துத்தநாகம்-துத்தநாக ஆக்சைடு சுழற்சி
துத்தநாகம்-துத்தநாக ஆக்சைடு சுழற்சி (zinc–zinc oxide cycle) என்பது ஐதரசனை [1] உற்பத்தி செய்கின்ற ஒரு வெப்பவேதியியல் சுழற்சி வினையாகும். துத்தநாகமும் துத்தநாக ஆக்சைடும் இவ்வினையில் பயன்படுத்தப்படுகின்றன [2] இவ்வினை இரண்டு படிநிலைகளில் நிகழ்கிறது. இச்சுழற்சியில் ஐதரசனின் உற்பத்தித் திறன் 40 சதவீதத்திற்கு அருகில் உள்ளது [3].
செயல்முறை விளக்கம்
[தொகு]தண்ணீர் மூலக்கூறை பிளக்கும் இரண்டு இரசாயன வினைகளை Zn/ZnO சுழற்சி உள்ளடக்கியுள்ளது. இவ்வினைகளில் ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள் பயன்படுத்தப்படுகின்றன:[4].
- பிரிகை வினை: ZnO → Zn + 1/2 O2,
- நீராற்பகுப்பு: Zn + H2O → ZnO + H2
சூரிய சக்தியை மையமாகக் கொண்ட முதல் வினையில் 900 பாகை செல்சியசு வெப்பநிலையில் துத்தநாக ஆக்சைடு துத்தநாகமாகவும் ஆக்சிசனாகவும் பிரிகையடைகிறது. இவ்வினை ஒரு வெப்பங்கொள் வினையாகும். இரண்டாவது வினையில் துத்தநாகம் 427 ° பாகை செல்சியசு வெப்பநிலையில் தண்ணீருடன் வினைபுரிந்து ஐதரசனையும் துத்தநாக ஆக்சைடையும் உற்பத்தி செய்கிறது.
சூரிய வெப்ப ஆற்றல் நிலையை அறிவதற்காக சூரிய சக்தி கோபுரமும் சூரிய வெப்ப ஆற்றலைப் பெறுவதற்கு சூரிய இலக்கு நிலைப்படுத்திகளும் பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Project PD10
- ↑ Solar Hydrogen Production from a ZnO/Zn Thermo-chemical Cycle பரணிடப்பட்டது சூலை 24, 2008 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Novel Method for solar hydrogen generation பரணிடப்பட்டது பெப்பிரவரி 5, 2009 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Solar thermal ZnO-decomposition". Archived from the original on 2006-05-05. பார்க்கப்பட்ட நாள் 2006-05-05.