துமெரில் உடும்பு
| துமெரில் உடும்பு | |
|---|---|
| துமெரில் உடும்பு சோபியா அருங்காட்சியகத்தில் | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | வரானிடே |
| பேரினம்: | வரானசு |
| இனம்: | வ. துமெரிலி |
| இருசொற் பெயரீடு | |
| வரானசு துமெரிலி (செல்ஜெல், 1839)[3][4] | |
| வேறு பெயர்கள் [5] | |
| |
துமெரில் உடும்பு (Dumeril 's Monitor) (பழுப்பு கழுத்து உடும்பு என்றும் அழைக்கப்படுகிறது) என்பது வாரனிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு உடும்பு ஆகும்.[6] இந்தச் சிற்றினம் தென்கிழக்கு ஆசியாவில் மட்டுமே காணப்படுகிறது.
சொற்பிறப்பியல்
[தொகு]பிரெஞ்சு விலங்கியல் நிபுணர் ஆண்ட்ரே மேரி கான்சுடன்ட் துமெரிலி நினைவாக துமெரிலி என்ற சிற்றினப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.[7]
தாய்லாந்தில், வ. துமெரிலி என்பது குழந்தைகளின் நாட்டுப்புற பாடல்களில் தோன்றிய ஒரு விலங்கு. இது பொதுவான பெயரான டுடு (тутту) என்று அழைக்கப்படுகிறது.[8]
வகைப்பாட்டியல்
[தொகு]வரானசு துமெரிலி என்பது எம்பகுசியா துணைப்பேரினத்திற்குள் உள்ள உடும்புச் சிற்றினமாகும்.
துணையினங்கள் "வரானசு துமெரிலி கெட்டோரோபோலிசு"
[தொகு]இரண்டு துணையினங்கள் இச்சிற்றினத்தின் கீழ் விவரிக்கப்பட்டுள்ளன.
- வரானசு துமெரிலி துமெரிலி (செலெகல், 1839)
- வரானசு துமெரிலி கெட்டோரோபோலிசு பவுலெஞ்சர், 1892[4]
1892ஆம் ஆண்டில், வ. கெட்டோரோபோலிசு பேரினத்திற்கு சார்லசு கோசு என்பவருக்குச் சொந்தமான போலி உயிரி மாதிரியின் அடிப்படையில் பவுலெஞ்சர் பெயரிட்டார். இது போர்னியோவின் துலிட் மலையிலிருந்து சேகரிக்கப்பட்டது. இதே இடத்தைச் சேர்ந்த இரண்டு கூடுதல் மாதிரிகளுடன் வகைப்பாட்டியல் முத்திரை இணைக்கப்பட்டது. 1942ஆம் ஆண்டில், மெர்டன்சு இதை வ. து. கெட்டோரோபோலிசு என்று பட்டியலிட்டார். இது வ. துமெரிலியின் துணையினமாகும்.[9]
1993ஆம் ஆண்டில், இசுப்ராக்லேண்ட் வ. து. கெட்டோரோபோலிசை, வ. து. துமெரிலின் ஒத்த பெயராக வகைப்படுத்தினார். இரண்டு ஊக துணையினங்களின் நிறைவகை உள்ளிட்ட மாதிரிகளை ஆய்வு செய்த பிறகு. வ. து. கெட்டோரோபோலிசு நிறைவகை தோற்றம் பதனச் செயல்முறையால் ஏற்படும் மாற்றங்களைக் கணக்கிடும்போது கூட சற்றே விசித்திரமாகக் கருதப்பட்டாலும், முன்பு வ. து. கெட்டோரோபோலிசுக்கு தனித்துவமானது என்று விவரிக்கப்பட்ட பண்புகள் வ. து. துமெரிலி மாறுபாட்டின் வரம்பிற்குள் பொருந்துவதாகக் கண்டறியப்பட்டது. இருப்பினும் வ. துமெரிலி எந்த துணையினத்தையும் கொண்டிருக்கவில்லை.[9]
பரவல்
[தொகு]துமெரில் உடும்பு தெற்கு மியான்மர், கிரா இசுத்மசின் வடக்கே தாய்லாந்தின்[10] காஞ்சனபுரி மாகாணம் வரையும், அதே போல் தீபகற்ப மலேசியா, சிங்கப்பூர், போர்னியோ, சுமத்ரா, ரியா, பங்க-பெலிடுங் மற்றும் இந்தோனேசியாவின் பிற சிறிய தீவுகள் முழுவதும் காணப்படுகிறது.[5]
வாழ்விடம்
[தொகு]வ. துமெரிலியின் விருப்பமான இயற்கையான வாழ்விடம் அதிக ஈரப்பதம்[11] கொண்ட அடர்ந்த பசுமையான காடுகளும் சதுப்பு நில சதுப்பு நிலங்களும்.[12][1]
விளக்கம்
[தொகு]முதிர்ச்சியடைந்த உடும்பு சுமார் 4.5 அடி (1.4 m) நீளம் வரை (வால் நீளம் உட்பட) வளரக்கூடியது.
