உள்ளடக்கத்துக்குச் செல்

துன் டாக்டர் இசுமாயில் எம்ஆர்டி நிலையம்

ஆள்கூறுகள்: 3°8′9.92″N 101°37′50.76″E / 3.1360889°N 101.6307667°E / 3.1360889; 101.6307667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 KG10  துன் டாக்டர் இசுமாயில்
| எம்ஆர்டி
நிலையத்தின் வெளிப்புறக் காட்சி.
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்Taman Tun Dr Ismail – Deloitte
Stesen MRT Taman Tun Dr Ismail
敦依斯迈花园站
அமைவிடம்தாமான் துன் டாக்டர் இசுமாயில், டாமன்சாரா அயிட்ஸ்,
கோலாலம்பூர் மலேசியா
ஆள்கூறுகள்3°8′9.92″N 101°37′50.76″E / 3.1360889°N 101.6307667°E / 3.1360889; 101.6307667
உரிமம் எம்ஆர்டி நிறுவனம்
இயக்குபவர்Rapid_KL_Logo ரேபிட் ரெயில்
தடங்கள்9  காஜாங் 
நடைமேடை2 பக்க நடை மேடைகள்
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைஉயர்த்தப்பட்ட நிலை
நடைமேடை அளவுகள்3
தரிப்பிடம்Parking இல்லை; Motorbike இல்லை
துவிச்சக்கர வண்டி வசதிகள் 23
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KG10 
வரலாறு
திறக்கப்பட்டது KG10  (MRT) 16 திசம்பர் 2016
சேவைகள்
முந்தைய நிலையம்   ரேபிட் கேஎல்   அடுத்த நிலையம்
   
பண்டார் உத்தாமா
குவாசா டாமன்சாரா
 
சா ஆலாம் வழித்தடம்
 
பிலியோ டாமன்சாரா
காஜாங் நிலையம்
அமைவிடம்
Map

துன் டாக்டர் இசுமாயில் எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Taman Tun Dr Ismail MRT station அல்லது TTDI-Deloitte; மலாய்: Stesen MRT Taman Tun Dr Ismail) என்பது மலேசியா, கோலாலம்பூர், தாமான் துன் டாக்டர் இசுமாயில் நகர்ப்பகுதிக்குச் சேவை வழங்கும் ஒரு விரைவுப் போக்குவரத்து நிலையம் ஆகும். இந்த நிலையம் எம்ஆர்டி காஜாங் வழித்தடத்தில் அமைந்துள்ளது.[1] மேலும் இந்த நிலையம் டாமன்சாரா உத்தாமா நகர்ப்பகுதிக்கும் சேவை செய்கிறது.[2]

இந்த நிலையம் கட்டப்படுவதற்கு முன்னர் இரண்டு இடங்கள் தேர்வாயின. இருப்பினும், பொதுமக்களின் ஆட்சேபனைக்குப் பிறகு தற்போதைய எம்ஆர்டி நிலைய அமைவிடம் மூன்றாவது தேர்வாக அமைந்தது.

ஒரு நிலையம் அமைக்கப்படுவதற்கு முன்னர், பொதுமக்களின் இணக்கம் தேவை என்பது தற்போதுள்ள சட்டங்களின் கீழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

பொது

[தொகு]

இந்த எம்ஆர்டி நிலையத்தின் இருப்பிடம் மூன்றாவது தேர்வாக அமைந்தது. முந்தைய இரண்டு இடங்களுக்கு பொதுமக்களிடமிருந்து மறுப்புகள் வந்தன. முதல் எம்ஆர்டி நிலையத்தின் அசல் இடம் TTDI தீயணைப்பு நிலையத்திற்கு அடுத்ததாக இருந்தது. இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது..

அதைத் தொடர்ந்து நிறுவனத் திட்ட உரிமையாளரான பிரசரானா; அதை தாமான் துன் டாக்டர் இசுமாயில் நகரத்தின் ஈரச் சந்தைக்கு அருகில் மாற்றுவதற்கு கட்டாயப்படுத்தப்படுத்தப்பட்டது.

