துதானி
துதானி Dudhani | |
|---|---|
நகரம் | |
| அடைபெயர்(கள்): அரசியல் நகரம் | |
இந்தியாவில் மகாராட்டிரம், | |
| ஆள்கூறுகள்: 17°22′N 76°22′E / 17.37°N 76.37°E | |
| நாடு | |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | சோலாப்பூர் |
| ஏற்றம் | 443 m (1,453 ft) |
| மக்கள்தொகை (2001) | |
| • மொத்தம் | 12,146 |
| மொழிகள் | |
| • அலுவல் | மராத்திய மொழி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
துதானி (Dudhani) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள சோலாப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகரமும் நகராட்சி மன்றமுமாகும். துதானி நகரம் முக்கியமாக சிறீ சித்தராமேசுவரர் கோவில் மற்றும் சையத்பாசா பள்ளிவாசல் ஆகியவை உள்ள புனித இடமாகும்.
புவியியல்
[தொகு]17°22′N 76°22′E / 17.37°N 76.37°E.[1] என்ற புவியியல் ஆள்கூறுகளில் கடல் மட்டத்திலிருந்து 473 மீட்டர்கள் (1551 அடி) உயரத்தில் துதானி நகரம் அமைந்துள்ளது.
மக்கள் தொகையியல்
[தொகு]2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, [2] துதானி நகரத்தின் மக்கள் தொகை 12,146 ஆகும். இம்மக்கள் தொகையில் ஆண்கள் சதவீதம் 50% ஆகவும் பெண்கள் சதவீதம் 50% ஆகவும் இருந்தது. துதானியின் சராசரி கல்வியறிவு விகிதம் 60% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 72% ஆகவும் பெண்களின் கல்வியறிவு 49% சதவீதமாகவும் இருந்தது. துதானி மக்கள் தொகையில் 13% பேர் ஆறு வயதுக்குட்பட்டவர்களாக இருந்தார்கள்.
2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, துதானியின் மக்கள் தொகை 11,214 ஆகும். இம்மக்கள் தொகையில் ஆண்கள் எண்ணிக்கை 5779 ஆகவும் பெண்கள் எண்ணிக்கை 5435 ஆகவும் இருந்தது. துதானியின் சராசரி கல்வியறிவு விகிதம் 69.78% ஆகும். இது தேசிய சராசரியான 82.34% என்பதை விடக் குறைவாகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 79.33% ஆகவும் பெண்களின் கல்வியறிவு 59.70% சதவீதமாகவும் இருந்தது. துதானி மக்கள் தொகையில் 12.79% பேர் ஆறு வயதுக்குட்பட்டவர்களாக இருந்தார்கள்.[3]
துதானி நகரத்தில் சிறீ சாந்தலிங்கேசுவர் விரகாட் மடம் மற்றும் சிறீ சித்தராமேசுவர் கோவில் ஆகியன உள்ளன. மேலும் ஆண்டுதோறும் சனவரி மாதம் 14 ஆம் தேதியன்று இங்கு திருவிழா நடைபெறும். இந்த நகரம் ஆண்டுதோறும் தர்கா உருசு திருவிழாக்களையும் நடத்துகிறது. துதானி நகரத்துக்கு தொடருந்து, பேருந்து வசதிகளும் உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Falling Rain Genomics, Inc - Dudhani
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.
- ↑ "Dudhani Municipal Council City Population Census 2011-2025 | Maharashtra". www.census2011.co.in. Retrieved 2025-12-04.