முதிர்ச்சியடைந்த துமெரிலி உடும்பு பெரும்பாலும் அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும். அவ்வப்போது பிரகாசமான தெளிவற்ற குறுக்குப்பட்டைகளுடன் காணப்படும். முக்கியமாக இதன் நிறம் அடர் கருப்பு நிறத்திலிருக்கும். இதன் பின்புறத்தில் பல மஞ்சள் குறுக்கு பட்டைகள் காணப்படும். இளம் வயது உடும்பின் தலை பளபளப்பான ஆரஞ்சு-சிவப்பு அல்லது சில நேரங்களில் மஞ்சள் நிறத்திலிருக்கும். இந்த இளம் வயது நிறம் 4 முதல் 8 வாரங்களுக்குப் பிறகு மறைந்துவிடும்.[13] நீண்ட வால் பக்கவாட்டில் தட்டையாக்கப்பட்டு சுருக்கப்படுகிறது.[14]
பெரிய பிடறிச் செதில்கள் காரணமாக இது சில நேரங்களில் கருப்பு கழுத்து உடும்புடன் இனங்காண்பதில் குழப்பத்தினை ஏற்படுத்தும். துமெரிலி உடும்பு சில நேரங்களில் பழுப்பு கழுத்து உடும்பு என அழைக்கப்படுகின்றன.[9]
உணவு
[தொகு]வ. துமெரிலி நண்டை விரும்பு உண்ணக்கூடியது.[10][15] இருப்பினும், நத்தைகள், பிற மெல்லுடலிகள், பூச்சிகள், மீன், தவளைகள், ஆமை முட்டைகள், பறவைகள் மற்றும் சிறிய கொறித்துண்ணிகளை சாப்பிடுவது கண்டறியப்பட்டுள்ளது.[12][16] மற்ற உடும்புகளுடன் ஒப்பிடும்போது இந்த சிற்றினத்தைப் பற்றிய தகவல்கள் அதிகம் அறியப்படவில்லை.[13]
நடத்தை
[தொகு]வ. துமெரிலி என்பது மரங்களில் வாழக்கூடிய பகலாடி உயிரி ஆகும்.[1]
இனப்பெருக்கம்
[தொகு]வ. துமெரிலி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடியது.[5] ஒரு முறை நான்கு முதல் 23 முட்டைகள் வரையிடும்.[1] ஆண்டிற்கு மூன்று முறைகள் முட்டையிடும்.[14] பொறித்த குஞ்சுகளின் மூக்கு எச்சவாய் நீளம் 8 செ.மீ. ஆகும். வாலின் நீளம் உடலின் நீளத்தினை விட அதிகம்.[1]
பாதுகாப்பு
[தொகு]இந்த சிற்றினம் வெற்றிகரமாக கொல்லைப்படுத்தப்பட்டு, அதாவது உயிரியல் பூங்காக்கள் மற்றும் தனியார் சேகரிப்புகளில் வளர்க்கப்பட்டுள்ளன. செல்லப்பிராணி வர்த்தகத்தில் இதன் தேவை காரணமாகவும், இந்தோனேசியா தேசிய அளவில் பாதுகாக்கப்பட்ட இனமாக இல்லாததாலும், இந்தோனேசியா 2010 மற்றும் 2018 க்கு இடையில் ஆண்டுக்கு 1,060 துமெரிலி உடும்புகளை ஏற்றுமதி செய்துள்ளது. 1997 முதல் ஐரோப்பிய ஒன்றியம் காட்டில் பிடிபட்ட துமெரிலி உடும்புகளை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது.[14] 1976ஆம் ஆண்டு முதல் செல்லப்பிராணி வர்த்தகத்திற்காக இந்த இனங்கள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு வருகின்றன.[9]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 5 Iskandar, D.; Wogan, G.; Panitvong, N.; Grismer, L.; Quah, E.; Cota, M.; Kamsi, M. (2021). "Varanus dumerilii". IUCN Red List of Threatened Species 2021. doi:10.2305/IUCN.UK.2021-2.RLTS.T83777732A83777736.en. https://www.iucnredlist.org/species/83777732/83777736. பார்த்த நாள்: 26 April 2023.
