உள்ளடக்கத்துக்குச் செல்

துருக்கிய குர்திஸ்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1965 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி துருக்கியில் குர்திஷ் பேசும் மாகாணங்கள்.   அடர் பச்சை நிறத்தில் உள்ள மாகாணங்களில், பெரும்பான்மையானவர்கள் (> 50%) குர்திஷ் பேசுகிறார்கள்; வெளிர் பச்சை மாகாணத்தில், பண்முகத்தின்மை உள்ளது.[1][2]

துருக்கிய குர்திஸ்தான் அல்லது வடக்கு குர்திஸ்தான் ( Turkish Kurdistan அல்லது Northern Kurdistan, குர்திய மொழி : Bakurê Kurdistanê‎) என்பது துருக்கியின் ஒரு பகுதியாகும். இது கிழக்கு அனதோலியா மற்றும் தென்கிழக்கு அனதோலியா பகுதிகளில் அமைந்துள்ளது, அங்கு குர்துகளை கொண்ட இனக்குழுவினர் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர்.

துருக்கியில் 20 மில்லியன் குர்துகள் வாழ்கிறார்கள் என்று பாரிசின் குர்திஷ் கல்வி நிறுவனம் மதிப்பிடுகிறது.[3]

குர்துகள் பொதுவாக தென்கிழக்கு துருக்கியை பரந்த குர்திஸ்தானின் நான்கு பகுதிகளில் ஒன்றாக கருதுகின்றனர். இதில் வடக்கு சிரியாவின் சில பகுதிகள் ( ரோஜாவா அல்லது மேற்கு குர்திஸ்தான்), வடக்கு ஈராக்கு ( தெற்கு குர்திஸ்தான் ) மற்றும் வடமேற்கு ஈரான் ( கிழக்கு குர்திஸ்தான் ) ஆகியவை அடங்கும்.[4]

துருக்கிய குர்திஸ்தான் என்ற சொல் பெரும்பாலும் குர்திஷ் தேசியவாத சூழல் தொடர்புடையதாக பயன்படுத்தப்படுகிறது. இது துருக்கியில் ஒரு சர்ச்சைக்குரிய சொல்லாக உள்ளது. இதன் காரணமாக, இது குறித்த தெளிவின்மை உள்ளது, மேலும் இந்தச் சொல்லுக்கு சூழலைப் பொறுத்து வெவ்வேறு பொருள்கள் உள்ளன. குறிப்பிடத்தக்க குர்திஷ் மக்கள்தொகை கொண்ட தென்கிழக்கு துருக்கியில் உள்ள பகுதிகளைக் குறிக்க அறிவியல் ஆவணங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் இந்த சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.[5][6][7][8][9][10][11][12]

புவியியல் மற்றும் பொருளாதாரம்

[தொகு]
பேட்மேன் நகரம்

பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் கூற்றுப்படி துருக்கியில் குர்து மக்களை பெரும்பான்மையாக கொண்ட 13 மாகாணங்கள் உள்ளன. அவை ஐடார், துன்செலி, பிங்கால், மியூ, ஆரே, அத்யமான், தியர்பாகர், சியர்ட், பிட்லிஸ், வான், சான்லூர்பா, மார்டின் மற்றும் ஹக்கரி போன்றவை ஆகும்.[13]

1987 ஆம் ஆண்டய, இஸ்லாமிய கலைக்களஞ்சியத்தில் துருக்கிய குர்திஸ்தான் வரலாற்றுரீதியாக குறைந்தது 17 மாகாணங்களை உள்ளடக்கியதாக விவரித்து உள்ளது. அவை : அடயாமன், அரே, பிங்கால், பிட்லிஸ், தியர்பாகர், எலாசே, எர்சின்கான், ஏர்சுரம், ஹக்காரி, கார்ஸ், மார்டியா, மார்டியா, மார்டியா சான்லூர்பா, துன்செலி மற்றும் வேன் போன்றவை ஆகும். இஸ்லாமிய கலைக்களஞ்சியம் அதே நேரத்தில் "குர்திஸ்தானின் எல்லைகளின் துல்லியமற்ற வரம்புகள் இப்பகுதியைப் பற்றி சரியாக குறிக்க அனுமதிக்கவில்லை" என்று கூறுகிறது.[14] 1987 ஆம் ஆண்டு முதல், புதியதாக உருவாக்கப்பட்ட நான்கு புதிய மாகாணங்களான - அர்னாக், பத்மான், ஐடார் மற்றும் அர்தகான் - ஆகிய இந்த சில மாகாணங்களானது துருக்கிய நிர்வாக அமைப்புக்கு உள்ளே உருவாக்கப்பட்டன.

