துண்டறிக்கை
Jump to navigation
Jump to search
துண்டு வெளியீடு அல்லது துண்டுப் பிரசுரம் என்பது ஒரு குறிப்பிட்ட தகவல்களை சுருக்கமாக விளக்கி, மேலதிக தகவல்களுக்கான மூலங்களையும் சுட்டி வழங்கப்படும் ஒரு தகவல் வெளியீடு ஆகும். பொதுவாக ஒரு தாளில் இரண்டு பக்கமும் அச்சடிக்கப்பட்டு, மடித்து வழங்கப்படும். இது ஒரு அடிப்படை பரப்புரை கருவி ஆகும். இது ஒவ்வொரு தனிமனிதனையும் இலக்கு வைத்து செய்தியைப் பரப்புவதற்கான வழியாகும். தற்காலத்தில் துண்டுப் பிரசுரங்கள் நாளிதழ்கள் வினியோகிக்கப்படும் போது அதன் மடிப்பினூடே வைத்தும் வினியோகிக்கப்படுகின்றன. அரசு, அரசியல் கட்சிகள், அரசு சாரா அமைப்புகள் தங்களது கருத்துகளை மக்களிடத்தில் நேரடியாகச் சேர்ப்பதற்கு இதைக் கையாளுகின்றனர். வணிகர்கள் தங்களது உறபத்திப் பொருளை சந்தைப்படுத்த விளம்பரங்கள் அச்சடித்து துண்டுப் பிரசுரமாகவும் வினியோகம் செய்கிறனர்.