உள்ளடக்கத்துக்குச் செல்

தும்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்னை நார் தனிப்படுத்தல் (கயிறு)

தும்பு (Coir) என்பது தென்னை மரத்தின், தேங்காய் கதம்பையில் (தேங்காயின் மேல்மட்டை) இருந்து பிரித்தெடுக்கப்படுவதாகும். தும்பில் கயிறு, மிதியடி, தூரிகை போன்றவைகள் தயாரிக்கப்படுகின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தில்[1] தேங்காய் கதம்பையில் இருந்து தும்பு தயாரித்து விற்பனை செய்யும் ஆலைகள் சுமார் 200 உள்ளன. குறிப்பாக ராசாக்கமங்கலம், மணக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆலைகள் அதிகம். ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள ஆலைகளில் கதம்பையில் இருந்து தும்புகள் பிரித்தெடுத்து பிரஷ் தயாரிக்க அனுப்புகின்றனர். மணக்குடி பகுதியில் இருக்கும் ஆலைகள், தும்புகளை பிரித்தெடுத்து மிதியடி, கயிறு தயாரிக்க அனுப்புகின்றனர்.

தேனி மாவட்டத்தில் தென்னை நார் (தும்பு) கயிறு தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. இவற்றிலிருந்து நார்க் கழிவுகள், அரபு நாடுகளில் தண்ணீர் பற்றாக்குறைக் காரணமாக, தென்னை மஞ்சுதும்பை மரங்களின் வேர்பகுதிகளில் பரப்பி தண்ணீர் பாய்ச்சுகின்றனர். நீரை உறிஞ்சிக்கொள்ளும் நார்த்தும்பு பல நாட்கள் ஈரத்தன்மையிலேயே இருக்கிறது.

மஞ்சு தும்பு

[தொகு]

மஞ்சு தும்பு (Cocopeat)தென்னை[2] மர வகை கரி. இது தென்னை மட்டையிலிருந்து தயாரிக்கப்படுகின்ற ஒரு கழிவுப் பொருளாகும். இது தனது எடையை விட 6 மடங்கு தண்ணீரை தன்னுள் ஈர்த்துக்கொள்ளும் தன்மையுடையது. ஒருகாலத்தில் வேண்டாத பொருளாக இருந்த தென்னை நார் (தும்பு) கழிவுகள், தற்போது அரபு நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதியாகின்றன.

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தும்பு&oldid=3732588" இலிருந்து மீள்விக்கப்பட்டது