெளியாகி வெற்றிப்பெற்றத் திரைப்படமான ஆதுரி மூலம் படங்களில் அறிமுகமானார். ராதிகா பண்டிட்டுக்கு ஜோடியாக அப்படத்தின் கதாநாயகனாக இவரைக் அர்ஜுன் கையாண்டிருந்த விதம் இவருக்கு விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றுத் தந்தது. இவர் தனது அடுத்த படமான பகதூருக்காக தனது நெருங்கிய நண்பர் சேத்தன் குமாருடன் 2013இல் கையெழுத்திட்டார். இதில் மீண்டும் பண்டிட் இவருக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது[1][2] பின்னர் 2015 ஏப்ரலில் இவர் பர்ஜாரி (2017) என்றப் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதுவும் மிகப்பெரிய ஒரு வெற்றியாக மாறி துருவாவிற்கு தொடர்மும்முறை வெற்றியை அளித்தது.[3]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]துருவா சர்ஜா 1988 அக்டோபர் 6 ஆம் தேதி இந்தியாவின் கர்நாடகாவின் பெங்களூருவில் பிறந்தார். இவருக்கு கன்னட படங்களில் நடித்துவரும் நடிகரான சிரஞ்சீவி சர்ஜா என்ற சகோதரர் உள்ளார். இவரது மாமா அர்ஜுன் சர்ஜா தென்னிந்திய நடிகராவார். இவரது தாத்தா சக்தி பிரசாத் கன்னடப் படங்களிலும் ஒரு நடிகராக இருந்தார். துருவா தனது குழந்தை பருவ நண்பர் பிரேரானாவுடன் 2018 திசம்பர் 9, அன்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.[4] பெங்களூரில் உள்ள பால்ட்வின் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார்.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Dhruv Has His Cake and Eats it Too". The New Indian Express. 8 October 2014. http://www.newindianexpress.com/entertainment/kannada/Dhruv-Has-His-Cake-and-Eats-it-Too/2014/10/08/article2466570.ece. பார்த்த நாள்: 10 October 2014.
- ↑ "Dhruva Sarja set to romance two beauties". The Times of India. 3 September 2014. http://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movies/news/Dhruva-Sarja-set-to-romance-twobeauties/articleshow/41589607.cms. பார்த்த நாள்: 13 September 2014.
- ↑ Sharadhaa A. (14 April 2015). "Bharjari Kicks Off With Dhruva and Chethan". The New Indian Express. newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 15 April 2015.
- ↑ "Actor Dhruva Sarja to get engaged to his girlfriend on this date". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 16 November 2018.