உள்ளடக்கத்துக்குச் செல்

துடுப்பாட்டப் பந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துடுப்பாட்டப் பந்து

துடுப்பாட்டப் பந்து (Cricket ball) என்பது துடுப்பாட்டம் விளையாட பயன்படுத்தப்படும் கடினமான, திடமான பந்து ஆகும். துடுப்பாட்டப் பந்தானது அதன் உட்புறத்தில் கார்க் எனப்படும் தக்கையைக் கொண்டதாகவும், மேலே தோல் உறையால் தைக்கப்படதாகவும் இருக்கும். மேலும் இதன் தயாரிப்பு, தரம் போன்றவை துடுப்பாட்ட விதிகளுக்குக்கு உட்பட்டதாக இருக்கும். துடுப்பாட்டப் பந்துகள் பேஸ்பால் பந்துகளை விட கடினமானவையாகவும், கனமானவையாகவும் இருக்கும்.[1]

தேர்வுத் துடுப்பாட்டத்திலும், பல நாட்கள் நடைபெறும் தொழில்முறை உள்நாட்டு விளையாட்டுகளிலும், கிட்டத்தட்ட முழு தொழிலுமுறை அல்லாத துடுப்பாடப் போட்டிகளிலும் பொதுவாக பாரம்பரிய சிவப்பு துடுப்பாட்டப் பந்து பயன்படுத்தப்படுகிறது. பல ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளில், வெள்ளை விளக்குகளின் கீழ் நன்கு தெரியும் வகையில் வெள்ளைப் பந்து பயன்படுத்தப்படுகிறது. மேலும் 2010 முதல், வீரர்களின் வெள்ளை ஆடைகளுடன் ஒப்பிடுவதற்கும், பகல்/இரவு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளின் போது இரவில் நன்கு தெரிவதற்கும் இளஞ்சிவப்பு நிறப் பந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன.[2] வெள்ளை, சிவப்பு, இளஞ்சிவப்பு நிறப் பந்துகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன என்றாலும், டென்னிஸ் பந்துகள் மற்றும் அதை ஒத்த பிற பந்துகள் பயிற்சி அல்லது முறைசாரா துடுப்பாட்டப் போட்டிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. துடுப்பாட்டப் போட்டிகளின் போது, பந்தின் தரம் குறிப்பிட்ட ஒரு அளவுக்கு மாறுகிறது. மேலும் அதை இனி பயன்படுத்த முடியாது என்ற நிலைக்கு மாறுகிறது. இதனால் போட்டி பாதிக்கபடலாம். துடுப்பாட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு மாறாக துடுப்பாட்டப் பந்தின் நிலையை மாற்றுவது என்பது போட்டியின் போது தடைசெய்யப்பட்டுள்ளது, மேலும் "பந்தை சேதப்படுத்துதல்" என்று அழைக்கப்படுவது பல சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது.

போட்டிகளின் போது துடுப்பாட்டப் பந்துகளால் காயங்கள், இறப்புகள் போன்றவை ஏற்பட்டுள்ளன.[3] துடுப்பாட்டப் பந்துகளால் ஏற்படும் ஆபத்துகளானது பாதுகாப்பு உபகரணங்களை அறிமுகப்படுத்துவதற்கு ஒரு முக்கிய உந்துதலாக இருந்தன.

அளவு

[தொகு]

பன்னாட்டு துடுப்பாட வதிகளின்படி பந்தின் அளவு குறிப்பிட்ட அளவு இருக்கவேண்டும் என்று நிர்ணயிக்கபட்டுள்ளது. இது ஆடவர், மகளிர், இளையோர் போட்டிகளுக்கு தகுந்தவாறு மாறுபடும். ஆடவர் துடுப்பட்டத்தில் பயன்படுத்தப்படும் பந்துகளின் எடை குறைந்தபட்சம் 155.9 கிராம் எடையும், அதிகபட்சம் 165 கிராம் எடையும் கொண்டிருக்கவேண்டும். மேலும் பந்தின் சுற்றளவு குறைந்தபட்சம் 2204 செண்டி மீட்டரும், அதிகபட்சம் 22.9 செண்டி மீட்டரும் இருக்கவேண்டும். இந்த பந்தின் சுற்றளவைக் கணக்கிட நடுவர்கள் பந்து அளவி என்னும் கருவியைப் பயன்படுத்துவர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Baseball vs. Cricket". Diffen.
  2. "Does the white ball behave differently?". BBC News. https://news.bbc.co.uk/sport1/hi/cricket/rules_and_equipment/4188060.stm. 
  3. "FACTBOX – Cricket-Deaths caused from on-field incidents". Reuters. 27 November 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துடுப்பாட்டப்_பந்து&oldid=4366659" இலிருந்து மீள்விக்கப்பட்டது