தும்கூர் சுனந்தம்மா
தும்கூர் சுனந்தம்மா | |
---|---|
பிறப்பு | 1917 தும்கூர், இந்தியா |
இறப்பு | 27 சனவரி 2006 |
தொழில் | எழுத்தாளர் |
வகை | நகைச்சுவை |
தும்கூர் சுனந்தம்மா (பிறப்பு தும்கூர், 1917 – இறப்பு பெங்களூர், 27 சனவரி 2006) கன்னட மொழியின் இந்திய எழுத்தாளரும் நகைச்சுவையாளரும் ஆவார். இவர் கருநாடகச் சாகித்திய அகாதமி விருதைப் பெற்றவர்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]சுனந்தம்மா 1917-ஆம் ஆண்டு மைசூரில் உள்ள தும்கூரில் பிறந்தார்.[1] இவர் மைசூர் இராச்சியத்தின் ஒரு புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை து. இராமையா ஒரு மூத்த அரசு ஊழியராக இருந்தார்.
அந்த நேரத்தில் பெண் கல்விக்கு எதிரான சமூகக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், இவர் உயர்நிலைப் பள்ளி வரை படித்தார். இவருடைய வகுப்பில் ஒரே ஒரு பெண்ணாக இருந்த இவர், ஆண்களை விடச் சிறப்பாகச் செயல்பட்டார். இதனால் இவரைப் பள்ளியிலிருந்து நீக்குமாறு பள்ளி மாணவர்களின் பெற்றோரிடமிருந்து கணிசமான அழுத்தம் வந்தது. இவருக்கு 11 வயதில் திருமணம் நடந்தது.
தொழில்
[தொகு]சுனந்தம்மா குழந்தையாக இருக்கும்போதே, மக்கலா புசுதகா என்ற குழந்தைகள் பத்திரிகைக்காகக் கவிதை எழுதத் தொடங்கினார். 25 வயதில், புதிதாக நிறுவப்பட்ட நகைச்சுவை இதழான கொரவஞ்சியில் இவருடைய கட்டுரைகள் வெளிவரத் தொடங்கின. இவை விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டன.[1]
இவர் பெங்களூருக்குக் குடிபெயர்ந்தபோது, இவரது அண்டை வீட்டாரின், குறிப்பாக பசவனகுடி பெண்களின் நடுத்தர வர்க்க வாழ்க்கையைப் பற்றிய இவருடைய அவதானிப்புகள் இவரது எழுத்துக்களில் முக்கிய பங்கு வகிக்கத் தொடங்கின.[2] இவை வலிமையானவை மற்றும் காரமானவை என்று பாராட்டப்பட்டன.[3]
சுனந்தம்மா அனைத்திந்திய வானொலிக்காக நாடகங்களை எழுதினார்.[4] இவருடையப் பல படைப்புகள் நாடகத்திற்காக மற்றவர்களால் தழுவி எடுக்கப்பட்டன. ஆல்சு வெல் (எல்லாம் சரி), சுனந்தம்மாவின் சிறுகதையான ஆதடெல்லா ஒலித்தே அடிப்படையாகக் கொண்ட சுந்தரின் கன்னட நாடகத்தின் ஆங்கில மொழியாக்கம். இதனைப் பிரமோத் சிகான் இயக்க 2008-இல் வெளியானது.[5] ஹீகாட்ரே ஹேகே? கே.ஒய். நாராயண சுவாமி எழுதி பிரமோத் சிகான் இயக்கிய இந்த நாடகம், அக்டோபர் 2011-இல் பெங்களூரில் நிகழ்த்தப்பட்டது.[6]
கௌரவங்கள்
[தொகு]1995ஆம் ஆண்டு கருநாடக அரசால் தான சிந்தாமணி அத்திமாபே விருதைப் பெற்ற முதல் எழுத்தாளர் சுனந்தம்மா ஆவார்.[7] 1979-ஆம் ஆண்டில், சுனந்தம்மா கருநாடக லேகாக்கியாரா சங்கத்தின் (கருநாடகப் பெண் எழுத்தாளர்கள் சங்கம்) முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1981-இல் கருநாடகச் சாகித்திய அகாதமி விருதைப் பெற்றார்.[1] 2004-ஆம் ஆண்டில், கருநாடக பெண் எழுத்தாளர் சங்கத்தின் இலக்கிய விருதான அனுபமா பிரசசுதி இவருக்கு வழங்கப்பட்டது.[8]
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்
[தொகு]- ஜம்பத சீலா
- பன்னாடா சிட்டே
- பெப்பரமெண்டு
- முத்தின செண்டா
- ருட்டி காடி
- விருக்ஷ வாகனம்
- நன்னா அத்தேகிரி
- டாக்டர் எம். சிவராம் – ஒரு வாழ்க்கை வரலாறு
- தெனாலி ராமகிருஷ்ணன் – ஒரு குழந்தைகள் வாழ்க்கை வரலாறு
- சமய சிந்து
- கன்னியாமனிகலிகே கந்துபிதானே டேயா
- யு. என். குண்டு ராவ் (தொகுப்பாசிரியர்) 2006. பெசுடு ஆப் சுனாந்தாமா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Mohan Lal, ed. (1992). Encyclopaedia of Indian Literature: Sasay to Zorgot. Vol. V. Sahitya Akademi. p. 4224. ISBN 978-81-260-1221-3.
- ↑ Ammu Joseph (2003). Storylines: Conversations with Women Writers. Women's World India and Asmita Resource Centre for Women. p. 274.
- ↑ The Illustrated Weekly of India. Vol. 102. Bennett, Coleman & Company. October 1981. p. 37.
- ↑ "T. Sunandamma is dead". The Hindu. 29 January 2006. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/t-sunandamma-is-dead/article3246507.ece."T. Sunandamma is dead". The Hindu. 29 January 2006.
- ↑ "A happy couple and time pass". Mid-Day. 6 October 2008. http://archive.mid-day.com/news/2008/oct/061008-alls-well-comedy-plays-ranga-shankara-theatre-reviews.htm.
- ↑ "In Brief: Kannada play". Deccan Herald. 21 October 2011. http://www.deccanherald.com/content/199544/in-brief.html.
- ↑ "Daana Chintamani Attimabbe Awards". Department of Kannada and Culture Official website of Government of Karnataka. Retrieved 23 Oct 2020.
- ↑ "Women writers in Kannada get noticed, by The New Indian Express". July 2014.