துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவு இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் அமைந்துள்ளது. இப் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 20 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஆலங்குளம், அமைதிபுரம், அம்பலப்பெருமாள்குளம், அனிச்சியன்குளம், இயங்கன்குளம், கல்விளான், கோட்டைகட்டியகுளம், மல்லாவி, பழையமுறிகண்டி, பாரதிநகர், புகழேந்திநகர், புத்துவெட்டுவான், தெண்ணியான்குளம், தேராங்கண்டல், திருநகர், துணுக்காய், உயிலங்குளம், யோகபுரம் ஆகிய ஊர்கள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் வடக்கில் கிளிநொச்சி மாவட்டமும்; மேற்கில் கிளிநொச்சி மாவட்டமும், மன்னார் மாவட்டமும்; தெற்கிலும், கிழக்கின் ஒரு பகுதியிலும் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவும், கிழக்கின் எஞ்சிய பகுதியில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவும் எல்லைகளாக உள்ளன.

இப்பிரிவு 329 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].

இங்குள்ள கிராமசேவையாளர் பிரிவுகள்[தொகு]

இது முழுமையான பட்டியல் அல்ல.

  • பாரதிநகர்

மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]