துருவன் தரவர்சன்
இராட்டிரகூடர் மன்னர்கள் (753-982) | ||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
||||||||||||||||||||||||||||||||
துருவன் (ஆட்சிக்காலம் 780-793 ) என்பவன் இராஷ்டிரகூடப் பேரரசின் குறிப்பிடத்தக்க அரசனாவான். இவன் தனது அண்ணன் இரண்டாம் கோவிந்தனுக்கு பதிலாக ஆட்சிக்கட்டிலில் ஏறியவன் ஆவான். இரண்டாம் கோவிந்தன் சிற்றின்ப மகிழ்ச்சியிலும், களியாட்டங்களிலுமே அளவுக்கு மீறி ஈடுபாடுகாட்டிவந்ததால் மக்களிடமும், உள்ளூர் தலைவர்களிடமும் தனது செல்வாக்கை இழந்தான் என்று வரலாற்றாசிரியர் காமத் மூன்றாம் கிருட்டிணனின் கர்கடு செப்புத்தகடுகளை மேற்கோள் காட்டிக் கூறுகிறார். [1] கி.பி.779 ஆண்டைய துலியா மானியக் கல்வெட்டு மற்றும் 782 ஆண்டைய கருகடள்ளி கல்வெட்டுகளில் துருவன் மன்னனானதை கூறுகின்றன. சில வரலாற்றாசிரியர்கள் துருவன் புரட்சிசெய்து அரியணையை பிடுங்கியதாக கூறுகின்றனர் என்றாலும், [2] மற்ற வரலாற்றாசிரியர்கள் இரண்டாம் கோவிந்தனிடமிருந்து அரியணை மாற்றம் அமைதியான முறையில் நடந்து முடிந்ததாக நினைக்கிறனர்.[3] இவன் கலிவல்லபன், சிறீவல்லபன், துருவவர்சன், மகாராஜாதிராஜா ,பரமேசுவரன் போன்ற பட்டங்களைக் கொண்டிருந்தான்.
வடக்கு,கிழக்கு வெற்றிகள்
[தொகு]துருவன் இராஷ்டிரகூடர் ஆதிக்கத்தையும் ஆட்சி எல்லையையும் விரிவாக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து செய்துவந்தான். வட இந்தியவில் அவன் கன்னோஜையும், மத்திய இந்தியாவின் குர்ஜர பிரதிஹாரா பேரரசு மற்றும் வங்கத்தின் தர்மபால என்கிற பாலப் பேரரசசையும், போரில் வெற்றிகொண்டான் என்றாலும் இந்த வெற்றிகளால் அப்பகுதிகளை நிரந்தரமாக தன்வசம் வைத்திருக்க இயலாவிட்டாலும், பொருளையும், புகழையும் அடைந்தான். [4] எனினும் மற்றொரு வரலாற்றாசிரியர் துருவனின் பேரரசு வடக்கில் அயோத்தி முதல் தெற்கில் இராமேசுவரம்வரை இருந்ததாக கூறுகிறார். [2]
தென்னக வெற்றிகள்
[தொகு]இவன் கீழைச் சாளுக்கிய நான்காம் விட்டுணுவர்தனுடன் திருமண உறவை ஏற்படுத்திக் கொண்டு அவர்களுடன் கூட்டை ஏற்படுத்திக்கொண்டான். பிறகு மேலைக் கங்க இரண்டாம் சிவமாறனைத் தோற்கடித்து, அவனை கைது செய்து சிறையில் அடைத்தான். தன் சொந்த மகன் இளவரசன் கம்பராசாவை கங்க நாட்டுக்கு ஆளுநராக நியமித்தான். மேலும் பல்லவன் நந்திவர்மனுடன் மோதி அவன் இராஷ்டிரகூடர்களின் மேலாண்மையை ஏற்குமாறு செய்தான் நந்திவர்மனிடம் யானைகளை திரையாக பெற்றான். காஞ்சியை 785 இல் தன்கட்டுப்பாட்டில் கொண்டுவந்தான். மீண்டும் மேலைக் கங்கருக்கு எதிராக 788இல் போர்தொடுத்தான். [1]
துணைக்கண்ட வல்லரசு
[தொகு]இவனது ஆட்சியின் போது இராஷ்டிரகூடர்கள் இந்தியதுணைக்கண்டத்தின் பெரும் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இந்தியதுணைக் கண்டத்தில் ஒரு வல்லரசாக இருந்தனர் [5]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Kamath (2001), p75
- ↑ 2.0 2.1 Reu (1933), p62
- ↑ Dr. P. B. Desai and K. V. Subrahmanya Aiyar in Kamath (2001), p75
- ↑ A.S. Altekar in Kamath (2001), p75
- ↑ A. S. Altekar in Kamath 92001), p76
மேற்கோள்கள்
[தொகு]- Sastri, Nilakanta K.A. (2002) [1955]. A history of South India from prehistoric times to the fall of Vijayanagar. New Delhi: Indian Branch, Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-560686-8.
- Kamath, Suryanath U. (2001) [1980]. A concise history of Karnataka : from pre-historic times to the present. Bangalore: Jupiter books. LCCN 80905179. இணையக் கணினி நூலக மைய எண் 7796041.
- Reu, Pandit Bisheshwar Nath (1997) [1933]. History of The Rashtrakutas (Rathodas). Jaipur: Publication scheme. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-86782-12-5.