தும்டியம்
தோற்றம்
தும்டியம் (Dumdyam) என்பது லெப்சா பெண்களின் பாரம்பரிய உடையாகும். இது கணுக்கால் வரை நீளமுள்ள ஆடையாகும். இது மென்மையான பருத்தி அல்லது பட்டுத் துணியால் ஒரே நிறத்தில் தைக்கப்பட்டிருக்கும். இதை அணியும்போது, ஒரு தோளில் மடித்து, மறு தோளில் குண்டூசி கொண்டு பொருத்தி, இடுப்புப் பட்டை அல்லது டகோவால் நிலைநிறுத்தப்படுகிறது. இதன் மேல் மீதமுள்ள துணித் தொங்கும். இதற்கு முரணான நிறத்தில் நீண்ட கைக் கொண்ட இரவிக்கை உள்ளே அணியப்படலாம். இது தற்காலத்தில் விழாக்கள் மற்றும் பண்டிகைக் காலங்களில் அணியப்படுகிறது.[1][2][3][4]

இதனையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Plaisier, Heleen (2007). A Grammar of Lepcha. Tibetan studies library: Languages of the greater Himalayan region. Vol. 5. Leiden, The Netherlands; Boston: Brill. p. 4. ISBN 978-90-04-15525-1.
- ↑ Dubey, S. M (1980). S. M. Dubey; P. K. Bordoloi; B. N. Borthakur (eds.). Family, marriage, and social change on the Indian fringe. Cosmo. pp. 53, 56. Retrieved 2012-10-30.
- ↑ Thakur, Rudranand (1988). Himalayan Lepchas. Archives Publishers, Distributors. p. 131. Retrieved 2012-10-30.
- ↑ Patra, Chittaranjan (1991). Present Buddhist tribals and vihāras in West Bengal. Sarkar & Co. p. 59.