உள்ளடக்கத்துக்குச் செல்

துமிலன் செல்வகுமாரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துமிலன்
பிறப்பு(1982-02-21)பெப்ரவரி 21, 1982
புலோலிமேற்கு, ஆத்தியடி. பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
மற்ற பெயர்கள்துமி
கல்விVolontariat (Journalism)

Fachinformatiker im Bereich “Systemintegrator for Infranet”,

Erasmus-Widmann-Gymnasium, Schwäbisch Hall, Germany
அறியப்படுவதுபத்திரிகையாளர், புகைப்படப்பிடிப்பாளர், எழுத்தாளர்
சமயம்இந்து
வலைத்தளம்
http://thumi.com/

துமிலன் செல்வகுமாரன் (பிறப்பு: பெப்ரவரி 21, 1982) இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜெர்மனியப் பத்திரிகையாளரும், புகைப்படப்பிடிப்பாளரும், எழுத்தாளரும் ஆவார். இவர் தற்சமயம் ஜெர்மனியில் வசித்து வருகிறார்.

வாழ்க்கைச் சுருக்கம்

[தொகு]

துமிலன் இலங்கையின் வடபுலத்தில் அமைந்துள்ள மேலைப்புலோலியூர், பருத்தித்துறை, ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மே, 1986 இல் இருந்து ஜெர்மனியில் வசித்து வருகிறார். இவர் ஆரம்பத்தில் கணினித்துறை சம்பந்தமாகக் கற்றிருந்தாலும், பத்திரிகைத்துறை மீது உள்ள ஆர்வத்தால் மீண்டும் பத்திரிகைத்துறை சம்பந்தமான மேற்படிப்பை மேற்கொண்டு ஜனவரி 2006 இல் இருந்து Schwäbisch Hall இல் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் Haller Tagblatt என்ற ஜெர்மனியப் பத்திரிகையின் ஆசிரியராகக் கடமையாற்றுகிறார். இவரது ஆக்கங்களும், புகைப்படங்களும் ஜெர்மனியில் இருந்து வெளிவரும் பல பத்திரிகைகளிலும், இணையத்தளங்கிலும் இடம் பெற்றுள்ளன.

கூ-குளுக்ஸ்-கிளான்

[தொகு]

இவர் 2012 இல், யேர்மனியில் இயங்கும் கூ-குளுக்ஸ்-கிளான் (Ku-Klux-Klan) என்ற அமைப்புடன் தொடர்புடைய இரகசிய முகவர்களை அணுகி, அவர்களுடன் தொடர்பு கொண்டு சில இரகசியத்தகவல்களைச் சேகரித்து, பத்திரிகையில் எழுதத் தொடங்கியதால் நியோநாசி என்று அழைக்கப்படும் தேசிய சோசலிய திரைமறைவு அமைப்புக்கும் (Nationalsozialistischer Untergrund (NSU)) கூ-குளுக்ஸ்-கிளான் என்ற அமைப்புக்குமான தொடர்புகளும், மறைந்திருந்த பல தகவல்களும் பொலிஸ்துறைக்குத் தெரியவந்தன.[1] இது விடயமான பல இரகசியத்தகவல்களுடனான Geheimsache NSU என்ற நூலை இவரும் இன்னும் ஒன்பது யேர்மனிய எழுத்தாளர்களும் இணைந்து எழுதியுள்ளார்கள். இந்நூல் மே 26, 2014 இல் வெளிவந்துள்ளது.[2]

விருதுகள்

[தொகு]

துமிலன் செல்வகுமாரனுக்கு பத்திரிகைத் துறையில் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான Stern Award (Henri-Nannen Award), ஜூன் 2024 இல் யேர்மனியின் Hamburg நகரில் வழங்கப்பட்டது. காவற்துறையினரால் சாதாரணமரணம் என விடப்பட்ட மரணத்தின் தடயங்களை புலனாய்வு செய்து, ஆராய்ந்து, அது தற்செயலான மரணம் அல்ல, அது தொடர் கொலையாளியால் செய்யப்பட்ட கொலை என நிரூபித்து, காவற்துறையினரின் அசிரத்தையை வெளிப்படுத்தி எழுதிய Polizeibeamte im Blindflug என்ற கட்டுரைக்காகவே 2024 ம் ஆண்டுக்கான இவ்விருது இவருக்கு வழங்கப்பட்டது. [3] [4]

யேர்மனிய எழுத்தாளர்களுடன் இணைந்து இவர் எழுதிய நூல்கள்

[தொகு]
  • Ende der Aufklärung: die offene Wunde NSU. (+ Andreas Förster (Journalist), Thomas Moser) Klöpfer & Meyer Verlag, Tübingen 2018, ISBN 978-3-86351-479-2
  • Geheimsache NSU: Zehn Morde, von Aufklärung keine Spur. (+ Andreas Förster (Journalist), Hajo Funke, Rainer Nübel, Thomas Moser) Klöpfer & Meyer Verlag, Tübingen 2014, ISBN 978-3-86351-086-2
  • Schreddern, Spitzeln, Staatsversagen: Wie rechter Terror, Behördenkumpanei und Rassismus aus der Mitte zusammengehe[5] 31.03.2013* Schreddern, Spitzeln, Staatsversagen: Wie rechter Terror, Behördenkumpanei und Rassismus aus der Mitte zusammengehe[6] 31.03.2013

புகைப்படங்களுடன் வெளிவந்த நூல்கள்

[தொகு]

புகைப்படங்களுடன் வெளிவந்த இதழ்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-05-31. Retrieved 2014-05-29.
  2. http://www.amazon.de/Geheimsache-NSU-Morde-Aufkl%C3%A4rung-keine/dp/3863510860/ref=sr_1_1?ie=UTF8&qid=1401400920&sr=8-1&keywords=geheimsache+nsu
  3. "Stern-Preis 2024: Die ausgezeichneten Journalistinnen und Journalisten-Thumilan Selvakumaran erhält den Preis für "Polizeibeamte im Blindflug",". "stern.de. ஜூன், 2024. https://www.stern.de/kultur/stern-preis-2024--die-ausgezeichneten-journalistinnen-und-journalisten_34794100-34794054.html. 
  4. "SÜDWEST PRESSE Journalist Thumilan Selvakumaran erhält Stern-Preis,". "Südwest Presse. 13, ஜூன் 2024. https://neue-pressegesellschaft.de/2024/06/13/suedwest-presse-journalist-selvakumaran-erhaelt-stern-preis/. 
  5. http://www.amazon.de/Schreddern-Spitzeln-Staatsversagen-Beh%C3%B6rdenkumpanei-zusammengehen/dp/3899655508/ref=sr_1_1 ie=UTF8&qid=1401402364&sr=8-1&keywords=Schreddern%2C+Spitzeln%2C+Staatsversagen
  6. http://www.amazon.de/Schreddern-Spitzeln-Staatsversagen-Beh%C3%B6rdenkumpanei-zusammengehen/dp/3899655508/ref=sr_1_1?ie=UTF8&qid=1401402364&sr=8-1&keywords=Schreddern%2C+Spitzeln%2C+Staatsversagen
"https://ta.wikipedia.org/w/index.php?title=துமிலன்_செல்வகுமாரன்&oldid=4259313" இலிருந்து மீள்விக்கப்பட்டது