துணைவன் (மென்பொருள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துணைவன் என்பது மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் தமிழர்க்காக தமிழ் மொழியில் மென்பொருள்களை வழங்கும் நிறுவனம். இதுவரையிலும், உரை ஆவணத்தையும், தட்டச்சுக் கருவியையும் வெளியிட்டுள்ளது. துணைவன் தட்டச்சுக் கருவியே, சிங்கப்பூர், மலேசியாவில் தமிழ் ஒலிப்புமுறைத் தட்டச்சுடன் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்தே கணியன், தமிழ்99 ஆகியன வெளியாகின. இதன் அண்மைய பதிப்பாக துணைவன் 7 வெளியாகியுள்ளது. இதனை ரவீந்திரன் பால் என்பவர் உருவாக்கினார். ஐ. ஈ. சிங்கப்பூர், தமிழ் டைப்ரைட்டர் ஆகினவற்றை விடவும் இது குறைந்தளவு தட்டல்களைக் கொண்டே எழுதுகிறது.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துணைவன்_(மென்பொருள்)&oldid=1470882" இலிருந்து மீள்விக்கப்பட்டது