துருவதேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துருவதேவி இன்றைய வட இந்தியாவில் ஆட்சி செய்த குப்தா பேரரசர் சந்திரகுப்தரின் (பொ.வ 380 - பொ.வ 415) ராணியும் முதலாம் குமாரகுப்தாவின் தாயாரும் ஆவார். இவர்இளவரசர் கோவிந்தகுப்தாவின் தாயாகவும் களிமண் முத்திரை கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

தேவிசந்திரகுப்தம் என்ற சமஸ்கிருத நாடகத்தின்படி, துருவதேவி முதலில் சந்திரகுப்தனின் மூத்த சகோதரர் ராமகுப்தாவின் ராணியாக இருந்தார். ராமகுப்தர் எதிரியால் முற்றுகையிடப்பட்டதும் ராணியை எதிரியிடம் சரணடையச் சொன்னார். இதையறிந்ததும் ராணி வேடமணிந்து எதிரி முகாமில் நுழைந்த சந்திரகுப்தர், எதிரியைக் கொன்றார். நாடகத்தின் அமைப்பு, பிற இலக்கிய மற்றும் கல்வெட்டு ஆதாரங்களின் அடிப்படையில், சந்திரகுப்தர் பின்னர் ராமகுப்தாவைக் கொன்றார் அதன் பின்னர் துருவதேவியை மணந்தார் என்று கூறுகிறது. இது நவீன வரலாற்றாசிரியர்களிடையே விவாதிக்கப்படுகிறது, சில அறிஞர்கள் இதை ஒரு புனைகதை படைப்பு என்றும் நிராகரிக்கின்றனர்.

குப்தரின் பதிவுகளில்[தொகு]

"துருவா" என்ற வார்த்தையின் அர்த்தம் மாறாதது அல்லது நிலையானது ஆகும். மேலும் இது துருவ நட்சத்திரத்தின் சமஸ்கிருத பெயர். குப்தர்களின் பதிவுகளின்படி, துருவதேவி சந்திரகுப்தரின் வாரிசான முதலாம் குமாரகுப்தாவின் தாயார்.[1] கோவிந்தகுப்தாவின் பசார் களிமண் முத்திரை துருவசாமினி சந்திரகுப்தாவின் ராணியாகவும், கோவிந்தகுப்தரின் தாயாகவும் குறிப்பிடுகிறது.[2][3] சந்திரகுப்தருக்கு ஒத்த பெயர்களைக் கொண்ட இரண்டு வெவ்வேறு ராணிகள் இருந்திருக்க வாய்ப்பில்லை: துருவசாமினி என்பது துருவதேவியின் மற்றொரு பெயராக இருக்கலாம் என்றும், கோவிந்தகுப்தர் குமாரகுப்தரின் உடன் பிறந்த சகோதரர் என்றும் கருதுகின்றனர்.[1]

தேவி-சந்திரகுப்தத்தம் நாடகத்தில்[தொகு]

தேவிசந்திரகுப்தம் எனுடம் நாடகத்தில் இந்தோ சிதியன் பேரரசின் அரசனால் மன்னர் இராமகுப்தர் முகாமை முற்றுகையிட்டபோது மன்னர் தனது ராணி துருவதேவியை அமைச்சர்களின் வற்புறுத்தலால்[4] எதிரிகளிடம் சரணடையச் சொல்லுகிறார். அதேவேளை மன்னர் ராககுப்தரின் தம்பி சந்திரகுப்தர் ராணி வேடம் புனைந்து எதிரிகளிடையே ஊடுருவி இந்தோ சிதியன் பேரரசின் அரசனைக் கொல்கிறார்.[5] மீதமுள்ள கதைகள் எஞ்சியிருக்கும் பத்திகளில் இருந்து தெளிவாக இல்லை, ஆனால் மற்ற வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் நாடகத்தின் கடைசி பகுதியில், சந்திரகுப்தர் ராமகுப்தாவைத் தூக்கி எறிந்து, துருவதேவியை மணக்கிறார்[6] எனக் கூறப்பட்டுள்ளது. தேவிசந்திரகுப்தம் சதித்திட்டத்தின் வரலாற்றுத்தன்மை பல நவீன வரலாற்றாசிரியர்களால் சந்தேகிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, வரலாற்றாசிரியர் டி.சி.சர்கரின் கூற்றுப்படி, நாடகத்தின் ஒரே வரலாற்று உண்மைகள் என்னவென்றால், துருவதேவி சந்திரகுப்தாவின் ராணியாக இருந்தார், இந்தோ சிதியன் பேரரசு மேற்கு இந்தியாவில் ஆட்சியை செய்து கொண்டிருந்தனர். மற்ற அனைத்தும் ஆசிரியரின் சொந்த கற்பனை என்கிறார்.[7]


ஆனால் இந்த ஆதாரங்கள் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கலாம். எனவே நாடகத்தினை வரலாற்றுத்தன்மையை உறுதிப்படுத்தும் சான்றுகளாக உறுதியாகக் கருத முடியாது. நாடகத்தின் சந்திரகுப்தர் - துருவதேவி வரலாற்று நபர்களாக தெரியவில்லை. ஆனால் ராமகுப்தரின் வரலாற்றுத்தன்மை அவர் பெயரிலுள்ள சில கல்வெட்டுகள் மற்றும் நாணயங்கள் கண்டுபிடிப்பு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Tej Ram Sharma 1978, ப. 30.
  2. Tej Ram Sharma 1989, ப. 111.
  3. Romila Thapar 2013, ப. 359.
  4. A. K. Warder 1989, ப. 261.
  5. Ashvini Agrawal 1989, ப. 153-154.
  6. R. C. Majumdar 1981, ப. 48.
  7. D. C. Sircar 1969, ப. 139.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துருவதேவி&oldid=3020489" இலிருந்து மீள்விக்கப்பட்டது