இப்பகுதியானது அனத்தோலியாவின் தென்கிழக்கு எல்லையாக உள்ளது. இது 3,700 மீ (12,000   அடி) க்கும் அதிகமான உயரமான சிகரங்கள் மற்றும் வறண்ட மலை பீடபூமி, போன்றவற்றை கொண்டதாக உள்ளது. மேலும் இது தாரசு மலைத்தொடர்களின் ஒரு பகுதியால் உருவானது. இது தீவிர கண்ட காலநிலையைக் கொண்டுள்ளது. அதாவது கோடைக் காலத்தில் வெப்பம் மிகுந்த‍தாகவும், குளிர்காலத்தில் கடுமையான குளிர் கொண்ட பகுதியாகவும் உள்ளது. இருந்த போதிலும், இப்பகுதியில் பெரும்பகுதி வளமானதாகவும், பாரம்பரியமாக தானியங்கள் மற்றும் கால்நடைகளை சமவெளி நகரங்களுக்கு ஏற்றுமதி செய்யும் பகுதியாக இருந்துள்ளது. உள்ளூர் பொருளாதாரம் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறிய அளவிலான வேளாண்மை ஆகியற்றை ஆதாரமாக கொண்டுள்ளது. எல்லை தாண்டி கடத்துதல் (குறிப்பாக பெட்ரோலியம் ) எல்லைப் பகுதிகளில் ஒரு முக்கிய வருமானத்தை வழங்குகிறது. பெரிய அளவிலான விவசாயம் மற்றும் தொழில்துறை நடவடிக்கைகள் இப்பகுதியில் மிகப்பெரிய குர்திஷ் மக்கள்தொகை கொண்ட நகரமான தியர்பாகரைச் சுற்றியுள்ள தாழ்வான பிராந்தியத்தின் பொருளாதார வாழ்க்கையில் கொண்டுள்ளது. இருப்பினும், மற்ற இடங்களில், பல தசாப்தங்களாக உள்நாட்டுச் சண்டை மற்றும் அதிக வேலையின்மை ஆகியவை இப்பகுதியில் இருந்து துருக்கியின் பிற பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் பரவலாக புலம்பெயர காரணமாக ஆனது.[15]

இதனையும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. Heinz Kloss & Grant McConnel, Linguistic composition of the nations of the world, vol,5, Europe and USSR, Québec, Presses de l'Université Laval, 1984, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-7637-7044-4
  2. Ahmet Buran Ph.D., Türkiye'de Diller ve Etnik Gruplar, 2012
  3. The Kurdish Population by the Kurdish Institute of Paris, 2017 estimate. "The territory, which the Kurds call Northern Kurdistan (Bakurê Kurdistanê), has 14.2 million inhabitants in 2016. According to several surveys, 86% of them are Kurds... So in 2016, there are about 12.2 million Kurds still living in Kurdistan in Turkey. We know that there are also strong Kurdish communities in the big Turkish metropolises like Istanbul, Izmir, Ankara, Adana, and Mersin. The numerical importance of this "diaspora" is estimated according to sources at 7 to 10 million... Assuming an average estimate of 8 million Kurds in the Turkish part of Turkey, thus arrives at the figure of 20 million Kurds in Turkey."
  4. Kurdish Awakening: Nation Building in a Fragmented Homeland, (2014), by Ofra Bengio, University of Texas Press
  5. de Vos, Hugo; Jongerden, Joost; van Etten, Jacob (2008). "Images of war: Using satellite images for human rights monitoring in Turkish Kurdistan". Disasters 32 (3): 449–466. doi:10.1111/j.1467-7717.2008.01049.x. 
  6. Nevo, E; Beiles, A; Kaplan, D. "Genetic diversity and environmental associations of wild emmer wheat, in Turkey". Heredity 61: 31–45. doi:10.1038/hdy.1988.88. 
  7. Van Bruinessen, M. "Between guerrilla war and political murder: The Workers' Party of Kurdistan". Middle East Report 153: 40–50. 
  8. Deborah, Rund; Tirza, Cohen; Dvora, Filon. "Evolution of a genetic disease in an ethnic isolate: beta-thalassemia in the Jews of Kurdistan". Proceedings of the National Academy of Sciences of the United States of America 88 (1): 310–314. doi:10.1073/pnas.88.1.310. 
  9. van Bruinessen, Martin. "Kurds, Turks and the Alevi revival in Turkey.". Middle East Report 200 (200): 7–10. doi:10.2307/3013260. 
  10. E. Fuller, Graham. "The Fate of the Kurds". Foreign Affairs 72 (2): 108–121. doi:10.2307/20045529. 
  11. MICHAEL, GUNTER. "The Kurdish Question in Perspective". World Affairs 166 (4): 197–205. doi:10.3200/WAFS.166.4.197-205. 
  12. Davis, P.H.. "Lake Van and Turkish Kurdistan: A Botanical Journey". The Geographical Journal 122 (2): 156–165. doi:10.2307/1790844. 
  13. "Kurdistan | region, Asia". Britannica.com. பார்க்கப்பட்ட நாள் 10 December 2017.
  14. Encyclopaedic Ethnography of Middle-East and Central Asia.
  15. van Bruinessen, Martin. "Kurdistan." Oxford Companion to the Politics of the World, 2nd edition. Joel Krieger, ed. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், 2001.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துருக்கிய_குர்திஸ்தான்&oldid=3316455" இலிருந்து மீள்விக்கப்பட்டது