துபாய் பன்னாட்டுக் கல்வி நகரம்

ஆள்கூறுகள்: 25°06′47″N 55°24′30″E / 25.1131°N 55.4084°E / 25.1131; 55.4084
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துபாய் பன்னாட்டுக் கல்வி நகரம்
مدينة دبي الأكاديمية العالمية
பன்னாட்டுக் கல்வி வளாகம்
அடைபெயர்(கள்): DIAC
ஆள்கூறுகள்: 25°06′47″N 55°24′30″E / 25.1131°N 55.4084°E / 25.1131; 55.4084
நாடு ஐக்கிய அரபு அமீரகம்
ஐக்கிய அரபு அமீரகம்துபாய்
நிறுவிய ஆண்டு2007
பரப்பளவு
 • மொத்தம்11.98 km2 (4.63 sq mi)
தொண்டு நிறுவனம் அறக்கட்டளை200 மில்லியன் AED[1]
மாணவர்கள்27,500
கல்வி இயக்குநர்டாக்டர். அயூப் காசீம்
முகம்மது அப்துல்லா
வளாகம்நகர்ப்புறம், (2,960 ஏக்கர்கள்)
நிறங்கள்    
இணைப்புதுபாய் அமீரகம்
இணையதளம்diacedu.ae

துபாய் பன்னாட்டு அகாதமி நகரம் (Dubai International Academic City (DIAC), இதனை அகாதமி நகரம் என்றும் அழைப்பர். துபாய் நகரத்தின் பல்கலை நகரம் ஆகும். இது மே 2006ல் துவங்கப்பட்ட துபாய் அறிவுசார் பூங்கா திட்டத்தின் கீழ் 2007ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[2]

2,960 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்தப் பல்கலைக்கழக நகரத்தில் பள்ளிக்கூடங்கள், 27 கல்லூரிகள் மற்றும் 3 பல்கலைக்கழகங்கள், 3 ஆய்வு மையங்களில் 150 நாடுகளின் 27,500 மாணவர்களுடனும், 500க்கும் மேற்பட்ட படிப்புகளுடனும் செயல்படுகிறது. இந்த அகாதமியில் இளநிலைப் பட்டம், முதுநிலைப் பட்டம், முனைவர் பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.[3] இங்குள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் விடுதிகளுடன் அமைந்துள்ளன. இந்த அகாதமி பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளது.[4] இந்த அகாதமியில் படித்த மாணவர்கள் ஆய்வுகள் மேற்கொள்ளவும் மற்றும் தொழில் தொடங்கவும் உதவி செய்கிறது.[5]

கல்வி நிறுவனங்கள்[தொகு]

கல்லூரிகள்[தொகு]

  • துபாய் ஆங்கிலப் பேச்சுக் கல்லூரி
  • துபாய் ஆடவர் கல்லூரி
  • ஹமதான் n eTQM பல்கலைக்கழகம்
  • உயர் தொழில் நுட்பக் கல்லூரி
  • இமாம் மாலிக் கல்லூரி
  • ஐக்கிய இராச்சியத்தின் வணிகக் கல்லூரி - துபாய் வளாகம்

ஆய்வு மையங்கள்[தொகு]

  • துபாய் புள்ளியியல் மையம்
  • இயற்கை வேளாண்மைப் பன்னாட்டு மையம் (International Center for Biosaline Agriculture)

பள்ளிகள்[தொகு]

  • ஜெர்மன் பள்ளி, துபாய்
  • லிசீ பிரான்கைஸ் பன்னாட்டு ஜார்ஜஸ் பொம்பிதௌ (Lycée Français International Georges Pompidou)
  • சேக் ரசீத் பின் சகீத் இசுலாமிய நிறுவனம்

பல்கலைக்கழகங்கள்[தொகு]

  • அபு தாபி பல்கலைக்கழகம்
  • அல் குராயிர் பல்கலைக்கழகம்
  • அமெரிக்கன் பல்கலைக்கழகம், துபாய் வளாகம்
  • அமிட்டி பல்கலைக்கழகம், துபாய் வளாகம்
  • பிர்லா தொழில்நுட்ப நிறுவனம், பிலானி - துபாய் வளாகம்
  • பிர்மிங்காம் பல்கலைக்கழகம், துபாய் வளாகம்
  • பிரித்தானிய பல்கலைக் கழகம், துபாய் வளாகம்
  • டி மாண்ட்போர்டு பல்கலைக்கழகம், துபாய் வளாகம் Curtin University Dubai
  • வான் பறப்பு பல்கலைக்கழகம், அமீரகம்
  • வங்கியியல் நிறுவனம், அமீரகம்
  • பிரான்சு பேஷன் நிறுவனம், (ESMOD)
  • ஹமதான் பின் முகமது திறன்மிகு பல்கலைக்கழகம்
  • எரியட்-வாட் பல்கலைக்கழகம், துபாய் வளாகம்
  • மேலாண்மை தொழில்நுட்ப நிறுவனம், துபாய்
  • இசுலாமிய ஆசாத் பல்கலைக்கழகம்
  • மணிபால் பல்கலைக்கழகம், துபாய் வளாகம்
  • மிடில்செக்ஸ் பல்கலைக்கழகம், துபாய் வளாகம்
  • துபாய் தேசிய தொழிற்கல்வி நிறுவனம்
  • செயிண்ட் ஜோசப் பல்கலைக்கழகம், துபாய் வளாகம்
  • எஸ். பி. ஜெயின் பன்னாட்டு மேலாண்மைப் பள்ளி, துபாய்
  • சாகீத் சுல்பிகர் அலி புட்டோ அறிவியல் & தொழில்நுட்ப நிறுவனம்
  • சையத் பல்கலைக்கழகம்
  • துபாய் பல்கலைக்கழகம்
  • University of Exeter
  • University of Wollongong in Dubai
  • Strathclyde Business School

மேற்கோள்கள்[தொகு]

  1. "Endowment".
  2. Robin Vinod (16 April 2019). "DIAC and Knowledge Park".
  3. "DIAC-About us".
  4. "Universities in DIAC".
  5. "in5".

வெளி இணைப்புகள்[தொகு]