உள்ளடக்கத்துக்குச் செல்

துத்தநாக புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துத்தநாக புளோரைடு
துத்தநாக புளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
துத்தநாகம் இருபுளோரைடு
இனங்காட்டிகள்
7783-49-5 Y
ChemSpider 22957 Y
InChI
  • InChI=1S/2FH.Zn/h2*1H;/q;;+2/p-2 Y
    Key: BHHYHSUAOQUXJK-UHFFFAOYSA-L Y
  • InChI=1/2FH.Zn/h2*1H;/q;;+2/p-2
    Key: BHHYHSUAOQUXJK-NUQVWONBAR
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24551
வே.ந.வி.ப எண் ZH3200000
  • F[Zn]F
பண்புகள்
ZnF2
வாய்ப்பாட்டு எடை 103.406 கி/மோல் (நீரிலி)
175.45 கி/மோல்l (நான்கு நீரேற்று)
தோற்றம் வெண்மை ஊசிகள்
நீருறிஞ்சி
அடர்த்தி 4.95 கி/செ.மீ3 (நீரிலி)
2.30 கி/செ.மீ3 (நான்கு நீரேற்று)
உருகுநிலை 872 °C (1,602 °F; 1,145 K)
கொதிநிலை 1,500 °C (2,730 °F; 1,770 K)
.000052 கி/100 மி.லி (நீரிலி)
1.52 கி/100 மி.லி, 20 °செல்சியசு (நான்கு நீரேற்று)
கரைதிறன் ஐதரோ குளோரிக் அமிலம் , நைட்ரிக் அமிலம், அமோனியா ஆகியவற்றில் சிறிதளவு கரையும்.
கட்டமைப்பு
படிக அமைப்பு நாற்கோணம் (நீரிலி), tP6
புறவெளித் தொகுதி P42/mnm, No. 136
தீங்குகள்
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.
Y verify (இது Y☒N ?)

துத்தநாக புளோரைடு ( Zinc fluoride ) என்பது ZnF2 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது நீரிலி மற்றும் சாய்சதுர படிகவடிவ நான்கு நீரேற்று ZnF2 · 4H2O ஆகிய நிலைகளில் காணப்படுகிறது[1]. இவ்வுப்பின் உருகுநிலை 872 பாகை செல்சியசு வெப்பநிலை ஆகும். மற்றும் இது ஆறு துத்தநாக அணுக்கள் இணைப்புத் தொடராக கொண்ட உரூத்தைல் கட்டமைப்பால் ஆக்கப்பட்டுள்ளதால் வேதிப்பிணைப்பில் அயனிப் பிணைப்புத் தன்மையைக் காட்டுகிறது[2]. துத்தநாக குளோரைடு, துத்தநாக புரோமைடு மற்றும் துத்தநாக அயோடைடு போன்ற மற்ற துத்தநாக ஆலைடுகள் போல நீரில் அதிகமாக கரையாது[2].

துத்தநாக புளோரைடு பல்வேறு தொகுப்பு முறைகளில் தயாரிக்கப்படுகிறது.

  • ஒரு புளோரைடு உப்புடன் துத்தநாக குளோரைடு வினை புரிந்து துத்தநாக புளோரைடு மற்றும் ஒரு குளோரைடு உப்பு உண்டாகிறது.
  • துத்தநாக உலோகத்துடன் புளோரீன் வாயு வினைபுரிந்து துத்தநாக புளோரைட்டு உண்டாகிறது[2].
  • ஐதரோபுளோரிக் அமிலத்துடன் துத்தநாகம் வினைபுரிந்து துத்தநாக புளோரைடு மற்றும் ஐதரசன் வாயு உண்டாகிறது[2].

துத்தநாக புளோரைடு சூடான நிரினால் நீராற் பகுத்தல் வினைக்குட்பட்டு துத்தநாக ஐதராக்சி புளோரைட்டு உண்டாகிறது[3].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Perry, D. L.; Phillips, S. L. (1995). Handbook of Inorganic Compounds. CRC Press. ISBN 0-8493-8671-3.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  2. 1 2 3 4 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. ISBN 0080379419.
  3. Srivastava, O. K.; Secco, E. A. (1967). "Studies on Metal Hydroxy Compounds. I. Thermal Analyses of Zinc Derivatives ε-Zn(OH)2, Zn5(OH)8Cl2 · H2O, β-ZnOHCl, and ZnOHF" (pdf). Canadian Journal of Chemistry 45 (6): 579–583. doi:10.1139/v67-096. http://www.nrcresearchpress.com/doi/pdf/10.1139/v67-096.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=துத்தநாக_புளோரைடு&oldid=4308363" இலிருந்து மீள்விக்கப்பட்டது