துபாய் பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்
பாக்கித்தான் - ஆத்திரேலியா ஆட்டம் | |
| அரங்கத் தகவல் | |
|---|---|
| அமைவிடம் | துபாய் விளையாட்டு நகரம், துபாய் |
| ஆள்கூறுகள் | 25°2′48″N 55°13′8″E / 25.04667°N 55.21889°E |
| உருவாக்கம் | 2009 |
| இருக்கைகள் | 25,000[1] |
| உரிமையாளர் | துபாய் புரொப்பர்ட்டீசு |
| கட்டிடக் கலைஞர் | மாட்லூப் |
| இயக்குநர் | துபாய் விளையாட்டு நகரம் |
| குத்தகையாளர் | பாக்கித்தான் துடுப்பாட்ட அணி |
| முடிவுகளின் பெயர்கள் | |
| எமிரேட்சு சாலை முடிவு துபாய் விளையாட்டு நகர முடிவு | |
| பன்னாட்டுத் தகவல் | |
| முதல் தேர்வு | 12–16 நவம்பர் 2010: |
| கடைசித் தேர்வு | 6–10 அக்டோபர் 2017: |
| முதல் ஒநாப | 22 ஏப்ரல் 2009: |
| கடைசி ஒநாப | 21 செப்டம்பர் 2018: |
| முதல் இ20ப | 7 மே 2009: |
| கடைசி இ20ப | 20 சனவரி 2017: |
| 21 செப்டம்பர் 2018 இல் உள்ள தரவு மூலம்: கிரிக்கின்ஃபோ | |
துபாய் பன்னாட்டு அரங்கம் (Dubai International Stadium, முன்னர் துபாய் விளையாட்டு நகர அரங்கம் என அழைக்கப்பட்டது) என்பது ஐக்கிய அரபு அமீரகம், துபாய் நகரில் அமைந்துள்ள பல-நோக்கு அரங்கம் ஆகும். இவ்வரங்கில் முக்கியமாக துடுப்பாட்டப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்து அமீரகத்தில் உள்ள மூன்று விளையாட்டரங்குகளில் ஒன்றாகும். ஏனையவை: சார்ஜா துடுப்பாட்ட அரங்கு, அபுதாபி சேக் சயத் துடுப்பாட்ட அரங்கு ஆகியனவாகும். துபாய் பன்னாட்டு அரங்கத்தில் 25,000 இருக்கைகள் உள்ளன, இது துபாய் விளையாட்டு நகரின் ஒரு பகுதியாகவும் உள்ளது.
வரலாறு
[தொகு]2009 ஏப்ரல் 22 இல், முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி ஆத்திரேலிய, பாக்கித்தான் அணிகளுக்கிடையே இடம்பெற்றது. பாக்கித்தான் இப்போட்டியில் வென்றது. முதலாவது தேர்வுப் போட்டி பாக்கித்தானுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையில் 2010 நவம்பரில் நடைபெற்றது. இப்போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
