உள்ளடக்கத்துக்குச் செல்

துப்பாக்கிச் சூடு இல்லாத மண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துப்பாக்கிச் சூடு இல்லாத மண்டலம்
நோ ஃபயர் சோன் முகநூல் முகப்புப் படம்
வகைஆவணப்படம்
இயக்கம்காலும் மெக்ரே
கதைசொல்லிரூஃபஸ் செவெல்
பின்னணி இசைவெய்ன் ராபர்ட்ஸ்
நாடுஐக்கிய இராச்சியம்
தயாரிப்பு
நிருவாக தயாரிப்புகிறிஸ் ஷா, டோரதி பைர்ன், சாண்ட்ரா விப்பம்
தயாரிப்பாளர்கள்ஜோ சேல்
படப்பிடிப்பு தளங்கள்இலங்கை
ஐக்கிய இராச்சியம்
தொகுப்புமைக்கேல் நோலெட்
ஓட்டம்49 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைசேனல் 4
Chronology
தொடர்புடைய தொடர்கள்இலங்கையின் கொலைக்களங்கள்: தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்
வெளியிணைப்புகள்
இணையதளம்

துப்பாக்கிச் சூடு இல்லாத மண்டலம்: இலங்கையின் கொலைக்களங்களில் (No Fire Zone: In the Killing Fields of Sri Lanka) என்பது ஈழப் போரின் இறுதி வாரங்கள் குறித்த ஒரு புலனாய்வு ஆவணப்படமாகும். சேனல் 4 வெளியிட்ட இந்த ஆவணப்படம், 2008 செப்டம்பர் முதல் 2009 ஆம் ஆண்டு போர் முடியும் வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கியதாகும். இதில் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் பிரபாகரன் உட்பட ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கைத் தரைப்படையால் ஷெல் தாக்குதல்களாலும், நீதிக்குப் புறம்பான மரணதண்டனைகளாலும் கொல்லப்பட்டது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. ஆவணப்படத்தில் உள்ள குற்றச்சாட்டுகளை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது. இருப்பினும், 2015 அக்டோபர் 21 அன்று பிபிசி வெளியிட்ட செய்தியில், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட இலங்கை நீதிபதியான மேக்ஸ்வெல் பரணகம, விடுதலைப் புலிகளுடனான நீண்ட மோதலின் போது இராணுவம் போர்க்குற்றங்களைச் செய்து குறித்த குற்றச்சாட்டுகள் "நம்பகமானவை" என்று கூறினார். மேலும் நோ ஃபயர் சோன் மூலம் பெறப்பட்ட காட்சிகளில் - கைதிகள் நிர்வாணமாகவும், கண்கள் கட்டப்பட்டும், கைகள் கட்டப்பட்டும், படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பது - உண்மையானவை என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக அவர் கூறினார். [1] [2] [3] [4] [5]

சுருக்கம்

[தொகு]

இந்த ஆவணப்படம் மூன்றாண்டு கால புலன் விசாரணைக்குப் பிறகு உருவானதாகும். இது 26 ஆண்டுகால இலங்கை உள்நாட்டுப் போரின் பயங்கரமான இறுதி மாதங்கள் குறித்துச் சொல்கிறது. இந்த ஆவணப்படமானது இதுவரை கண்டிராத, மனதிற்கு மிகவும் தொந்தரவான காணொளி ஆதாரங்கள் மூலம், போர் பகுதியில் வாழ்ந்த மக்களால் சொல்லப்படுகிறது. இந்தக் காட்சிகளில் போர்க்குற்றங்கள், விசாரணையற்ற மரணதண்டணைகள், சித்திரவதைகள், பாலியல் வன்முறை ஆகியவற்றின் நேரடி ஆதாரங்களாக உள்ளன. மேலும் படத்தின் முதன்மைப் பகுதியாக நரகமான இறுதி 138 நாட்கள் குறித்த பகுதிகள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றவாளிகள் இருவரின் செல்பேசிகள் மற்றும் சிறிய ஒளிப்படமிகளில் பதிவு செய்த காணொளிகளை உள்ளடக்கியது.