இதுவும் சரியாக அமையவில்லை. எதிர்கால எம்ஆர்டி பயனர்களால்; சாலை மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் நெரிசலாகிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டது. இறுதியாக தற்போதைய இடம் தேர்வு செய்யப்பட்டது.[3]

நிலைய அமைப்பு

[தொகு]
L2 நடைமேடை தளம் பக்க நடைமேடை
நடைமேடை 1 9  காஜாங்  (→) காஜாங்  KG35  (→)
நடைமேடை 2 9  காஜாங்  (←) குவாசா டாமன்சாரா  KG04  (←)
பக்க நடைமேடை
L1 இணைப்புவழி கட்டணப் பகுதிக்கான நுழைவாயில்கள், நடைமேடைகளுக்கான நகரும் படிக்கட்டுகள், கட்டண இயந்திரங்கள், வாடிக்கையாளர் சேவை அலுவலகம், நிலையக் கட்டுப்பாடு, கடைகள்
G தரை தளம் நுழைவாயில் A; நுழைவாயில் B; பேருந்து நிறுத்தம், வாடகை வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் தனியார் வாகன நிறுத்துமிடங்கள்

வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்

[தொகு]
 காஜாங்  வழித்தட நிலையம்
நுழைவாயில் இடம் இலக்கு தோற்றம்
A ஜாலான் டாமன்சாரா மேற்குப் பக்கம் பேருந்து நிற்குமிடம், வாடகை - தனியார் வாகனம், டிடிடிஐ அசென்சியா, குளோமாக் கோபுரம், குளோ டாமன்சாரா, கேபிஜே டாமன்சாரா மருத்துவ மையம்
B ஜாலான் டாமன்சாரா கிழக்குப் பக்கம் வாடகை - தனியார் வாகனம், ஜாலான் வான் காதிர் 3, ஜாலான் வான் காதிர் 4, டிடிடிஐ பிளாசா, மெனாரா எல்ஜிபி, தி ரெசிடென்ஸ், டிடிடிஐ சந்தை

பேருந்து சேவைகள்

[தொகு]
பேருந்து தொடக்கம் இலக்கு பயணவழி
T813 [4]  SBK10  துன் டாக்டர் இசுமாயில் எம்ஆர்டி நிலையம்
(நுழைவாயில் A)
பெட்டாலிங் ஜெயா செக்சன் SS22
(டாமன்சாரா ஜெயா)
ஜாலான் டாமன்சாரா
டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை
ஜாலான் SS21/56
ஜாலான் SS21/1
இசுபிரிண்ட் விரைவுச்சாலை
ஜாலான் SS22/23
ஜாலான் SS22/43
ஜாலான் SS22/41
T814 [5]  SBK10  துன் டாக்டர் இசுமாயில் எம்ஆர்டி நிலையம்
(நுழைவாயில் B)
தாமான் துன் டாக்டர் இசுமாயில் ஜாலான் வான் காதிர் 5
ஜாலான் டத்தோ சுலைமான்
பெர்சியாரான் சாபா
ஜாலான் புர்கானுதீன் எல்மி 2
ஜாலான் ஆதி நாகப்பன்
டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை
இசுபிரிண்ட் விரைவுச்சாலை

காட்சியகம்

[தொகு]

துன் டாக்டர் இசுமாயில் எம்ஆர்டி நிலையம்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Taman Tun Dr Ismail MRT Station (TTDI MRT Station) | mrt.com.my". mrt.com.my. Retrieved 9 September 2025.
  2. "Deloitte Malaysia inks deal with MRT Corp for MRT station naming rights". 20 December 2023.
  3. "Pictures of Taman Tun Dr Ismail MRT Station taken during construction". klia2.info. 29 January 2019. Retrieved 9 September 2025.
  4. RapidKL Bus Route T813
  5. RapidKL Bus Route T814

வெளி இணைப்புகள்

[தொகு]