தும்புரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தும்புரு
கந்தர்வ பாடகர்
தேவநாகரிतुम्बुरु
சமசுகிருதம்Tumburu
வகைகந்தர்வர்
துணைரம்பா
இராமேஸ்வரத்தில் இராமரும் சீதையும் செய்யும் சிவலிங்க வழிபாட்டை காணும், குதிரை முகம் கொண்ட தும்புரு (நிற்பவர்களில் இரண்டாவது - இடது புறம்), இலக்குமணன், நாரதர் மற்றும் வீடணன்

தும்புரு (Tumburu (சமக்கிருதம்: तुम्बुरु), தேவலோகத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற குதிரை முகம் கொண்ட கந்தர்வ இன இசை வல்லுவனரும், பாடகரும் ஆவர்.[1] இவரது துணை ரம்பா ஆவார். இந்திரன் மற்றும் குபேரன் அவைக்களங்களின் இசையமைபாளரும், பாடகரும் ஆவார்.

பிறப்பும் சாதனைகளும்[தொகு]

முனிவர் காசிபர் – பிரதை இணையரின் நான்கு மகன்களில் மூத்தவர் தும்புரு, குதிரை முகமும், இனிமையான குரல் வளமும், அமைதியான நாவன்மையும் கொண்டர் ஆவார்.[1]

தும்புரு இசையமைத்து பாடுவதில் நாரதருக்கு நிகராகக் கருதப்படுகிறார். பாகவத புராணம் தும்புருவின் குரு நாரதர் என்கிறது.[2]

நாரதரும், தும்புருவும் அகில உலகங்களுக்குச் சென்று திருமாலின் பெருமைகளை இனிய இசையாலும், அமைதியான பேச்சாலும் பரப்புபவர்கள் என பாகவத புராணம் கூறுகிறது.

இராமாயணத்தில்[தொகு]

குபேரன் பல முறை வேண்டியும், தும்புரு, அரம்பையை குபேர லோகத்தில் கூட்டி வராத காரணத்தினால் கோபமுற்ற குபேரன், தும்புருவை தண்டகாரண்யத்தில் விராதன் எனும் பெரும் அரக்கனாக வாழ்ந்து, சீதையை கவர்ந்து செல்கையில், இராமன் மற்றும் இலக்குமணன் தொடர்பால் சாபவிமோசனம் பெற்றும் மீண்டும் கந்தர்வனாக மாறும் படி சாபம் பெற்றவர் தும்புரு.[3][4]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Mani, Vettam (1975). Puranic Encyclopaedia: A Comprehensive Dictionary With Special Reference to the Epic and Puranic Literature. Delhi: Motilal Banarsidass. பக். 798–9, 859. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8426-0822-2. https://archive.org/details/puranicencyclopa00maniuoft. 
  2. Dikshitar, V. R. Ramachandra (1995). The Puraṇa index. 3. Motilal Banarsidass Publishers. பக். 29. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120812758. 
  3. 1. விராதன் வதைப் படலம்
  4. "Valmiki Ramayana - Aranya Kanda in Prose Sarga 4". Archived from the original on 2017-05-10. பார்க்கப்பட்ட நாள் 2017-05-13.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தும்புரு&oldid=3801650" இலிருந்து மீள்விக்கப்பட்டது