துயென்சாங்
துயென்சாங் | |
|---|---|
மாவட்டத் தலைமையிடம் & பேரூராட்சி | |
சாங் நாகா மக்களின் கயிறு இழுக்கும் போட்டி | |
வடகிழக்கு இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் துயென்சாங் நகரத்தின் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 26°16′18″N 94°49′53″E / 26.271559°N 94.831384°E | |
| நாடு | |
| மாநிலம் | நாகாலாந்து |
| மாவட்டம் | துயென்சாங் மாவட்டம் |
| அரசு | |
| • வகை | பேரூராட்சி |
| • நிர்வாகம் | துயென்சாங் பேரூராட்சி மன்றம் |
| ஏற்றம் | 1,371 m (4,498 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 36,774 |
| மொழிகள் | |
| • அலுவல் மொழி | ஆங்கிலம் |
| • வட்டார மொழிகள் | சாங் மொழி, சங்கதம் மொழி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 798612 |
| வாகனப் பதிவு | NL.E2 & NL-03 |
| இணையதளம் | https://tuensang.nic.in/ |
துயென்சாங் (Tuensang), வடகிழக்கு இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் உள்ள துயென்சாங் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். இது மாநிலத் தலைநகரான கோகிமாவிற்கு வடகிழக்கே 214 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது கிழக்கு இமயமலைத் தொடரில் உள்ள இந்நகரம், கடல் மட்டத்திலிருந்து 1,371.6 மீட்டர் (4,498 அடி) உயரத்தில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15 வார்டுகளும், 6,960 குடியிருப்புகளும் கொண்ட துயென்சாங் நகரத்தின் மக்கள் தொகை 36,774 ஆகும். அதில் 19,471 ஆண்கள் மற்றும் 17,303 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 16% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 889 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 92% ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் பழங்குடிகள் 33,468 பேர் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 6.44%, இசுலாமியர் 1.47%, கிறித்தவர்கள் 91.71% மற்றும் பிற சமயத்தினர் 0.20% வீதம் உள்ளனர்.[1]
கல்வி
[தொகு]- சாவ் சாங் கல்லூரி
- லோயம் நினைவுக் கல்லூரி
- மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவனம்
- ஒரியண்டல் கல்லூரி
- இந்திராகாந்தி திறந்தவெளி கல்வி மையம்
போக்குவரத்து
[தொகு]மோகோக்சுங்கையும், இம்பாலையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 202 இந்நகரம் வழியாகச் செல்கிறது.[2][3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tuensang Population, Religion, Caste, Working Data Tuensang, Nagaland - Census 2011
- ↑ http://www.nagalandpost.com/ShowStory.aspx?npoststoryiden=UzEwMjYwNjE%3D-Z4PpCQa%2BHSg%3D1. [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://www.nagalandpost.com/ShowStory.aspx?npoststoryiden=UzEwMjU2MDk%3D-%2B367GH8sVU8%3D. பரணிடப்பட்டது 30 செப்டெம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Current News | Latest News | Breaking News | Nagaland News - MorungExpress.com - Citizens scan NH-155 road". Archived from the original on 2010-05-11. Retrieved 2010-06-08.