- ↑ "Appendices". CITES. Retrieved 2022-01-14.
- ↑ "Varanus dumerilii". ITIS.gov.
- 1 2 Ondrej Zicha. "BioLib: Biological library". Biolib. Retrieved 14 April 2023.
- 1 2 3 சிற்றினம் Varanus dumerilii at The Reptile Database www.reptile-database.org
- ↑ "EOL.org". Archived from the original on 2010-04-12. Retrieved 2010-04-18.
- ↑ Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5. (Varanus dumerilii, p. 77).
- ↑ "ตุ๊ดตู่" (in Thai). Sanook.com. Retrieved 16 June 2016.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link) - 1 2 3 4 Sprackland RG (1993). "The taxonomic status of the monitor lizard Varanus dumerilii heteropholis BOULENGER 1892 (Reptilia: Varanidae)". Sarawak Museum Journal 44 (65): 113-121.
- 1 2 Cota M, Chan-ard T, Mekchai S, Laoteaw S (2008). "Geographical Distribution, Instinctive Feeding Behavior and Report of Nocturnal Activity of Varanus dumerilii in Thailand". Biawak 2 (4): 152-158.
- ↑ Komsorn Lauprasert, Kumthorn Thirakupt K (2001). "Species Diversity and Proposed Status of Monitor Lizards (Family Varanidae) in Southern Thailand". Natural History Journal of Chulalongkorn University 1 (1): 39-46.
- 1 2 "Lincoln Children's Zoo". Archived from the original on 2009-06-25. Retrieved 2010-04-18.
- 1 2 "Monitor-lizards.net". Archived from the original on 2010-05-19.
- 1 2 3 Auliya, Marc; Koch, André (2020). Visual Identification Guide for the Monitor Lizard Species of the World (Genus Varanus) (552 ed.). DE: Bundesamt für Naturschutz. doi:10.19217/skr552. ISBN 978-3-89624-290-7.
- ↑ Krebs U (1979). "Der Dumeril-Waran (Varanus dumerilii), ein spezialisierter Krabbenfresser? ". Salamandra 15 (3): 146-157. (in German).
- ↑ "Varanus Dumerilii". biocyclopedia.com. Retrieved 14 April 2023.
மேலும் வாசிக்க
[தொகு]- Amer, Sayed A. M.; Kumazawa, Yoshinori (2008). "Timing of a mtDNA gene rearrangement and intercontinental dispersal of varanid lizards". Genes Genet. Syst. 83: 275–280.
- Auffenberg W (1988). Gray's monitor lizard. Gainesville: University of Florida.
- Ávalos, J. de; Martínez Carrión, P. (1997). "Warane ". Reptilia (Münster) 2 (5): 16-21. (in German).
