உள்ளடக்கத்துக்குச் செல்

துந்தாசைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துந்தாசைட்டு
Dundasite
ஆத்திரேலியாவிம் தாசுமேனியாவில் உள்ள துந்தா நகரத்தில் கிடைத்த வெண் கனிமம் துந்தாசைட்டும் குரோகோயிட்டு கனிமமும், .
பொதுவானாவை
வகைகார்பனேட்டு கனிமம்
வேதி வாய்பாடுPbAl2[(OH)2|CO3]2 • H2O
இனங்காணல்
நிறம்வெண்மை, வெளிர் நீலம்; கடத்தப்பட்ட ஒளியில் நிறமற்றது
படிக இயல்புஊசிவடிவ படிகங்கள் பொதுவாக கோளத் திரட்டுகள் மற்றும் பொருந்திய மேலோடுகள்
படிக அமைப்புநேர்ச்சாய்சதுரம்
பிளப்பு{010} இல் தெளிவான பிளவு
மோவின் அளவுகோல் வலிமை2
மிளிர்வுகண்ணாடி முதல் பட்டு வரை
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
ஒப்படர்த்தி3.10 – 3.55
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
ஒளிவிலகல் எண்nα = 1.603 nβ = 1.716 nγ = 1.750
இரட்டை ஒளிவிலகல்δ = 0.147
2V கோணம்அளக்கப்பட்டது 30° to 40°, கணக்கிடப்பட்டது: 54°
மேற்கோள்கள்[1][2][3]

துந்தாசைட்டு (Dundasite) என்பது PbAl2[(OH)2|CO3]2 • H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். ஓர் அரிய ஈயம் அலுமினியம் கார்பனேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. ஆத்திரேலியாவின்[1] தாசுமேனியா மாநிலத்திலுள்ள துந்தாசு என்ற நகரத்தில் கிடைக்கின்ற காரணத்தால் கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. துந்தாசைட்டு கனிமம் முதன் முதலில் அடிலெய்ட் நகரத்தில் ஒரு தனியுரிமை சுரங்கப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது[4]. 1893 ஆம் ஆண்டு வில்லியம் பிரடெரிக் பெட்டர்டு கனிமத்தைப் பற்றி விவரித்தார்[5].

ஈயத் தாது படிவுகளின் ஆக்சிசனேற்றமடைந்த மண்டலத்தில் இரண்டாம் நிலை கனிமமாக துந்தாசைட்டு அரிதாகத் தோன்றுகிறது[2]. பொதுவாக இக்கனிமம் குரோகோயிட்டு என்ற கனிமத்துடனும் மஞ்சள் செருசைட்டு கனிமத்துடனும் மிகுதியாக வளர்கிறது[4]. செருசைட்டு, பிளாட்னெரைட்டு, அசுரைட்டு, மாலகைட்டு, பைரோமார்பைட்டு, மிமெடைட்டு, பியுதண்டைட்டு, தப்டைட்டு, குரோகோயிட்டு, கிப்சைட்டு, ஆலோபேன், லைமோனைட்டு போன்ற கனிமங்களுடன் சேர்ந்து துந்தாசைட்டு கிடைக்கிறது[2].

தாசுமேனியாவில் இதன் இருப்பிடத்தைத் தவிர நியூசிலாந்து, ஆத்திரேலியா, சீனா, பெல்சியம், செருமனி, பிரான்சு, கிரீசு, இங்கிலாந்து, அயர்லாந்து, இத்தாலி, ஆசுத்திரியா, செக் குடியரசு, நமீபியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் இந்த கனிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது[2].

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Dundasite mineral information and data". mindat.org. பார்க்கப்பட்ட நாள் May 2011. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  2. 2.0 2.1 2.2 2.3 "Handbook of Mineralogy: Dunasite" (PDF). RRUF Database. பார்க்கப்பட்ட நாள் May 2011. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  3. "Dundasite Mineral Data". Webmineral. பார்க்கப்பட்ட நாள் May 2011. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  4. 4.0 4.1 Bottrill, Ralph (12 April 2009). "Dundasite". பார்க்கப்பட்ட நாள் 2009-10-16.
  5. "Volume 14". The Mineralogical Magazine and Journal of the Mineralogical Society (Great Britain: Mineralogical Society). 1965. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=துந்தாசைட்டு&oldid=3577531" இலிருந்து மீள்விக்கப்பட்டது