துரி (சாதி)
| மொத்த மக்கள்தொகை | |
|---|---|
| 198,344 (2011 கணக்கெடுப்பு)[1] | |
| குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
| சார்க்கண்டு, பீகார், சத்தீசுகர், ஒடிசா, மேற்கு வங்காளம் | |
| மொழி(கள்) | |
| துரி மொழி, ஒடியா, சத்ரி, இலாரியா, போச்புரி, இந்தி | |
| சமயங்கள் | |
| இந்து சமயம் | |
| தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
| கிசான், சிங், சர்மா, குமார் |
துரி (Turi ) என்பது இந்தியாவின் சார்க்கண்ட்டு, பீகார், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் காணப்படும் ஒரு வகையான சாதி ஆகும்.[2] இவர்கள் பாரம்பரியமாக மூங்கில் மற்றும் விவசாயத்தின் மூலம் வீட்டு பொருட்களை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டனர்.[3]
சொற்பிறப்பியல்
[தொகு]துரி என்ற சொல் மூங்கிலிலிருந்து தயாரிக்கப்பட்ட டோக்ரி என்ற கூடை என்பதிலிருந்து பெறப்பட்டது. [3]
தோற்றம்
[தொகு]துரி பாரம்பரியமாக மூங்கிலிலிருந்து வீட்டு பொருட்களை தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தனர். அதாவது டோக்ரி (கூடை) (தூற்றும் முறம் போன்றவை).[3]
தற்போதைய சூழ்நிலை
[தொகு]துரி சாதி பல துணைக்குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மேலும் பல்வேறு அயல்நாட்டு இனக்குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். துரியின் குடும்பம் பெரும்பாலும் கணவன் வழிக் கூட்டத்தின் இருப்பிடத்தை மையமாகக் கொண்டது மற்றும் தந்தைவழி வம்சாவளி குடும்பம் ஆகும். இவர்கள் சாகுபடி வேலை, கூடை முடைதல் மற்றும் தொழிலாளி ஆகிய தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். ஒடியா, லாரியா, இந்தி மொழிகளைப் பேசுகிறார்கள். இவர்களின் திருவிழாக்கள் காளிபுசை, துர்காபூசை, நுவாக்கை, ராசா, தோலா, ரதசத்ரா, மகரம் ஆகியனவாகும். [3] நவீன காலத்தில், சந்தையில் ஏராளமான நெகிழிப் பொருள்கள் இருப்பதால், கூடைக்கான பாரம்பரிய வணிகம் ஆபத்தில் உள்ளது. ஆனால் மூங்கிலால் செய்யப்பட்ட பாரம்பரிய கூடை பண்டிகைகளின் போது மட்டும் தேவைப்படுகிறது. [4][5][6] 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, துரி மக்கள் தொகை 198,344 ஆகும்.
அதிகாரப்பூர்வ வகைப்பாடு
[தொகு]1931 ஆம் ஆண்டில் , பிரிட்டிசு ஆட்சிக் காலத்தில், அவர்கள் பழங்குடி இனத்தவர்களாக பட்டியலிடப்பட்டனர். 1936 ஆம் ஆண்டில் இவர்கள் பின்தங்கியவர்கள் என பட்டியலிடப்பட்டனர்.[7] பாட்னா பிரிவு, திர்கட்டு, வங்காளம், அசாரிபாக் மற்றும் மன்பும் ஆகியவற்றில், இவர்கள் பட்டியல் சாதியில் சேர்க்கப்பட்டனர்.[8] சுதந்திரத்திற்குப் பிறகு, ஒடிசா, சார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள பட்டியல் சாதிகளின் பட்டியலில் இவர்கள் சேர்க்கப்பட்டனர்.[9][10][11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Census of India". www.censusindia.gov.in. Office of the Registrar General & Census Commissioner, India. Retrieved 2022-08-28.
- ↑ "List of Scheduled Castes | Department of Social Justice and Empowerment - Government of India". socialjustice.gov.in. Retrieved 2025-02-20.
- 1 2 3 4 "Turi". SCSTRTI. Retrieved 28 August 2022.
- ↑ "तुरी जाति के पारंपरिक व्यवसाय पर मंडरा रहा खतरा, बांस के बने सामानों की बिक्री में आयी गिरावट". prabhat khabar. https://www.prabhatkhabar.com/state/jharkhand/chatra/the-traditional-occupation-of-turi-caste-is-in-danger-there-is-a-huge-decline-in-the-sale-of-bamboo-items-sam. பார்த்த நாள்: 28 August 2022."तुरी जाति के पारंपरिक व्यवसाय पर मंडरा रहा खतरा, बांस के बने सामानों की बिक्री में आयी गिरावट".
- ↑ "परंपरागत व्यवसाय पर आधुनिकता का साया, न मिल रहा रोजगार, न हो रही कमाई". zeenews. https://zeenews.india.com/hindi/india/madhya-pradesh-chhattisgarh/mp/modernity-took-away-employment-traditional-make-bamboo-things-stmp/1109232. பார்த்த நாள்: 28 August 2022.
- ↑ "रोजी-रोटी की वजह से बदलनी पड़ी जाति, बांस का सामान बनाकर पेट पालने वाले शख्स का छलका दर्द". abplive. https://www.abplive.com/states/chhattisgarh/surajpur-items-maker-of-bamboo-pain-tells-how-did-change-caste-from-turi-to-basor-ann-2063185/amp. பார்த்த நாள்: 28 August 2022.
- ↑ Nirmal Sengupta (14 May 1988). "Reappraising Tribal Movements: II: Legitimisation and Spread". Economic and Political Weekly. Retrieved 13 October 2022.
- ↑ "Government of India 1935 (Scheduled Caste) Order, 1936" (PDF). 30 April 1936. Retrieved 13 October 2022.
- ↑ "Schedule Caste Communities". scstrti. Retrieved 28 August 2022.
- ↑ "Jharkhand Caste List ST SC OBC EBC-1 EBC-2 [ PDF ]". jharnet. 15 August 2020. Retrieved 28 August 2022.
- ↑ "List of Scheduled Castes in West Bengal". wbxpress. 9 August 2022. Retrieved 28 August 2022.