துணிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூட்டுத் துணிக்கைகள்[தொகு]

 • மூலக்கூறுகள் என்பன ஒரு பதார்த்தத்தின் பௌதீகப் பண்பு மாறாமல் அப் பதார்த்தத்திலிருந்து பிரித்தெடுக்கப்படக்கூடிய மிகச் சிறிய துணிக்கையாகும். ஒவ்வொரு வித மூலக்கூறும் ஒரு குறிப்பிட்ட வேதியியற் சேர்வையை ஒத்திருக்கும். CAS பதார்த்தத் தரவுத்தளம் 23 மில்லியன் சேர்வைகள் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது. மூலக்கூறுகள் ஒன்று அல்லது பல அணுக்களைக் கொண்டதாகும்.
 • அணுக்கள், வேதியியற் தாக்கங்களின் மூலம் ஒரு பதார்த்தத்திலிருந்து பிரிக்கப்படக்கூடிய மிகச்சிறிய நடுநிலைத் துணிக்கைகளாகும். ஒரு அணு, பாரமான ஒரு கருவையும், அதைசுற்றி ஒப்பீட்டளவில் பெரிய ஆனால் பாரம் குறைந்த இலத்திரன் cloud ஐயும் கொண்டன. ஒவ்வொருவகை அணுவும், ஒரு குறிப்பிட்ட வேதியியற் தனிமத்தை ஒத்திருக்கும். இதுவரை 110 தனிமங்கள் அறியப்பட்டுள்ளன. விபரங்களுக்கு ஆவர்த்தன அட்டவணையைப் பார்க்கவும்.
 • அணுக்கருக்கள் நியூத்திரன், புரோத்தன் ஆகியவற்றால் ஆனது. ஒவ்வொருவகைக் கருவும் nuclide என்று அழைக்கப்படுகின்றன. அணுக்கருத் தாக்கங்கள் ஒரு nuclide ஐ இன்னொன்றாக மாற்றக்கூடியவை. KAERI இலுள்ள Nuclidesகளின் அட்டவணை, 3000க்கு மேற்பட்ட Nuclidesகளின் தகவல்களைக் கொண்டுள்ளது.
 • ஹட்ரோன்கள், குவாக்ஸ் மற்றும்/அல்லது எதிர்-குவாக்ஸ் சேர்ந்து உருவாகின்றன. வலுவான அணுக்கரு விசையினால் இறுக்கமாகப் பிணைக்கப்படுகின்றன. குவாக் உள்ளீடுகளைப் பொறுத்து, ஹட்ரோன்கள், மேலும் பாகுபடுத்தப்பட்டுள்ளன.
  • பரியன்கள் ஒவ்வொன்றும் மூன்று குவாக்குகளைக் கொண்டுள்ளன. அணுக்கருவில் அவற்றின் தோற்றத்தின் அடிப்படையில் பாகுபடுத்தப்படுகின்றன.
  • மெசோன்கள், குவாக், எதிர்-குவாக் என்பவற்றினால் உருவாகின்றன. பியொன்கள், காவொன்கள் மற்றும் வேரு பலவகை மெசோன்களையும் உள்ளடக்குகின்றன. அணுக்கருவிலுள்ள புரோத்தன்களுக்கும், நியூத்திரன்களுக்கும் இடையிலான வலுவான விசை மேசோன்களூடாகவே பெறப்படுகின்றன.
  • எக்சோட்டிக் பரியன்கள் அண்மையிலேயே கண்டுபிடிக்கப்பட்டது.
   • டெட்ராகுவாக் துணிக்கைகள், இரண்டு குவாக்குகளையும், இரண்டு எதிர் குவாக்குகளையும் கொண்டுள்ளன.
   • பெண்டாகுவாக் துணிக்கைகள், நாலு குவாக்குகளையும், ஒரு எதிர் குவாக்கையும் கொண்டது.

ஆரம்பநிலைத் துணிக்கைகள்[தொகு]

ஆரம்பநிலைத் துணிக்கைகள் அவற்றின் சுழற்சியின் அடிப்படையில் பாகுபடுத்தப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=துணிக்கை&oldid=2740161" இருந்து மீள்விக்கப்பட்டது