துடைப்புச் சோதனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துடைப்புச் சோதனை (Wipe test) என்பது, கதிர்மருத்துத் துறையில் பயன்படுத்தப்படும் காப்பிடப்பட்ட குழாய்களையும் ஊசிகளையும் அவைகளில் கசிவு ஏதாவது உள்ளதா என அறிய செய்யப்படும் சோதனை ஆகும். இச்சோதனை மிகவும் முக்கியமானதாகும். இதற்காக இந்த துடைப்புச் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. பஞ்சு அல்லது மெல்லிய துணியால் ஊசிகளை மெதுவாகத் துடைத்து பின் அவைகளில் கதிரியக்கம் உள்ளதா என சோதனை செய்து தெரிந்து கொள்ளமுடியம். தொலைக்கதிர் மருத்துவக் கருவிகளில் புலத்தேர்விகளில் தூண்டப்பட்ட கதிரியக்கம் உள்ளதா எனவும் இம்முறையில் தெரியலாம். இம்முறையானது தேய்ப்பு முறை (Smear test) என்றும் இழுவை முறை (swipe test) என்றும் அறியப்பபடும். ஊசிகளின் சுய கதிர்ப்படம் எடுத்தும் அறியலாம்.

ஆதாரம்[தொகு]

  • RPG/M1 DRP BARC 1982
"https://ta.wikipedia.org/w/index.php?title=துடைப்புச்_சோதனை&oldid=2745999" இலிருந்து மீள்விக்கப்பட்டது