துட்டு

துட்டு (Duit, பன்மை: duiten ; ஆங்கிலம்: doit[1] ) என்பது தற்போது வழக்கில் இல்லாத குறைந்த மதிப்பு கொண்ட பழைய டச்சு செப்பு நாணயம் ஆகும்.[2] 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில்[3] இடச்சுக் குடியரசின் பிரதேசங்களில் புழக்கத்துக்கு வந்து, ஒரு சர்வதேச நாணயமாக மாறியது.[4][5] இதன் மதிப்பு 1/8 ஸ்டூவர் ஆகும். [4]
சொற்பிறப்பியல்
[தொகு]சொற்பிறப்பியல் ரீதியாக, துட்டு என்ற சொல் மத்திய டச்சு மொழியிலிருந்து வந்தது. மேலும் இது ஒரு வகை சிறிய நாணயத்தைக் குறிக்கிறது.[1]
வரலாறு
[தொகு]
கடத்தலைத் தடுக்கும் பொருட்டு இடச்சுக் கிழக்கிந்திய நிறுவனம் (VOC) பொறிப்பெழுத்து பொறிக்கப்பட்ட ஒரு சிறப்பு நாணயத்தை வெளியிட்டது. இந்த நாணயம் முதன்முதலில் 17-ஆம் நூற்றாண்டில் இடச்சு குடியரசில் அச்சிடப்பட்டது, மேலும் 1816-ஆம் ஆண்டு வரை நெதர்லாந்தில் வெளியிடப்பட்டது, பின்னர் அது செண்டு, ½ செண்டுகளால் மாற்றப்பட்டது. பின்னர் இது பன்னாட்டு நாணயமாக மாறியது. இடச்சு கிழக்கிந்தியத் தீவுகள், டச்சு சிலோன், டச்சு மலபார் ஆகிய நாடுகளிலும் வெளியிடப்பட்டது. [5] காலனித்துவ ஆட்சியின் போது இந்தோனேசியாவில் இவ்வகையான நாணயங்கள் மட்டுமே செல்லுபடியாகுவதாக இருந்தது. துட்டு நாணயங்களுக்கான மிகப்பெரிய இலக்கு சாவகம் ஆகும். [5] இடச்சு ஆட்சியின் கீழ் இருந்தபோது நியூ ஆம்ஸ்டர்டாம் (இன்றைய நியூயார்க் நகரம்), சுரினாம் போன்ற அமெரிக்காவின் சில பகுதிகளிலும் துட்டு பயன்படுத்தப்பட்டது; ஆப்பிரிக்காவில் டச்சு கேப் காலனியிலும் பயன்படுத்தப்பட்டது.[4]
மதிப்பு
[தொகு]நெதர்லாந்தில் பயன்பாட்டின்படி, 8 துட்டுகள் ஒரு ஸ்டூவருக்குச் சமம் மற்றும் 160 துட்டுகள் ஒரு கில்டருக்குச் சமம். 1726 ஆம் ஆண்டு இடச்சு கிழக்கு இந்திய காலனியில் இந்த நாணயம் பயன்படுத்தப்பட்டபோது, அது ஒரு ஸ்டூவரின் கால் பங்கிற்குச் சமமாக இருந்தது (அதாவது 4 துட்டு = 1 ஸ்டூயிவர்).
துவக்கத்தில் துட்டு நாணயங்கள் தாமிரத்தில் அச்சிடப்பட்டன, ஆனால் துட்டின் மாதிரி நாணயங்கள் வெள்ளி மற்றும் தங்கத்திலும் அச்சிடப்பட்டன.[6]
தமிழில்
[தொகு]டச்சு இந்தியாவிலும் துட்டு பயன்படுத்தப்பட்டது, இது தமிழில் குறைந்த மதிப்புள்ள பணத்தைக்] குறிக்கும் ஒரு பேச்சு வழக்காக உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "doit". (Online). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். (Subscription or participating institution membership required.) - "A small Dutch coin formerly in use, the eighth part of a stiver, or the half of an English farthing; hence (chiefly in negative phrases) as the type of a very small or trifling sum."
- ↑ Van Dale Groot woordenboek der Nederlandse taal (Eerste deel). Utrecht/Antwerpen: Van Dale Lexicografie. 1984. p. 678. ISBN 90-6648-402-0.
- ↑
Hazlitt, William Carew (1897). Supplement to the Coinage of the European Continent. London: Swan Sonnenschein. p. 63. Retrieved 14 April 2024.
The earliest duit which we have seen is of 1614; and there is also a separate colonial series down at least to 1794.
- ↑ 4.0 4.1 4.2 "Duit". Winkler Prins Encyclopaedie. (1947). Amsterdam/Brussels: Elsevier.
- ↑ 5.0 5.1 5.2 Shimada 2006, ப. 94.
- ↑ "Verouderd, antiek of achterhaald | Klantenservice | Ziggo". 3 January 2022. Archived from the original on 7 June 2011. Retrieved 6 May 2010.
வெளி இணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் Duit தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.