நோ ஃபயர் சோன் திரைப்படத்தை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட காலம் மெக்ரே இயக்கியுள்ளார். [6] இவர் பீபாடி [7] மற்றும் கொலம்பியா டுபோன்ட் பிராட்காஸ்ட் ஜர்னலிசம் விருது பெற்றவர். [8] மேலும் கிரெய்ர்சன் [9] மற்றும் பாஃப்டா விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். இது ஏற்கனவே பல விருதுகளைப் பெற்றுள்ளது மேலும் 2014 ஆம் ஆண்டுக்கான சர்வதேச எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. [10]

இது சொலிசையாளர் மாதங்கி அருள்பிரகாசம் [11], பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரன் போன்ற பல்வேறு ஆளுமைகளால் பரவலாகப் பாராட்டப்பட்டுள்ளது, அவர் கூறுகையில்: "நான் பார்த்த மிகவும் மனதை உறைய வைக்கும் ஆவணப்படங்களில் ஒன்று நோ ஃபயர் சோன் ... "

ஆவணப்படம்

[தொகு]

2013 மார்ச்சில், இந்த ஆவணப்படத்தை அதன் இயக்குனர் கேலம் மெக்ரேவால் ஜெனீவாவில் நடந்த மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றத்தின் 22வது அமர்வில் திரையிட்டார். [12]

இலங்கையுடனான நட்புறவைப் பாதிக்கும் என்பதால், இந்தியத் திரைப்பட தணிகை வாரியம் இந்தியாவில் இந்தத் திரைப்படத்தைத் தடை செய்தது. இதனால் இந்தப் படம் இந்தியாவில் வெளியிடப்படவில்லை. [13] தணிக்கை வாரியத்தின் முடிவை எதிர்க்கும் விதமாக, இந்தியா மற்றும் மலேசியாவிலும், இலங்கை மற்றும் நேபாளத்திலும் நோ ஃபயர் சோன் இலவசமாக இணையத்தில் வெளியிடப்பட்டது.

நவம்பர் 2014 இல், இசைக்கலைஞர் மாதங்கி அருள்பிரகாசம், "நோ ஃபயர் சோன்" திரைப்படத்தை "எனக்கு ஊடகத் துறையில் நம்பிக்கையைத் தரும் ஒரே படம்" என்று விவரித்தார். இது தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கான மிக முக்கியமான ஆதாரம் மட்டுமல்ல, இது உண்மையில் அவர்களின் வரலாற்றின் ஒரு பகுதியாக மாறிவிட்டது."

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sri Lanka judge says war crimes claims are 'credible'". 20 October 2015. https://www.bbc.co.uk/news/world-asia-34589244. 
  2. "No Fire Zone: In the Killing Fields of Sri Lanka". pulitzercenter.org. Retrieved 19 February 2013.
  3. "Handed a snack, and then executed: the last hours of the 12-year-old son of a Tamil Tiger". The Independent. 18 February 2013. Archived from the original on 21 June 2022. Retrieved 19 February 2013.
  4. "Channel 4 releases documentary evidence on SL war crime". www.Tamilnet.com. 19 February 2013. Retrieved 19 February 2013.
  5. "This is proof, beyond reasonable doubt, of the execution of a child – not a battlefield death". The Independent. 18 February 2013. Archived from the original on 21 June 2022. Retrieved 19 February 2013.
  6. "ITN Team Nominated for Nobel Peace Prize". Broadcast Now. http://www.broadcastnow.co.uk/itn-team-nominated-for-nobel-peace-prize/5037484.article. பார்த்த நாள்: 10 December 2014. 
  7. "Peabody Award for Sri Lanka's Killing Fields". Channel 4. Retrieved 10 December 2014.
  8. "2012 Alfred I. duPont-Columbia Award winners announced". Columbia Journalism school. Archived from the original on 14 October 2012. Retrieved 10 December 2014.
  9. "Grierson Awards Shortlist 2013". The Grierson Trust. Archived from the original on 10 December 2014. Retrieved 10 December 2014.
  10. "International Emmy Award Nominees 2014". International Emmy Awards. Archived from the original on 25 December 2011. Retrieved 10 December 2014.
  11. "M.I.A Website". M.I.A Official site. Retrieved 10 December 2014.
  12. "Exposed in Geneva: Doublespeak of Human Rights Watch, Amnesty International and FIFDH". Asian Times. 2 February 2013. 
  13. "India denies public exhibition of film on life of Tamil journalist Shoba". Committee to Protect Journalists. 4 June 2015. Retrieved 11 April 2025.

வெளி இணைப்புகள்

[தொகு]