துபாய் தேசிய அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல் பாகிதி கோட்டை

துபாய் தேசிய அருங்காட்சியகம், ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் நகரின் பார்துபாய் பகுதியில் அமைந்துள்ளது. இது 1971 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் தேதி துபாய் ஆளுனரால் திறந்து வைக்கப்பட்டது. துபாயின் மிகப் பழைய வரலாற்றுக் கட்டிடம் எனக் கருதப்படும், 1787 ஆம் ஆண்டைச் சேர்ந்த அல் ஃபாஹிதி கோட்டையில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. உள்ளூர் அரும்பொருட்களோடு துபாயுடன் வணிகம் செய்யப்பட்ட ஆசிய, ஆபிரிக்கப் பொருட்களையும் கொண்டுள்ளது.