- Barbour T (1921). "Aquatic skinks and arboreal monitors". Copeia 1921 (1): 42-44.
- George Albert Boulenger (1885). Catalogue of lizards in the British Museum (Natural History). Second Edition. Volume II ... Varanidæ ... London: Trustees of the British Museum (Natural History). (Taylor and Francis, printers). xiii + 497 pp. + Plates I-XXIV. (Varanus dumerilii, pp. 312–313).
- Brandenberg T (1983). Monitors in the Indo-Australian Archipelago. Leiden: E.J. Brill. 121 pp.
- Coborn, John (1987). Snakes and lizards: Their care and breeding in captivity. Newton Abbott: David and Charles Publishing.
- Michael Cota, Tanya Chan-ard , Mekchai S, Laoteaw S (2008). "Geographical Distribution, Instinctive Feeding Behavior and Report of Nocturnal Activity of Varanus dumerilii in Thailand". Biawak 2 (4): 152-158.
- Merel J. Cox, Peter Paul van Dijk, Jarujin Nabhitabhata, Kumthorn Thirakhupt (1998). A Photographic Guide to Snakes and other Reptiles of Peninsular Malaysia, Singapore and Thailand. Sanibel Island, Florida: Ralph Curtis Books Publishing. 144 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0883590430.
- Davis R, Darling R, Darlington A (1986). "Ritualised combat in captive V. dumerilii ". Herpetological Review 17 (4): 85-86.
- Davis RB, Phillips LG (1991). "A method of sexing Dumeril's monitor Varanus dumerili ". Herp. Review 22 (1): 18-19.
- Harrison JL, Boo-Liat L (1957). "Monitors of Malaya". Malay Nature Journal 12 (1): 1-10.
- Horn H-G, Schulz B (1977). "Varanus dumerilii, wie ihn nicht jeder kennt ". Das Aquarium 11 (9): 37-38. (in German).
- Lekagul B (1969). "Monitors of Thailand". Conservation News of S.E. Asia 8: 31-32.
- Losos JB, Greene HW (1988). "Ecological and evolutionary implications of diet in monitor lizards". Biological Journal of the Linnean Society 35: 379-407.
- Mertens R (1942). "Die Familie der Waranae (Varanidae) ". Abhandlungen der Senckenberischen Naturforschenden Gesellschaft 462; 465; 466. (in German).
- Nutphand W (no date). The Monitors of Thailand. Bangkok: Mitphadung Publishing Office.
- Pitman CRS (1962). "More snake and lizard predators of birds". Bulletin of the British Ornithologists' Club 82 (3): 45-55.
- Radford L, Payne FL (1989). "The reproduction and management of Varanus dumerilii ". International Zoo Yearbook 28: 153-155.
- Raven HC (1946). "Predators eating green turtle eggs in the East Indies". Copeia 1946 (1): 48.
- de Rooij N (1915). The Reptiles of the Indo-Australian Archipelago. Leiden: E.J. Brill.
- Schlegel H (1839). Abbildungen neuer oder unvollständig bekannter AMPHIBIEN, nach der Natur oder dem Leben entworfen herausgegeben und mit einem erläuternden Texte begleitet. Düsseldorf: Arnz & Comp. xiv + 141 pp. (Monitor dumerilii, new species, p. 78). (in German).
- Smith MA (1922). "On a Collection of Reptiles and Batrachians from the mountains of Pahang, Malay Peninsula". Journal of the Federated Malay States 10: 263-282. (Varanus dumerilii, p. 269).
- Smith HC (1930). "The monitor lizards of Burma". Journal of the Bombay Natural History Society 34: 367-373.
- Taylor EH (1963). "Lizards of Thailand". University of Kansas Science Bulletin 44 (14): 687-1077. (Varanus dumerilii, pp. 915, 918-920).
- Sprackland RG (1976). "Notes on Dumeril's monitor lizard Varanus dumerili (Schlegel)". Sarawak Museum Journal 24 (45): 287-291.
